Thursday, 24 December 2009

தீர்க்க முடியாத தூரத்தில்


காற்றுகூட கசியாத இறுக்கத்தில்
மனங்கள் முயங்கிக்கிடந்தாலும்
வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
கூடவே விதியும் பிரித்துப்போட்ட
பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்
தீர்க்க முடியாத தூரத்தில்...

சப்தங்கள் அமிழ்ந்துகிடக்கும்
பின்னிரவில் சப்தம் போட்டு
எழுப்பிவிடும் மனதோடு தேடுகிறேன்
இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை...

மோகமும் காதலும் பிசைந்து
முத்தங்கள் சில இடுகிறேன்
கடந்து போகும் காற்றில்
உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...

35 comments:

  1. கடந்து போகும் காற்றில்
    உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...]]


    அருமை.

    ReplyDelete
  2. //மோகமும் காதலும் பிசைந்து
    முத்தங்கள் சில இடுகிறேன்
    கடந்து போகும் காற்றில்
    உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே//

    அருமை.

    //காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

    காற்று கசியிதோ இல்லையோ காதல் கசிஞ்சு ஆறா ஓடுது.


    //காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

    காற்று ஏற்கனவே அரெஸ்ட் ஆகியிருக்கா?

    ReplyDelete
  3. //காற்றுகூட கசியாத இறுக்கத்தில்//

    காதல் கசிந்து ஓடுகிறது கவிதையில்...

    ReplyDelete
  4. நல்ல கற்பனை வளம். அடி பின்றீங்கலேப்பா
    அருமை

    ReplyDelete
  5. அல்லாவ். என்னா இது!!!அட எஞ்சாமி அசத்தல் அபாரம்!

    /இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
    கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
    நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை.../

    ஆஹா!ஆஹா!

    /மோகமும் காதலும் பிசைந்து
    முத்தங்கள் சில இடுகிறேன்/

    ரைட்டு.

    /உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே.../

    ம்ம்ம். சூப்பர்ப்.

    ReplyDelete
  6. முத்தம் அனாதையாகும் அபாயம் ஐய்யகோ கொடுமை...

    ReplyDelete
  7. //இன்னும் கொஞ்சம் சிவப்பாய்
    கரையாத வெட்கத்தோடு கண் சிமிட்டும்
    நீ ரசித்துப் பார்த்துத் தீர்த்த நிலாவை...//

    அட...அட... அழகான வார்த்தைப்பின்னல்கள்.

    //மோகமும் காதலும் பிசைந்து
    முத்தங்கள் சில இடுகிறேன்//

    ம்ம்ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்...

    ReplyDelete
  8. காற்றில் கலந்த முத்தங்களே அவள் கன்னத்தையாவது சற்று வருடுங்கள்..அவளுக்குள் சபலம் வராது போனாலும் சலனமாவது பிறக்கட்டும்...

    ReplyDelete
  9. காதல் சொட்டும் காதல் கவிதை...ம்ம்ம்ம்ம் நானுந்தான் எழுதறேன் என்னதுக்கு என்று இப்படி எழுதப்போகிறேன்...

    ReplyDelete
  10. கதிர் அருமை என்ற வார்த்தையும் பத்து கமெண்டும் கண்டிப்பா போதாது இந்த மோகம் கொண்ட காதல் கவிதைக்கு...

    ReplyDelete
  11. சரி... சரி

    கவித அருமை

    கவிதை எழுதும்போது உங்களின் மனநிலை :))

    கலக்கறீங்க மாப்பு

    ReplyDelete
  12. கவிதையின் ஓட்டம் அழகானது.

    ReplyDelete
  13. ரொம்ப நல்லாருக்கு கதிர்... (நீங்க நிறுத்திட்டாலும் நாம போடுவோம் ஓட்டு... =))

    ReplyDelete
  14. ரொம்ப பிடிச்சிருக்கு கதிர்!

    ReplyDelete
  15. The concept of the lyric is so deep rooted and the words are touchy. In the process of fast rolling life, we look back our evocative past some day and such nostalgic lines are coming from the heart. This lyric made me to read several times that is refreshing the compassion in me.

    Thank you!

    (sorry for the English comment as i do not know how to type in Tamil)

    ReplyDelete
  16. உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...]]//

    ரசனை மிகு வரிகள்!

    ReplyDelete
  17. //வீதிகளும், காடுகளும், கட்டிடங்களும்
    கூடவே விதியும் பிரித்துப்போட்ட
    பூளோகத்தின் பிடியில் நீயும் நானும்
    தீர்க்க முடியாத தூரத்தில்...//


    ம்ம்ம்ம்ம்.....ரச்னையான கவிதை வரிகள்

    ReplyDelete
  18. காலையில் போட்ட பின்னூட்டம் இன்னும் திரைக்கு வரவில்லை. இது வந்துவிட்டதா வரவில்லையா என்று எத்தனைமுறை பார்ப்பது? இப்படிசெய்யவிட்டு ஹிட்ஸை எகிரவைக்கும் டெக்னிக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.

    ReplyDelete
  19. அவளை தேடி அலைவதிலும் ஒரு சுகம் உள்ளது தானே. தீர்க்க முடியாத தூரம்... மோகம் பிசைந்த காதல் முத்தம்... இவையெல்லாம் இருப்பதால் தானே கவிதை வருகிறது. கவிதை வெகு அழகு.

    ReplyDelete
  20. //மோகமும் காதலும் பிசைந்து
    முத்தங்கள் சில இடுகிறேன்
    கடந்து போகும் காற்றில்
    உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

    ....ரசித்த வரிகள் ...மிக அருமை அண்ணே...புதுவருட வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. க.பாலாசி said...

    / இதை வழிமொழிய வானம்பாடிகளையும் அழைக்கிறேன்.//

    ஈரோடு பதிவர் சந்த்திப்பில் கலந்துரையாடலில், இது ஒரு உத்தியாக திரு அப்துல்லாவால் கூறப்பட்டதால் (டமாசுக்குன்னாலும்), நான் வழிமொழிய இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.:))

    ReplyDelete
  22. //உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

    சே..பின்னிட்டீங்க தல...நல்ல கவிதை..

    ReplyDelete
  23. அழகாயிருக்கிறது...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. கவிதை நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  25. காதலான கவிதை அழகு........

    ReplyDelete
  26. சூப்பரா இருக்கு. அசத்திட்டீங்க

    ReplyDelete
  27. அழகான கவிதை. ரசித்தேன்.

    ReplyDelete
  28. //மோகமும் காதலும் பிசைந்து
    முத்தங்கள் சில இடுகிறேன்
    கடந்து போகும் காற்றில்
    உன் முகவரி தேடிவரும் முத்தங்களை
    அதிக நேரம் காற்றில் அலையவிட்டு
    அனாதைகளாய் கண்ணீர் சிந்த விடாதே...//

    சரிங்க

    ReplyDelete
  29. அருமையான வரிகள். காதல் சிந்தும் கவிதை. நன்றி.

    ReplyDelete

இது படிச்சீங்களா?