Tuesday, 15 December 2009

மீண்டும் மீண்டும்



மழலையின் எழுத்துக்களாக
சிணுங்கிய தூறல்
சட்டென மௌனங்ளை
சுக்குநூறாய் கிழித்தது மழையாய்

வழிந்தோடிய வெள்ளம்
சாலைகளில் படர்ந்து
கிடந்த அழுக்கை கரைத்து
வெளுத்துப் பார்த்தது

தேங்கிய வெள்ளம்
கெட்டித்துப் போன கரைகளை
கொஞ்சமாய் கரைத்து உடைத்து
பெருக்கெடுத்து புதிய தடம் போட்டது

நாறிப்போன சாக்கடை
அடித்துச் செல்லப்பட்டது
நலிந்து போன குளத்தின்
தாகம் தீர்க்கப்பட்டது

கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
முடியாத மனிதனின் மனதிற்காக
மீண்டும் மீண்டும் மழலையாய்
சிணுங்கத் துவங்கியது மழை



-

_____________________________________________________

45 comments:

  1. அழகான கவிதை கதிர்...! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. //கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//

    மனிதனின் மனதிற்காக...

    கதிர் அற்புதம்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வெற்றிபெற வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  5. /மழலையின் எழுத்துக்களாக
    சிணுங்கிய தூறல்
    சட்டென மௌனங்ளை
    சுக்குநூறாய் கிழித்தது மழையாய்/

    ஆரம்பமே வித்தியாமான கற்பனை.

    /கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை/

    முடிவில் கதிர் டச்.

    இடையில்..?

    முழுக்கரும்பு

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. மழை பெய்கிறது தமிழகத்தில் மட்டுமல்ல, கதிரின் இடுகையிலும் கவிதையாய்.

    எப்படி கதிர், நாங்களும்தான் மழையை பார்க்கிறோம், இது போல் எல்லாம் தோன்றுவதில்லையே!

    அருமை.

    பிரபாகர்.

    ReplyDelete
  8. கெட்டித்து போன கரை களை .....கெட்டியாய் போன கறைகளை (அழுக்குகளை) என்று வந்தால் இன்னும் நன்றாக இருக்கும என்பது என் பணிவான கருத்து.
    அழகான் மழைக் கவிதை

    ReplyDelete
  9. பாஸ்ட்....நான்தான்...???

    ReplyDelete
  10. //கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//

    ஊரில் நல்ல மழையோ...???

    மழை கவிதை அழகாய் வந்திருக்கு அண்ணே...வெற்றிக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. voted... aangg... enna boni aagalai..? makkal ellaam bijiyaa..??

    ReplyDelete
  12. அன்பின் கதிர்

    அருமையான சிந்தனை

    மழலையின் எழுத்துகள் - சிணுங்குதல் - சடாரென பெரு மழை - மவுனங்கள் காண வில்லை.பெருக்கெடுத்த வெள்ளம் செய்த செயல்கள் - மனித மனதினைச் சுத்தம் செய்ய மீண்டும் மீண்டும் மழை

    நன்று நன்று நல்வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  13. மீண்டும் மீண்டும் பிறக்கும் அந்த மழை சில நேரங்களில் பிரசவிக்க மறந்து மகிழ்ச்சியை கெடுத்து விடுகிறது...நல்ல கவிதை...

    ReplyDelete
  14. வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //
    கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//

    அருமை கதிர். வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அருமை.. வெற்றி பெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. நல்ல மழைங்க கதிர்
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  18. //கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//


    இங்கு தமிழ் நாட்டில் உள்ள சாலைச் சீரழிவை
    நன்றாகச் சொல்லியுள்ள கவிதை

    பரிசுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. //கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//

    இப்பதான் நம்ம ஊர்ல மழை ஓய்ந்தது..........

    உங்க அழகான கவிதையால மீண்டும் கொட்டுகிறது......

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  20. வாழ்த்துகள்,மழையில் நனைந்தேன்

    ReplyDelete
  21. சொல்லவேயில்ல....

    கவிதை நன்று....

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  22. நல்ல கவிதை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

    ReplyDelete
  24. நல்லாருக்கு கவிதை!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. மழையை மழலையாய் ரசித்து அழகாய் உருவாகியுள்ள கவிதை.

    ReplyDelete
  26. வாழ்த்துகள் கதிர்.

    ReplyDelete
  27. கொஞ்சமாய் கரைத்து உடைத்துகவிதை,,

    ReplyDelete
  28. வழிந்தோடிய வெள்ளம்
    சாலைகளில் படர்ந்து
    கிடந்த அழுக்கை கரைத்து
    வெளுத்துப் பார்த்தது]]

    அட ...

    --------------------

    கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை

    அருமை.

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. அப்ப எனக்கு பரிசு கிடையாதா...? அவ்வ்வ்வ்...வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  30. முந்தைய கருத்துரையில் வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன்..

    ReplyDelete
  31. அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. அழகாக கவிதை.. நல்ல வாசிப்பனுபவம்..!!

    ReplyDelete
  33. அருமையான கவிதை
    நல்ல நடை
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  34. மழை வர்ணனை அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அழகான கவிதை. வெற்றிபெற வாழ்த்துகள்..!

    ReplyDelete
  36. //கரைக்க துவைக்க உடைக்க தீர்க்க
    முடியாத மனிதனின் மனதிற்காக
    மீண்டும் மீண்டும் மழலையாய்
    சிணுங்கத் துவங்கியது மழை//

    அருமை ஈரோடு கதிர்
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  37. மிகவும் சிறப்பாக இருக்கிறது. மழையில் மனிதர்களின் ஏக்கம் தென்படுகிறது.

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. மனம் வெளுக்க மார்கம் உண்டோ எங்கள் முத்து மாரி?
    பாரதிலிருந்து கதிர் வரை இந்த ஏக்கம் தொடகிறது
    வாழ்த்துக்கள்
    பத்மா

    ReplyDelete
  39. இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. இதை எப்படி மிஸ் பண்ணினேன். சரி பாஸ். அருமையான/அழகான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

இது படிச்சீங்களா?