Monday, 12 October 2009

வாழ்கிறோம்

திகாரிகளுக்கு அள்ளிக்கொடுத்தாயிற்று
தீபாவளிக்கு சல்யூட் செய்யும் கூர்க்காவுக்கும்,
சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
வீட்டில் இல்லைனு சொல்லிடு...

தொடர் வண்டி பயணத்தில்
கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல்
காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...

40 comments:

  1. /கூர்க்காவுக்கும்,
    சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
    வீட்டில் இல்லைனு சொல்லிடு.../

    அது அது.
    /தொடர் வண்டி பயணத்தில்
    கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
    குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல்
    காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது/

    அட! நான் தினமும் பார்க்கும் அவலம் கதிர்.

    சின்னச் சின்னதாய் இரண்டு மணிகள்.

    ReplyDelete
  2. என்னா சிந்தனை!12 October 2009 at 04:15

    என்னா சிந்தனை!

    ReplyDelete
  3. ப்ச்.. என்ன செய்ய?

    ReplyDelete
  4. சிக்னலோரத்தில் சிறு குழந்தையேந்தி பிச்சை கேட்கும் போது மனதை பிழியும், இருந்தாலும் அவர்களுக்கு பிச்சையிட மாட்டேன். காரணம், அது அவர்கள் குழந்தையில்லை.

    அதட்டிக் கேட்பவனிடம் கொடுக்கப் பழகிவிட்டோம் என்ன செய்ய

    ReplyDelete
  5. இதயம் இனிக்கிறது....
    கண்கள் பனிக்கிறது...

    ReplyDelete
  6. என்றாலும் வாழ்கிறோம்.
    அப்படிப் பழகிவிட்டோம்.

    ReplyDelete
  7. //சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
    வீட்டில் இல்லைனு சொல்லிடு..//

    எங்க முதலாளியும் இதைதான் செய்கிறார்....

    //தொடர் வண்டி பயணத்தில்
    கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
    குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல் காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...//

    சரிதான்...அவன் கை நீட்டுவதை கண்டும் காணாமல் நம் பயணமும் தொடர்கிறது மனிதாபிமானத்தை நசுக்கிவிட்டு....

    நல்ல சிந்தனை....

    ReplyDelete
  8. ///காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது///

    ;;((

    ReplyDelete
  9. //காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...
    //

    எப்படி..

    இதை படித்துவிட்டு தீபாவளிக்காவது கவனிப்பார்களா?

    அருமை கதிர்...

    பிரபாகர்.

    ReplyDelete
  10. என்ன அருமையான பார்வை கதிர்.போற போக்கில் சொல்லும் அழகு-வலிக்குது...வலிச்சுக்கிட்டேவும் இருக்கு.

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு. மனசாட்சியை அறையும் கேள்விகள் கொண்டிருக்கும் வரிகள்.

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு

    ReplyDelete
  13. நன்றி @@ வானம்பாடிகள்
    (தினமும் நடப்பதுதானே)

    நன்றி @@ என்னா சிந்தனை!

    நன்றி @@ பழமைபேசி
    (வாங்க மாப்பு)

    ReplyDelete
  14. உள்ளத்தை தொட்ட இரு வரிகள்.

    ReplyDelete
  15. நன்றி @@ நர்சிம்

    நன்றி @@ நவாஸுதீன்

    நன்றி @@ பின்னோக்கி
    (அதட்டிக் கேட்பவனிடம் கொடுப்பது வசதி)

    நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

    நன்றி @@ அப்பாவி முரு
    (இதயம் இனிக்கிறதா)

    ReplyDelete
  16. அருமை என வெறுமனே வாழ்த்தக் கூசுகிறது
    ஆழியுணர்த்தும் சிறுதுளி.

    ReplyDelete
  17. நன்றி @@ இய‌ற்கை

    நன்றி @@ ஹேமா
    (ஆமாங்க)

    நன்றி @@ பாலாஜி
    (மிகச் சரியான பகிர்வு)

    நன்றி @@ ஜெரி

    ReplyDelete
  18. கண் விழித்து
    காவல் செய்யும்
    கூர்க்காவிற்கு
    ரெடிமேடு பதில்
    “கல் ஆவோ”

    ReplyDelete
  19. நன்றி @@ ஜீவன்

    நன்றி @@ பிரபாகர்
    (தீபாவளிக்குக்கு கொடுத்தால் நன்றுதான்)

    நன்றி @@ ராஜாராம்
    (போகிறபோக்கில் நடக்கும் சம்பவம்தானே)

    ReplyDelete
  20. நன்றி @@ மாதவராஜ்

    நன்றி @@ T.V.R

    நன்றி @@ நிலா

    நன்றி @@ காமராஜ்
    (ஆழியுணர்த்தும் சிறுதுளி, ஆஹா... என்ன அற்புதமான வார்த்தைகள்)

    நன்றி @@ தண்டோரா
    //கண் விழித்து
    காவல் செய்யும்
    கூர்க்காவிற்கு
    ரெடிமேடு பதில்
    “கல் ஆவோ”//
    (இது அருமையோ அருமை)

    ReplyDelete
  21. அருமை கதிர்.

    அன்றாடம் பார்க்கும் அவலங்களை இதை விட எளிமையாக சொல்ல முடியுமா? தொடருங்கள்!!

    ReplyDelete
  22. கதிர்,

    படித்ததும் மனசுக்குள்ள ஒரு வலி வருதுங்க... அது உங்க எழுத்தின் வெற்றி.. சமூக அவலத்தை சொல்லி அடிக்கும் மற்றுமொரு சாட்டையடி போன்ற இடுகை உங்களிடமிருந்து.. தொடரட்டும் உங்கள் பணி... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
  23. நல்லா இருக்குங்க கதிர்

    ReplyDelete
  24. நல்ல கவிதைக்கும் எதிர் ஒட்டு போடுறாய்ங்களே இப்பிடி ஏனுங்க சாமீகளா? பொறாமையா? .....காப்பா?
    புடிக்கலைன்னா பொத்திட்டு போகலாம்...களவாணிப்பயலுகளா...இல்லாட்டி ஏன் பிடிக்கலைன்னாவது சொல்லிட்டு எதிர் ஓட்டு போடுங்கடி மாப்ளைகளா...

    வாழு இல்ல வாழவிடு

    நல்லா எழுதுறவய்ங்கள ஊக்கப்படுத்தாட்டினாலும் இப்பிடி மானங்கெட்டத்தனமா நடந்துகிடாதீங்கடி...மாப்ளைகளா...

    ReplyDelete
  25. நல்லாயிருக்கு நண்பா... நம்மை நாமே கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  26. என்னஙக இது அஞ்சு நெகடிவ் ஓட்டு?

    ReplyDelete
  27. நன்றி @@ செந்தில்
    (தவிர்க்க முடிந்தாலும், நாம் தவிர்க்க விரும்பாதவைகள்தானே இவை)

    நன்றி @@ ராசுக்குட்டி
    (இந்த உணர்வு வந்துவிட்டால் வலி மறைந்து போகும்)

    நன்றி @@ கவிதை

    நன்றி @@ வசந்த்
    (கையறு நிலை இல்லை நண்பா, மனம் வராத நிலை அவ்வளவே)


    நன்றி @@ ப்ரியா

    நன்றி @@ ஞானசேகரன்
    (விடையும் நம்மிடமே இருக்கிறது)

    நன்றி @@ நாகா
    (இஃகிஃகி)

    ReplyDelete
  28. அருமை. ஆனால் நான் அப்படி இல்லை. நின்று கொடுத்துவிட்டுதான் செல்வேன். . தராதவர்களுக்கு வலிக்கட்டும். உங்கள் சாட்டையடி

    ReplyDelete
  29. சிந்தனை மிக நன்று. வாழ்க

    ReplyDelete
  30. நன்றி @@ வாத்துக்கோழி
    (பாராட்டுகள்)

    நன்றி @@ கிறுக்கல்கள்

    நன்றி @@ Ashok

    ReplyDelete
  31. நல்லாயிருக்கு!

    "அதிகாரிகளுக்கு அள்ளிக்கொடுத்தாயிற்று"

    கேட்கும் பொழுதும்,
    கொடுக்கும் பொழுதும்,
    அதிகாரிகளின் முகங்களை
    வர்ணியுங்களேன்.

    ReplyDelete
  32. வானம்பாடிகள் said...

    சின்னச் சின்னதாய் இரண்டு மணிகள்.//

    கவிதைகளைப் பற்றி நான் சொல்ல நினைத்த அதே மணியான வார்த்தைகள்,கதிர்.

    ReplyDelete
  33. அழகான கவிதை என்று சொன்னால் இந்தக் கவிதைகளின் அழுத்தம் கெட்டுப்போய்விடும். வேறென்ன சொல்ல?

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete

இது படிச்சீங்களா?