எல்லோரும் தனிமனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர்மட்டுமே சமூகஅக்கறை கொண்ட மனிதனாகத் தங்களைமாற்றிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் தியாகங்களைக் காணும் போதுதான் இந்தப்பூமிஅன்பினாலும் தியாகங்களினாலும் கட்டமைக்கப்பட்டது என்பதுபுரிகிறது.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 650 ஏக்கர்விளைநிலம், புகையிலை மண்டி, மஞ்சள்மண்டி, 100 ஆண்டுகளுக்கு முன்பே
40 லட்சம்முதலீடு கொண்ட சொந்தவங்கிஎனச்செழிப்பான ஒருகுடும்பம் இருந்தது. ஆனால், மக்களுக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள். வெளியில் அதிகம்தெரியாத இந்தக்கதையை'ஓயாமாரி’ என்றபெயரில் ஆவணப்படம் ஆக்கிஇருக்கிறார் 'சோளகர் தொட்டி’ நாவல்எழுதியச.பால முருகன்.
இந்தஆவணப்படம் டி.சீனிவாச அய்யர் மற்றும் அவருடைய மகன்ஜி.எஸ்.லட்சுமண அய்யர்ஆகியோரின் தியாகம் குறித்துப் பேசுகிறது. கடந்த2011-ம்ஆண்டுதுவக்கத்தில் லட்சுணஅய்யர்காலமானார். அவர்மறைவுக்குச் சிலமாதங்கள் முன்பாக அவரைச்சந்தித்து ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய சீனிவாச அய்யர்தலித்மக்களுக்கு அக்ரஹாரத்தில் உள்ளதன்வீட்டில் சமபந்தி உணவுஅளிக்கின்றார். இதனால், அக்ரஹாரம் அவரைஒதுக்கி வைக்கிறது. சீனிவாச அய்யரின் மகளைவாழா வெட்டியாகப் பிறந்தவீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது.
சீனிவாச அய்யர்கோபியில் இயங்கிவரும் கல்விநிறுவனங்களுக்கு 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கொடுப்பதுடன், தலித்மாணவர்களுக்காக கல்விநிறுவனங்களையும் இலவசவிடுதியையும் துவக்குகிறார். தலித்மக்களும் எல்லாரையும்போல் சுகாதாரமாக, சுதந்திரமாக வாழத்தன்னுடையசொந்தநிலத்தில் காற்றோட்டமான வீடுகள், அகலமானசாலைகள் எனகாலனிஅமைத்துக் கொடுக்கிறார்.
ராஜாஜிசுதந்திராக் கட்சிதுவங்கியபோது, காங்கிரஸ்காரர்களின் போக்குப் பிடிக்காத சீனிவாச அய்யர்சுதந்திரா கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கிறார். உடனேஎதிர்அணியினர் சீனிவாச அய்யரின் வங்கியில் முதலீடு செய்துஇருந்ததங்களின் மொத்தப் பணத்தையும் ஒரேநேரத்தில் திருப்பிக் கேட்கிறார்கள். அசராமல் தன்னுடைய மொத்தசொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து வங்கிக் கணக்கினைத் தீர்க்கிறார் சீனிவாச அய்யர். இதனால், அவருக்கு எதுவுமே மிஞ்சாமல் போகிறது.
தொடர்ந்து அவருடைய மகன் லட்சுமண அய்யருக்கு, ஊர்க்காரர்கள் பெண்தரமறுக்கிறார்கள். பழநியில் இருந்தசுதந்திரப் போராட்ட வீரர்ஒருவர்இவரைப்பற்றிகேள்விப்பட்டு, தன்னுடைய குடும்பத்துப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறார். சத்தியாக் கிரகப்போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமண அய்யர், அவருடைய மனைவிலட்சுமி அம்மாள் இருவரும் சிறைசெல்கின்றனர்.
பெல்லாரி சிறையில் இருந்தகாலத்தில் லட்சுமண அய்யர்மனிதமலத்தைஅள்ளும் வேலையைச் செய்கிறார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, குஜராத் சென்றுகாந்தியைச் சந்திக்கிறார். அப்போது காந்தி, 'தலித்மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கவேண்டும்’ என்றுலட்சுமண அய்யரிடம் உறுதிமொழி பெறுகிறார்.
1951, 1981- என இரண்டு முறைகோபிநகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற லட்சுமண அய்யர், பொதுக்கிணறுகளில் தலித்சமூகத்தினர் தண்ணீர் எடுக்கும் உரிமைக் காகப்பலவழிகளிலும் போராடுகிறார். தலித்கள்வாழும்பகுதியிலேயே கிணறுவெட்டிக் கொடுக்கிறார். நகராட்சி மூலம்அதிரடித் திட்டங்கள் தீட்டிவீடுகளில் இருந்தஉலர்கழிப்பிடங்களை, நீர்வழிக்கழிப்பிடங்களாக மாற்றிஇந்தியாவிலேயே மனிதமலத்தைமனிதன்அள்ளாதமுதல்நகராட்சியாக கோபியைமாற்றுகிறார். தேசத்தில் நிகழவேண்டிய நல்லமாற்றங்களைத் தன்னளவில் துவங்கி, தொடர்ந்து செயல்படுத்துகிறார் லட்சுமண அய்யர்.
இவற்றைஎல்லாம் மிகஅழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் மதியஉணவுசாப்பிட்டது குறித்து விசாரிக்கும் காட்சியில், சிறுவர்களை அழைத்து வயிற்றைக் காட்டச் சொல்லி, வயிறுபுடைப்பாக இருக்கிறதா எனச்சோதிப்பதன் மூலம்ஒருதாத்தாவின் கவிதைத்தனமான அன்பைவெளிப்படுத்துகிறார்.
ஈரோடுமாவட்டத்தின் அடையாளமனிதர்கள் என்பதில் தீரன்சின்னமலை, தந்தைபெரியார் என்பவர்களுடன் லட்சுமண அய்யரின் பெயரும் இடம்பெற வேண்டியது காலத்தின் அவசியம். அதற்குஇந்தஆவணப்படம்ஓர்அவசியமான ஆரம்பம்.
***
26.07.2012 ஆனந்த விகடன் - கோவை என்விகடனில் வெளியான விமர்சனக் கட்டுரை.
நன்றி : ஆனந்தவிகடன், ச.பாலமுருகன்.
தொடர்புக்கு : ச.பாலமுருகன் (94432-13501)
தொடர்புக்கு : ச.பாலமுருகன் (94432-13501)
-

