Thursday, 21 January 2010

தூக்கணாங்குருவிக்கூடு





ஊட்டோரம் ஒசந்த தென்னையில
ஒய்யாரமா வளைஞ்ச மட்டையில
எங்கிருந்தோ வந்த ஒரு குருவி
என்னமோ மாயம் பண்ணுச்சு

ஓடியாடி வேல பாத்து தேடித்தேடி
எடுத்து வந்து அவசரமா கட்டுனதுல
ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல

ஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல
பத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு
மரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே
கூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா

ஐப்பசியில பேஞ்ச அடமழைக்கு
ஆறேழுபக்கம் ஒழுகுது ஊத்துது...
குருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு
ஒரு சொட்டு தண்ணி உள்ள படாம

மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட

________________________________________________

36 comments:

  1. கவிதை அழகு. நட்சத்திரப் பதிவுகள் அனைத்தும் இதுவரை அருமை.

    ReplyDelete
  2. பிடிச்சிருக்கு கதிர்.

    ReplyDelete
  3. அருமையான கவிதைங்க..:))
    அசத்திட்டீங்க..:)

    ReplyDelete
  4. அன்பின் கதிர்

    அருமை அருமை - கவிதை அருமை

    தூக்கணாக்குருவி - உழைப்பு அருமை

    நல்வாழ்த்துகள் கதிர்

    ReplyDelete
  5. அட ஆமா.....

    //ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
    ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//

    சரியாச் சொன்னீங்க கதிர்

    ReplyDelete
  6. //ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
    ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//

    ரொம்ப நல்லாயிருக்கு கதிர்

    ReplyDelete
  7. ஒரு வார்த்தையில் சொன்னல் நறுக்

    ReplyDelete
  8. ஆகா!

    நம்ம வாரிசு வளைச்சி வளைச்சி இந்த கூட்ட பத்தி கேட்டுச்சே! மழையில, இடியில, புயல்ல, சுனாமிலன்னு கடைசியா கேட்டப்போ (நம்மூருக்கு சின்ன புள்ளையில எங்கபபாருகிட்ட பல வராது கடல் ரொம்ப தூரம்னு சமாளிச்சேன்... ஹி..ஹி) கூட நமக்கு தோனலயே!

    அருமை கதிர் - தமிழ்மணம் ஸ்டார்!

    பிரபாகர்.

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை அது அழகான கவிதையாக வெளிவந்திருக்கிறது.

    ReplyDelete
  10. குருவிக்கூடு மாதிரியே கவிதையும் அழகு. பாராட்டுகள் கதிர்.:)

    ReplyDelete
  11. சூப்பர்...மிக ரசித்தேன்...

    ReplyDelete
  12. சூப்பருங்க கதிர்

    ReplyDelete
  13. கழக்கிட்டீங்க அண்ணா....

    ReplyDelete
  14. உண்மை... எழிலும் அழகுமாய்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  15. என் சிறு வயதில், நான் பார்த்த தென்னம் மரங்களில் இந்த கூட்டை பார்த்திருக்கிறேன்.

    இப்பொழுதும் சென்னையில் நிறைய தென்னை மரங்கள் இருக்கின்றன (ஆச்சரியமான தகவல் தான் இது ஆனால் உண்மை), இந்த கூட்டை நான் இதுவரை பார்த்ததில்லை.

    புத்தகக் காட்சியில், ஒரு ஸ்டாலில் இந்த கூட்டைத் தொங்கவிட்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. அருமை நண்பரே..
    அழகாகச் சொன்னீர்கள்..

    செவிவழிச் செய்தி ஒன்று..
    ஆண்குருவி கட்டிய கூடு பெண்குருவிக்குப் பிடித்தால் தான் இரண்டும் சேர்ந்து வாழுமாம்..

    ReplyDelete
  17. அழகான கவிதை அந்த தூக்கணாங்குருவி கட்டிய கூட்டினைப் போலவே.

    ReplyDelete
  18. நெகிழ வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  19. கிராமியம் மணக்குதுங்க!

    ReplyDelete
  20. கலக்கல் கதிர்.. உண்மைதான் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட முடியுமா?

    ReplyDelete
  21. நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்

    ReplyDelete
  22. ரொம்ப நல்லாருக்குங்க(குருவி கூடும் உங்க கவிதையும்)..

    ReplyDelete
  23. மிக அருமையான சிந்தனைக்கவிதை.

    ReplyDelete
  24. ம்ம்ம்.... கூடும் அசத்தல்... உங்க கவிதை கூப்பாடும் அசத்தல்.

    ReplyDelete
  25. கிராமத்து வாசனை துள்ளல் ஆடுகிறது.தொடருங்கள்.

    ReplyDelete
  26. அழகிய கவிதை.

    "ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
    ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல"
    நன்றாகச் சொன்னீர்கள் இதை நானும் பார்த்து ரசித்திருக்கேன்.

    ReplyDelete
  27. எதார்த்தமான வரிகள் !
    உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  28. //ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
    ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//
    அசத்திட்டீங்க

    ReplyDelete
  29. ////
    மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
    மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
    ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
    ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட

    ///

    அருமை

    ReplyDelete
  30. நச் என்று முடிப்பது மிக அருமை.

    ReplyDelete

இது படிச்சீங்களா?