Thursday, 31 January 2013

கமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி… இல்ல கடிதம்

அய்யா ’கமல்’ சாமி,
வணக்கம்

அதெப்படி இன்னிக்கும் பாம்பேல உக்காந்துக்கிட்டு இனியொருமுறை பிரச்சனை வந்தால் நாடுவிட்டுப் போவேனு போவேனு திரும்பச் சொல்லமுடியுது...

அய்யா, நீ 100 கோடி போட்டு சினிமா எடுக்குற மவராசன், ஒரு தடவ வியாபாரத்துல பிரச்சனை வந்தவுடனே நாடு விட்டுப் போறேனு கூட சொல்லமுடியுது. உன்னால நாடுவிட்டு நாடு என்ன, நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ கூட போலாம், பணம் இருக்குது, பாஸ்போர்ட் இருக்குது, விசா கூட ஒடனே கெடச்சுடும்....

ஆனா, கெதியத்த நாங்க எங்க பிரச்சனைக்கு ஒரு மசுரும் புடுங்க முடியலையே  சாமி!
எங்களுக்கு கரண்டு இல்ல, 10 மணி நேரம் மெசின் எதும் ஓட்டுறதுக்கில்ல, தொழில் போச்சு... மழ பெய்யல, காவிரில தண்ணி வரல, கொஞ்சம் தண்ணியிருந்தாலும் அத பாய்ச்சுறதுக்கு கரெண்ட் எப்பவாச்சும் தான் வரும்... ஊட்டவுட்டு வெளியே வரமுடியல, மூனு வருசமா தோண்டுன ரோட்ட மூடக்கூட இல்ல.

சாயப்பட்டறை வெச்சதுல நிலம் போச்சு, தண்ணி கெட்டுப்போச்சு, சாயப்பட்டறைய நிறுத்தினதுல அவங்களுக்கு தொழில் போச்சு…. இதோ எங்கூர்ல செத்துப்போற 10 பேர்ல 2-3 புற்றுநோய்லதான் போறாங்க!

இதுமாதிரி எங்க பிரச்சனை ஒன்னா ரெண்டா! இதுக்கெல்லாம் உங்கிட்ட தீர்வு கேட்கல. உன் பிரச்சனை எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி, எங்க பிரச்சனை உனக்கு தெரியுமானுதான் கேட்கிறேன்.

முல்லைப் பெரியாறு சண்டை வந்தப்போ, எங்கவூட்டு முக்குல பேக்கரி வெச்சிருக்கிற  சாஜூவைக் கூட எதிரி மாதிரிதான் பார்த்தோம். ஆனாப் பாரு, சிவாகாசில வெடிச்சு சாகக் கெடந்தவங்களுக்கு மம்முட்டிதான் மருந்து கொடுத்தாராம்ல. மவராசன் நீ எதாச்சும் முல்லைப் பெரியாறுக்கு பேசுனியா அல்லது சிவகாசில ஒரு சிக்கல்னு வந்தப்போ காசு பணம் கொடுத்திருக்கியானு தெரியல. சிக்கலப்போ சொல்லிக் காட்டனும் சொல்லல. ஆனா எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்குது.

காவிரி காஞ்சுகெடக்குது, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி!

இப்ப பார்த்தா எங்காளுங்களே உன் படத்தத் தேடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும், பாண்டிக்கும் வண்டி கட்டுறாங்க. காசு இருக்கிற மவராசனுங்க நீ வெளிநாட்ல செட்டில ஆகி அங்கே மட்டும் படம் வெளியிட்டாலும் கூட வந்து பாப்பாங்களா இருக்கும்.

உனக்கு சினிமா வியாபாரம், அந்தம்மாக்கு அரசியல் வியாபாரம். நீ அந்த அய்யா இருக்கும்போது போயி சந்திச்சிட முடியுது. இந்தம்மா இருக்கையிலும் சந்திச்சிடமுடியுது. இதா… இப்பக்கூட நவம்பர் மாசம் சந்திச்சுப் பேசினப்ப இந்த படம் பத்தி எதாச்சும் பேசாமையா இருந்திருப்பீங்க!

இப்ப என்னடான்னா, எங்க ஊருல கெழடு கட்டைங்க கூட அன்னிக்கு ராத்திரி 10 மணி வரைக்கும் புள்ளத்தாச்சி பிரசவத்துக்கு போனமாதிரி டிவி முன்னால ஜட்ஜய்யா என்ன சொல்வாரோனு கொசுக்கடியில உட்கார்ந்திருந்தாங்க. அடுத்த நாள் நேத்து
 அரசாங்கம் ஆடுன ஆட்டத்தப் பார்த்து…..  இதென்ன இப்படியாயிப் போச்சாமேனு எழவு வீடு கணக்கா கெடந்து உம்பிரச்சனைக்கு முக்குக்கு முக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுத் திரியறாங்க...

படம் மட்டும் வந்துட்டா ஓட்டுப் போடப் போற மாதிரி ஒரு சனம் உடாம பார்த்துடறதுனு தீர்மானமா வேற இருக்காங்க! படம் வந்துட்டா காசு கெட்டிகவலை வேணாம். அதுக்காக பாவம் நஷ்டப்படனும்னெல்லாம் சொல்லல! என்ன கருமம் எங்காளுங்க எச்சுமுச்சா காசு குடுத்து டிக்கெட் வாங்குவாங்கநாலு நாள் பொறுத்து பொறுமையா பார்த்தாலும் அதே சினிமா தானேனு ஏனோ புரியறதில்ல. எல்லாத்திலேயும் அவசரம்தான்!

ஒரு சினிமா வியாபாரத்துக்கு பொங்குபொங்குனு பொங்குற எங்காளுங்க, எங்களோட கரண்டு பிரச்சனைக்கு, தண்ணி பிரச்சனைக்கு ஒரு சக மனுசனா நீ எப்பவாச்சும் வாய் தொறந்தியானு யோசிக்கக் கூட நேரமில்ல சாமி…. இங்கதான் டிவில என்னேரமும் இதையே பேசித் திரியறாங்களே! கரண்டு பிரச்சனைக்குப் பேசுனா கவருமெண்டு கோவிச்சுக்கும், காவிரி, முல்லைப் பெரியாறுக்குப் பேசினா கர்நாடகா, கேரளாவுல பப்பு வேகாதுன்னு உனக்குத் தெரியாமலா இருக்கும்.

அய்யா சாமி... என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு கலைஞன்... நீ எதாச்சும் நடிச்சு அது திரைக்கு வந்த பொறவு புடிச்சா ரசிப்பேன், புடிக்காட்டி நல்லால்லனு சொல்வேன்... மத்தபடிக்கு நாங்களும் மனுசங்கதான், நீயும் மனுசன்தான். நாங்க இன்னும் ஒருபடி மேல, கரண்ட், தண்ணியில்லாம இன்னும் மூச்சு தம் கட்டி, மானரோசத்துக்கும் பயந்து வாழ்ந்திட்டிருக்கோம். இதுல ஊட்ட விட்டு, ஊரவிட்டு ஓட எல்லாம் எங்களுக்கு நாதி இல்லை.

பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவதுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனு… எங்கேயும் போக வக்கில்ல…. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும்.

இந்தா இதுக்கும் கூட உன்னை ரொம்பப் புடிக்கிற நாலு பேரு, சரியாப் படிச்சும் படிக்காமலும் வந்து தையத்தக்கனு குதிப்பாங்க. குதிக்கிறது அவங்க சுதந்திரம். எனக்குப் பட்டதைச் சொல்றது என் சுதந்திரம்.

எனக்கும் உன் நடிப்பைப் பிடிக்கும். முடியும்போது இந்தப் படம் பார்த்தாலும் பார்ப்பேன். புடிச்சிருந்தா நல்லாருக்குனு நாலு வார்த்தை சொல்வேன்….. அம்புட்டுதான்…..

இனிமேலாச்சும் உனக்கு இப்ப வஞ்சனை நடந்த மாதிரி சராசரியான எங்களுக்கும் ஏராளமான வஞ்சனைகள் நடக்குதுனு உனக்கும் புரிஞ்சா சரி. எங்காளுங்க உன்னை நல்லாருக்கனும் சாதி மதம் ரசிகர் மன்றம் கடந்து நினைச்சதுல, கொஞ்சமாச்சும் திருப்பி குடு சாமி.

நன்றி

Tuesday, 29 January 2013

கீச்சுகள் - 30



கடந்தகாலம் நினைவில்மிதக்கட்டும், எதிர்காலம்நோக்கி நீந்துவோம்!

-                  

தங்கம்கிராமுக்கு 8 ரூபாஇறங்கினதையுமாதங்கம்விலை வீழ்ச்சினுஃப்ளாஸ் நீயூஸ்போடுவீங்க. உங்ககடமை உணர்ச்சிக்குஅளவேயில்லையாப்பா?

-                     

ஒரு கட்டுரை எழுதனும், ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறதுனு தெரியலைனு புலம்பின ஒரு எழுத்தாளர்கிட்டே....

கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்கனு சொன்னது ஒரு குத்தமா.... 

அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?

-




ஒட்டுமொத்தஉலகத்தையும் ஒருகுழந்தையிடம் கண்டுவிடமுடிகிறது 

-           


தமிழ்பண்பாட்டில் காதலேஇல்லை - ’விஞ்ஞானிராமதாஸ் # காமத்துப்பால் எழுதினதிருவள்ளுவர் மேலஒரு அவதூறுவழக்குப்போடு தலைவா?

-                     

ஃபேஸ்புக்என்பதை முகநூல்என மாற்றுவதுமொழிப்பற்று அல்ல... மொழி வெறி. ”சோறுஎன்பதைரைஸ் / ஒயிட்ரைஸ்எனமாற்றாமல் இருப்பதேமொழி ஆளுமை!

-                     

டிவிரியல் எஸ்டேட்விளம்பரத்துல வர்றபக்கிங்களுக்கு அங்கேயே6x2- இடம்ஒதுக்கிடுங்க. இதுகபேசுற பொய்யைபார்க்கும்போது வயிறுஎரியுது :(

-

எல்லாரிடமும்நிறைய இருக்கின்றனசொல்லவும், தவிர்க்கவும்!

-                     

படிக்காதவனைவிடபடித்தவன் நல்லாசிந்திப்பானு ஏன்எதிர்பார்க்கனும். படித்தவன்படித்தவைகளில் மட்டும்சிந்திக்கலாம், படிக்காதவனுக்குஎல்லை இல்லை

-                     

புதிதாய்ஒரு உலகம்உருவாக்கி, அதற்குள்தொலைந்துபோக எல்லாருக்கும்ஆசைதான்.

-                     

வாசிப்பவர்களைவிடகவிஞர்கள் அதிகம்இருப்பது போலவே, பார்வையாளர்களைவிட அதிகமாகசெய்தி தொலைக்காட்சிகள்# தமிழ்ச் சூழல்

-                     


அன்புச்சுத்தியலின் அடியில்எல்லாம் தகர்கிறது!

-                     

தப்புசெஞ்சா சாமிகண்ணைக் குத்தும்எனும் நம்பிக்கை(!) பல இடங்களில்இருந்தால் நல்லதென்றேதோன்றுகிறது!

-                     

மௌனத்திற்குள்புதையும் சொற்கள்சில நேரத்தில்உரமாகவும், பலநேரத்தில் விதைகளாவும்மாறிவிடுகின்றன.

-                     

பனங்காட்டுநரிசலசலப்புக்குஅஞ்சுமா அஞ்சாதாஎன்பதை எந்தப்பனங்காட்டு நரியிடம்நம்மாளுக கேட்டாங்கனேதெரியல!

-                     

பன்றிகளின்உணவுபன்றிகளுக்குஇழிவானதாக இருக்கமுடியாது!

-                     

நண்பனிடம்நீண்ட நாட்கள்கழித்து வாய்வலிக்கப் பேசினேன், அவன் காதுவலிப்பது குறித்துகவலையற்று. கரண்ட்இல்லை, காதில்வடிந்த இரத்தம்தெரியல

-

பாசமோ, பாதுகாப்போ தாராளமாஎன்னைய அண்ணானுகூப்பிட்டுக்குங்க, ஆனாபத்து வயசுஅதிகம் இருந்துட்டுஅண்ணானு கூப்பிடாதீங்கஅக்காக்களே!

-

நோயைவிடநோய் குறித்தஅச்சம் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கிறது# வளர்ச்சி Vs வீக்கம்

-
உலகம்அழிந்தால் சாவதுகுறித்து பயமில்லைஎன்போருக்கு சொல்லவிரும்புவதுசாவுகுறித்து பயமில்லையென்றால்நீங்கள் எப்போதேஇறந்திருப்பீர்கள்

-

உலகின்ஆகக்கொடும் விளம்பரம், கண்ணீர் அஞ்சலிபோஸ்டர்களில் பதியப்படும்பெயர்கள்!

-

கடந்துவந்திருக்கிறேன். கடந்துபோக வேண்டும்!

-

எல்லாவம்பு தும்புகளுமேநாம் செய்யவேண்டியநம் வேலைகளைவிட்டுவிட்டு நாமேஇழுத்துப் போட்டுக்கொள்வதுஎனும் ரகசியம்தாமதமாகவே புரிவதுஏன்?

-                      

 

எல்லாத்தவறுகளையும் சரிசெய்யஒருசரிபோதுமானதாகஇல்லை. எல்லாசரிகளையும் தவறுகளாக்கிடஒரு தவறுபோதுமானதாக இருக்கின்றது!

-                     

பெரும்முயற்சியெடுத்து படிக்கும்பாடங்களை விட, சட்டென ஒருநிகழ்வு கற்றுத்தரும்பாடம் ஒருபோதும்மறப்பதில்லை!

-                     

மலம்கிடந்தால்ஓவர்சீன் போட்டுமுகம் சுழித்துப்போவோர் உடலுக்குள்ளும்கொஞ்சம் மலம்இருக்கிறது என்பதுஏனோ புரிவதேயில்லை!

-                     

முதல்நாளேபடம் பாத்து(முக்கால்வாசிக்கு) மூக்குஉடைபடுற தியாகிகளுக்கு, தேறுற படத்தைஆறஅமர பாக்குறசோம்பேறிகள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்

-                     

நான்வாதம் செய்யல, விவாதம் தான்செய்றேனுசொல்லிட்டு நம்கருத்தை முன்வைத்து வாதத்தைமுன்னெடுத்துச் செல்வதுஎளிதாக இருக்கின்றது.

-                     

எல்லாவற்றையும்சொல்லித்தான்புரியவைக்கவேண்டும், ஈடுசெய்யவேண்டும் என்பதில்லை.

-                     

நிலாவில்காய்கறித் தோட்டம்அமைக்க சீனாதிட்டம் # அப்போ, இனிமே பாட்டிமசால் வடைசுடுறதுக்கு சிரமப்படவேண்டியதில்லை!

-                     

7 கோடி இந்தியர்களுக்குவேலையில்லை: மத்தியஅரசு # ஏழரைக்கோடி கடையிலஆட்கள் தேவைனுபோர்டும் போட்டிருக்கான்.

-                     

பெற்றோர் இருக்க பிள்ளை இறந்த சோகம்குறித்து அருகிலிருக்கும் இருள் அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிலர் தங்கள் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோ நினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! :(

-
                     
பின் இரவின் மொட்டைமாடித் தனிமையில் ஏதோ ஒரு கைபேசியிலிருந்து ஏற்ற இறக்கமாய் காற்றில் மிதந்து வரும்மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்உணர்த்துகிறது சொர்க்கம் இப்படியும் இருக்கும் என்பதாய்!

-                     

மனதிடம்இது வேண்டும், இது வேண்டாம்என என்னால்தீர்மானிக்க முடிவதில்லை. சூழல் அதைத்திறம்படத் தீர்மானிக்கின்றது.

-                     



வெளியேறும்வழி தெரியாதஎல்லா உள்நுழைவும் சூதாட்டமே!

-                  

எங்களைசீனாவுக்கு விரட்டுகிறார்மன்மோகன் - ரத்தன்டாடா# அவரு எங்களையும்தான்விரட்டுறாரு, ஆனாஎங்கேனுதான் எங்களுக்கும்அவருக்கும் புரியல

-                     

"பெண்கொசுதான் கடிக்கும்" என்பதைக் கண்டறிந்துஉலகுச் சொன்னவன், ஒரு கணவனாகத்தான்இருந்திருப்பான். :)

-                     

 
பலஆண்டுகளுக்குப்பிறகு கேம்லின்மை பேனாபிடிக்கும் வாய்ப்பு. எளிமையென பால்பாயிண்ட்பேனாவில் தொலைத்தஎழுத்தின் பழையவடிவம் கொஞ்சம்கண்டேன்

-                     

மூளையில்'டோபோமைன்' வேதிப்பொருள்சுரக்கும்போது ஏற்படும்கிளர்ச்சி, சந்தோசமுமேஇணைய சமூகவலைதளத்தில் அடிமையாககாரணம் #தப்புநம்முதில்ல

-                     



துரோகங்களில்தோற்பது மனிதர்கள்அல்ல. மனிதர்களைநம்பிய நம்பிக்கைதான்! 

-                 

உலகின்செல்வாக்கு மிக்கவர்கள்பட்டியலில் 25 வதுஇடத்தில்ஃபேஸ்புக்மார்க் ஜூகர்பெர்க்” # இதெல்லாம் நாங்ககடுமையா உழைச்சுபோட்ட தர்மம்

-                     

நாலுட்விட் போட்டதுலஎல்லாக் கோபமும்(!) நீர்த்துப்போச்சுப்பா. இப்பஒரு பிரச்சனையும்இல்ல # இல்லாட்டிமட்டும் என்னத்தகிழிச்சி... தைச்சு

-                  

கர்நாடகஅணைகளில் மொத்தம்எவ்வளவு தண்ணீர்உள்ளதுஎன்பதைக்கூடதெரிந்துகொள்ள கையாலாகாதவல்லரசாக இந்தியாஇருப்பதில் பெருமிதம்கொள்வோம்.

-                     

என்கற்பனைக்குநிகரானஒரு நல்லவனையோ, கெட்டவனையோ இதுவரைக்கண்டதில்லை!

-                     

அப்போ, என்னை ஏன்பெத்தீங்க?” ஒருமுறையேனும்பிள்ளைகள் கேட்காவிட்டால், பெற்றோரின் வளர்ப்பில்ஏதோ குறைஇருக்கிறதென்று அர்த்தம்! :)

-                     

ஒரு அற்பக் கொசுவிடம் இருந்து தப்பிப்பதற்காக 
கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை  .......................... என எத்தனையோ பயன்படுத்திய பிறகும் 
இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))

-



ஒருதவறான புரிதலுக்குவிநாடிப் பொழுதுபோதும். விளக்கம்பெற / தரஒரு யுகம்தேவைப்படுகிறது!

-
 

வீட்டுவாசற்படி கடக்கையில்சாக்கடைக்கு முகத்தைச்சுழிப்பதில் துவங்குகிறதுஅந்த தினத்திற்கானசகிப்புத்தன்மை!

-                   

உன்னைநீயாகவும், என்னைநானாகவும்..... # இப்போதைக்கும்எப்போதைக்கும்! :)

-                     

மரணம்மட்டுமே ஒருவனுடையகுற்றங்களை மற(றை)க்கச்செய்துபுனிதனாக்கும் என்றால்கசாப்பும்புனிதனே!

·                      

இது படிச்சீங்களா?