Thursday, 12 November 2009

சொல்ல மனம் கூசுதில்லையே...






றுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

சுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

க்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என


52 comments:

  1. //நசுங்கும் கரும்போடு
    இஞ்சி ஒருதுளியும்
    எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
    குடித்த கரும்புப் பால்...//

    சொட்டான் போடுகிறது நாக்கு

    ஊரில் இயற்கை கரும்புதோட்டத்தில் குடித்த சாறு இங்க டப்பால அடைச்சு விக்குறானுவ...
    செயற்கையா..

    இது மாதிரியே இனி வாழும் வாழ்க்கை எல்லாமே செயற்ககையா போயிடுமோன்றா பயமா இருக்கு கதிர்,..

    ReplyDelete
  2. அன்பு கதிர்,

    எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒற்றைவரியாய் அழகாய் இருக்கிறது என்று சொல்வதில் ஒடுங்கி விடுமா என் சிலாகிப்புகள் என்றால் இல்லை. மேலும் ஏதாவது வரிந்து கட்டி சொல்ல ஏதுவாய் விரிகிறது இந்த கவிதை. இழப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது எல்லா இழப்புகளும் ஒன்று தானா என்பது தெரியவில்லை.
    எதிலும் பங்கு தராமல், என் மகளிடம் சொல்கிறேன் எதுவானாலும் உனக்காக எப்போதும் செய்வேன் என்று” கடைசிப் பத்தியில் எல்லாவற்றையும் சொல்லும் இந்த பாங்கு வாய்க்க நிறைய பழக வேண்டும் நான்.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  3. /இதில்...
    எதிலும் பங்கு தராமல்
    என் மகளிடம் சொல்கிறேன்
    எதுவானாலும் உனக்காக
    எப்போதும் செய்வேன் என/

    அன்பான தகப்பனின் பாவமன்னிப்பாய்த் தெரிகிறது. நானும் இப்படி நினைத்ததுண்டு. இவ்வளவு அழகு கவிதையாக இல்லை.

    அருமை கதிர்.

    ReplyDelete
  4. உண்மைதான் ஒவ்வொரு கிரமத்துக்காரர்களும் அன்பவித்த பல விஷயங்கள் இக்காலத்து குழந்தைகளுக்கு கிட்டாத எட்டா கனிதான். அதை இவ்வளவு நயம்பட உரைத்திருப்பது அழகு. அதை விட படம் அருமை. நன்றி கதிர்.

    ReplyDelete
  5. //செடியோடு பிடுங்கி
    ஓடுந்தண்ணீரில் அலசி
    தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
    தின்ற வேர்க்கடலை...//

    //தேன் எடுக்க தீ மூட்டி
    மூச்சடைக்க முகம் மறைத்து
    கூடு பிய்த்தெறிந்த கையின்
    புறத்தில் நக்கிய தேன் துளி...//

    அது ஒரு அழகான நேரம்.

    ம்ம்ம்...ரசித்ததெல்லாம் கிராமத்து வாசமே. எப்படி பங்குதரமுடியும் உங்களது மகளுக்கு....

    அனுபவக் கவிதை....அழகு....

    ReplyDelete
  6. ரசனை மிகுந்த வரிகல்.


    இயலாமையின் வெளிப்பாடு அருமை கதிர்

    ReplyDelete
  7. எதிர்வரும் காலங்களில் இவை கன்வுதான். அன்பின் வெளிப்பாடு அழகு.

    ReplyDelete
  8. நீங்க இத எல்லாம் குடுத்தாலும் பசங்க சாப்டமாட்டாங்க.. பீட்சா, பர்கர்ன்னு அடுத்த தலைமுறை போய்டுச்சு.

    ReplyDelete
  9. நல்ல பதிவு கதிர். என் குழந்தைக் காலங்களை நினைவு படுத்திய கவிதை. நன்றி.

    ReplyDelete
  10. கோக் குடி..குதுகளி..

    ReplyDelete
  11. மண் மணக்குது , கொஞ்சம் ஏக்கமும் !

    ReplyDelete
  12. //நசுங்கும் கரும்போடு
    இஞ்சி ஒருதுளியும்
    எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
    குடித்த கரும்புப் பால்...//

    இது போல் குடித்து பல வருடமாயிற்று..சென்னையில் கரும்புக்கு பதில் தண்ணீர் கலந்து தான் கிடைக்கிறது..

    வானம்பாடிகள் ஐயா சொன்னது போல்
    //அன்பான தகப்பனின் பாவமன்னிப்பாய்த் தெரிகிறது.//

    ReplyDelete
  13. அட்டகாசம் சார்!

    பால்யத்தை தொலைத்துவிட்டு சிறுவயதிலேயே பெரியமனிதத்தனம் வந்து விடுகிறது இப்போதைய குழந்தைகளுக்கு. அதற்கு இதுபோன்ற அனுபவங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறாது இருப்பதுவும் ஒரு காரணமோ?

    ReplyDelete
  14. கதிர்.. இதைவிட அழகாக நாம் இழந்ததைக் கூற முடியுமா?

    உங்கள் மகள் புரிந்துகொள்வாள் உங்கள் மீது தவறில்லையென்று

    ReplyDelete
  15. அழகாக சொல்லியிருக்கீங்க..

    சொல்லிய விசயம் எல்லாம் நானும் என் சிறிய வயதில் அனுபவித்ததுதான்.

    இப்போது இதில் ஒன்று கூட இல்லை என்பதுதான் சோகமானது.

    ReplyDelete
  16. //இதில்...
    எதிலும் பங்கு தராமல்
    என் மகளிடம் சொல்கிறேன்
    எதுவானாலும் உனக்காக
    எப்போதும் செய்வேன் என..///

    கதிர்,

    தொலைத்த கணங்களை திருப்பும் வரிகள். நம் மழலைகள் வாய்ப்பை நாகரிகம் என்னும் பெயரில் புதைத்து விட்டோம்.

    அருமை!

    ReplyDelete
  17. Kathir,
    You brought back the good old golden days to ponder. Feel nostalgic. We have to do something to our children so that they will remember the childhood. Good one. Appreciate

    ReplyDelete
  18. //வறுத்த எள்ளும்
    நாட்டுச்சக்கரையும்
    சேர்த்து இடித்துப் பிசைந்த
    எள்ளு உருண்டை..//

    ஆமாங்க சாப்பிட்டிருக்கேன். இப்படி எத்தனை எத்தனி. ஹூம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. கதிர் நீங்க பட்டியலிட்ட பண்டங்களுக்கு இணையா நகரில் ஏதும் இல்லை.
    இப்படிக்கவிதையும் கூட. அட அந்த மாட்டுவண்டி மோனோ கலர் படு அசத்தல்.
    ராகவன் சொன்னதுபோல முடிக்கிற இடத்தில் அடி நச்சுன்னு விழுகிறது.

    ReplyDelete
  20. இதெல்லாம் இன்னும் கிடைக்குதா!?

    ReplyDelete
  21. அழகாக சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  22. இன்றும் கிராமங்களில் கிடைக்கலாம்..
    ஆனால், நகரத்தில் (நரகத்தில் :) ) குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை..
    போகோ சானலும், டைரி மில்க் சாக்லேட்டும் அவர்களுக்கு நாம் வழி காட்டியவைகள்....
    கிராமத்தை விட்டு தொலை தூரம் வந்த நாம்தான் திரும்பி பார்ப்பதில்லை...
    நம் பிள்ளைகள் கேட்கும் சானலும், பானங்களும் அங்கே கிடைக்காது..
    விடுமுறை காலங்களில் கிராமங்களை அவர்களுக்கு காட்ட வேண்டும்.. நிச்சயம் அவர்களுக்கும் பங்கு கிடைக்கும்...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  23. கதிர் இழந்தவைகளித் தோண்டி எடுத்த வரிகள்.ஆனால் இன்றைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கைதான் சிறந்தது என்கிறார்கள்.எங்கள் வாழ்வை ஊத்தை என்கிறார்களே !

    ReplyDelete
  24. //வறுத்த எள்ளும்
    நாட்டுச்சக்கரையும்
    சேர்த்து இடித்துப் பிசைந்த
    எள்ளு உருண்டை..//

    நல்ல பதிவு

    ReplyDelete
  25. கடைசி நான்கு வரிகளில் நின்னுட்டீங்க கதிர்.

    //நாரை நடக்கும் குளத்தில் நண்டு பிடித்ததில்லை,
    முங்கு நீர் போட்டியில் மூச்சடைத்ததில்லை,
    கண் பறித்து வெள்ளமிட்டு வெடி தேங்காய் தின்றதில்லை,
    இருந்தாலும் சொல்கிறாய்
    ஐ ஏம் லிவிங் என்று.!//

    ஆனந்த விகடனில் சில வருடங்களுக்கு முன்பு தாயம்மா என்பவரால் எழுதப்பட்டு வெளியான கவிதை. உங்களின் கவிதையைப் படித்ததும் எனக்கு அந்த கவிதையும் நினைவுக்குள் வந்தது.

    ReplyDelete
  26. சூழியல் அழிவைச்சொல்லும் உலகம்யாவுக்குமான கவிதை.
    நன்றி!

    ReplyDelete
  27. //கடைசி நான்கு வரிகளில் நின்னுட்டீங்க கதிர்.//

    இல்லையே, உட்கார்ந்து தானே டைப் அடித்தார்!

    ReplyDelete
  28. களங்கமில்லாத கிராமத்து வாழ்க்கை ......நினைத்து பார்க்கிறேன் நெஞ்சம் இனிக்கிறது. மண் வாசனையுடன் , ஒரு இனிய பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  29. :((((...! ஏங்கிப் போயிற்று மனசு..! கவிதை அழகு!

    ReplyDelete
  30. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  31. இவையெல்லாம் இது போல் படித்து அறிந்தால் அன்றி நிகழ்வுகள் இனி அறிதே...

    ReplyDelete
  32. தொடக்கத்திலேயே படித்து விட்டு எப்படி உள்வாங்குவது என்று தெரியாமல் நகர்ந்து விட்டேன். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் உள்ளே உழல வைத்து இந்த சிந்தனைகள் நாகா வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "படைப்பாளிக்கு வாசிப்பாளனின் அனுபவம் கிடைப்பது இல்லை". ஒவ்வொரு முறையும் தேன் கலந்து மருந்தை கொடுத்துக்கொண்டுருக்கும் வித்தையை உங்கள் மூலம் கண்டு உள் வாங்கிக்கொள்கிறேன்.

    முடிவான கடைசி நான்கு வரிகள் முற்றிலும் பொருத்தம் என்றாலும் அதற்கு முந்திய அத்தனை வரிகளும் தான் இந்த நேர தாமதத்தை தடுமாற்றத்தை எனக்கு தந்தது கதிர். ஓளி வீசி பறப்பதன் அர்த்தமும் இது தான்.

    ReplyDelete
  33. அருமையாக எல்லோருடைய மனதிலும் பழைய கிராமத்து வாழ்க்கையை கொண்டு வந்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. நன்றி கதிர்

    குறைந்த பட்சம்
    இதையெல்லாம் வாசிச்சு
    ரசிக்கிற அனுபவமாவது
    கிடைச்சது.......

    ReplyDelete
  35. ம்ம்ம்...மிஞ்சுவது பெருமூச்சுதான்.

    கவிதை அற்புதம்!

    ReplyDelete
  36. கவிதை நல்லா இருக்கு.

    ஆனா முடிவில் எனக்கு சற்றே உடன்பாடில்லை. சிறு வயதில் உடன் இருந்தவர்க்கு எதுவும் தராமல் உண்டாலோ அல்லது இப்போது சேகரிக்கும் எதுவும் அவர்களுக்கு தராமல் உண்டாலோ தானே கூச வேண்டும்.

    ம்ம் ஒரு விதத்தில் நமக்கு கிடைத்தது எதுவும் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கமிருக்கலாம் ஆனால் அவர்களுக்கு இப்போது தரும் பலது நம்மால் உணரப்படாதது அல்லவா?

    Every advantage have its own disadvange. :)

    ReplyDelete
  37. அனுபவித்ததை ரசித்து சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த generation அருமையான பல விஷயங்களை அனுபவிக்க கொடுத்து வைக்காமல் தான் போகிறது.

    ReplyDelete
  38. kathir.. i dont have words to reply.. as a father me always feeling the same.. but what to do.. searching for money life and compromise with life it takes our life from us .. thanks kathir.. i like to give atleast something to my dougter.. keep post.

    ReplyDelete
  39. //இதில்...
    எதிலும் பங்கு தராமல்
    என் மகளிடம் சொல்கிறேன்
    எதுவானாலும் உனக்காக
    எப்போதும் செய்வேன் என///


    அருமை... அருமை

    ReplyDelete
  40. இந்த சுக அனுபவம் எல்லாம் இங்கே நகரத்தில் கிடைப்பது இல்லை. கிராம வாழ்க்கையில் தொலைத்த சந்தோஷங்கள் இவை. நினைவு படுத்திவிட்டீர்கள் நிறைய. அடுத்த முறை ஊருக்கு போகும்போது அப்பத்தா வீட்டுக்கு மறக்காமல் போக வேண்டும்..!!

    ReplyDelete
  41. தொட்டுட்டீங்க கதிர். அப்படியே 80களில் சிவகிரிக்குப் போய் வந்த உணர்வு. அதே சமயம், நாங்கள் (அக்கா, தம்பி மற்றூம் நான்) அனுபவித்த, இணையற்ற காலத்தில் ஒரு துளி கூட என் குழந்தைகளுக்குக் காட்ட முடியவில்லை என்ற வருத்தமும் வருகிறது.

    --உழவன்.

    ReplyDelete
  42. ஆம் நாம் வாழுவதில்லை பிழைத்துக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  43. மனசுல போதஞ்சு இருக்கிறதையெல்லாம் கிண்டி விட்ட்டுறீங்க .."கிண்டல்" கவிஞன் அப்பிடின்னு பட்டமே கொடுக்கலாம் போல இருக்கு.

    ReplyDelete
  44. நல்ல கவிதை என் இளம் வயதை நினைவூட்டியது

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com

    ReplyDelete
  45. ithu kavithai illai..

    naan anupavitha, ippothu ilanthu vitta sorkkamaya mana valkkai.

    good

    ReplyDelete
  46. ஆக சிறந்தது என்று மகள் எதிர் பார்ப்பதை செய்தாலே போதும் தானே!?

    ReplyDelete

இது படிச்சீங்களா?