Friday, 27 November 2009

யாரோ ஒருவனாக...

வளர்வதும், தேய்வதும் மாற்றமே. வாழ்க்கையில் ரசிக்கத்தக்க மாற்றம் என்பது இருக்கும் நிலையில் இருந்து ஒரு அங்குலம் அளவேனும் உயர்வதுதான். அப்படி உயர்வை நோக்கிய மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், இதுவரை செய்து கொண்டிருந்த செயல்களை, இதுவரை செய்தது போலவே தொடர்ந்து செய்தால் உயர்வு என்பது வெறும் கானல் நீரே. செய்து கொண்டிருந்த செயல்பாடுகளில் இருந்து, இயங்கிக் கொண்டிருந்த தளத்தில் இருந்து புதிய செயல்களைத் துவக்குவதும், புதிய தளத்தில் தடம் பதிப்பதும் மிக மிக முக்கியம்.

ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான். சில நேரங்களில் தடம் தீர்ந்துபோய் முட்டுச் சந்தில் நிற்பது போல் உணர்வதும் உண்டு.







அதே சமயம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது.

இது மாதிரியான நேரங்களில் மிக முக்கியத் தேவையாக இருப்பது, மிகத் தெளிவாக அலசும் குணம்.




  • செயலைத் துவங்கும் காரணம்

  • செயல் குறித்த அறிவு

  • முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

  • வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

  • எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)


இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.



செயலை எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதன் பொருட்டு துவங்குகிறோமோ, அதை ஒருவேளை நாம் தொடங்காவிட்டால், அந்த செயல் துவங்கப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை அலசி ஆராய்தல் மிக முக்கியம்.


ஒரு வேளை நாம் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விட்டால், வேறு யாரும் அதை செய்யவே மாட்டார்கள் எனில், ஒன்று அந்தக் காரியம் நிறைவேற்ற முடியாத அளவு கடினமானதாக இருக்கும் அல்லது அந்த காரியத்தால் மிகப் பெரிய பலன் ஏதும் இருக்காது.

அதே சமயம் நாம் தயங்கித் தவிர்க்கும் காரியத்தை, இன்னொருவர் நிச்சயம் துவங்க வாய்ப்புண்டு என்பது உறுதியாக தெரிந்தால் அந்த காரியத்தை தவிர்ப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.

ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”

(விகடன் முகப்பிலும், இளமை விகடனின் சமூகம் பகுதியிலும் வெளிவந்த கட்டுரை)

27 comments:

  1. ஏனெனில்...
    “முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

    “அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”
    //
    உண்மையான வார்த்தைகள் கதிர் ....

    ReplyDelete
  2. இதை சுயபரிசோதனை என்று சொல்லலாமே. ஒரு பூவின் மலர்ச்சி போல் அழகானது, உன்னதமானது - மனிதனின் வளர்ச்சி. வளர்ச்சி, வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சொன்ன அணுகு முறை அவசியம் தேவை. சிறந்த இடுகை.

    ReplyDelete
  3. ரைய்டுங்க :)

    ReplyDelete
  4. ந‌ல்ல‌ ப‌திவு

    //கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது//

    ஆனாலும் அதையெல்லாம் க‌ட‌ந்து முய‌ற்சி எடுத்த‌வ‌ர்க‌ள் தான் வாழ்க்கையில் உய‌ர்ந்த‌ நிலைக்கு செல்கிறார்க‌ள்

    ReplyDelete
  5. சுய முன்னேற்றாத்திற்கு மிக அவசியமான கருத்துக்கள். மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  6. நல்ல இடுகை கதிர்,வழக்கம் போலவே. :-)))))))))

    ReplyDelete
  7. மிக நேர்த்தியான அழகான சிந்தனைகள் கதிர்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. சரியாதான் சொல்லி இருக்கீங்க...!

    ReplyDelete
  9. //“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

    தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்...

    ReplyDelete
  10. //ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான்//

    உண்மையான கருத்துக்கள்.

    இளைஞர்களுக்கு (அனைவருக்கும்கூட) தேவையான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  11. சரியான வழிகாட்டுதல் அண்ணா

    -யாரோ ஒருவன்

    ReplyDelete
  12. தேவன்மாயம்28 November 2009 at 00:20

    ஏனெனில்...
    “முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//


    நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!

    ReplyDelete
  13. //புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை. //

    தன்னம்பிக்கையுடன் "யாரோ ஒருவனாக" நானும்...

    அருமையான கட்டுரை. இன்னும் விதையுங்கள் நம்பிக்கையை....

    ReplyDelete
  14. கதிர்,எப்பவும் போல நம்பிக்கை தரும் சிந்தனைத் தெறிப்பு.

    ReplyDelete
  15. //“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

    “அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

    இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

    மாற்றம் தானாக வரும்.

    ReplyDelete
  16. நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  17. கட்டுரை முழுதும் அதீத positive energy தெறிக்கிறது.
    great job கதிர்.

    ReplyDelete
  18. //“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//

    உண்மைதான்...ஒரு புது உற்சாகம் தந்து விடீர்கள்...நன்றி...

    ReplyDelete
  19. மிக அருமை கதிர்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. //ஏனெனில்...
    “முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

    “அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

    நல்ல தன்நம்பிக்கை கொடுக்கும் இடுகை... நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  21. அருமை கதிர்!

    கொஞ்சம் பொறுங்க, ஐயாவோட கவிதையை புத்தகமா போடற ஐடியாவில இருந்தேன். இப்போ உங்க கட்டுரைகளையும்.... நிறைய எழுதுங்கள்...

    பிரபாகர்.

    ReplyDelete
  22. அருமையான கட்டுரை

    ///“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//


    ந‌ச்

    ReplyDelete
  23. அன்பின் கதிர்

    அருமையான ஊக்கமKஇக்கும் இடுகை. தன்னம்பிக்கையினை விதைக்கும் இடுகை. ஒரு செயல் துவங்கும் முன் எவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும் எனக் கூறும் இடுகை

    நன்று நன்று நல்வாழ்த்துகள் கதிர்

    ReplyDelete
  24. செயலைத் துவங்கும் காரணம்

    செயல் குறித்த அறிவு

    முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

    வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

    எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)




    இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.//

    சரியா சொன்னீங்க... தன்னம்பிகை நிறைந்த வரிகள்.

    ReplyDelete
  25. நல்ல முன்னேற்றப் பாதைக்கான கட்டுரை. நான் தங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கின்றேன். பலரும் பின்னூட்டம் இட்டு பாராட்டுவதால் நான் பின்னூட்டம் இடுவதில்லை. எல்லாரும் சொல்வதை வீட நான் என்ன வித்தியாசமாக இருக்கப் போகின்றது என்பதுதான் காரணம். அதற்க்காக மன்னிக்கவும்.

    நான் தங்களின் பதிவின் இரசிகன் என்ற முறையில் விருது ஒன்றை அளித்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

    ReplyDelete
  26. மனசிலே போட்டுகிறேன்

    ReplyDelete

இது படிச்சீங்களா?