Saturday, 27 February 2010

வலிக்கும் நியதி


வலி
றித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து


உறவு
டிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றி மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை




நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே




முகம்
த்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்


  ____________________

40 comments:

  1. உறவு, வலி, நியதி, முகம். :) சபாசு!

    ReplyDelete
  2. //வானம்பாடிகள் said...
    உறவு, வலி, நியதி, முகம். :) சபாசு!
    //

    இதுல நியதி, உச்சம்!

    ReplyDelete
  3. எல்லாம் அருமை.. பழமையண்ணன் சொன்ன மாதிரி நியதி உச்சம்..:))

    ReplyDelete
  4. அற்புதமாய் இருந்தது கவிதைகள் கதிர் வாழ்த்துக்கள். உறவு என்னை கவர்ந்தது!!!

    ReplyDelete
  5. முகம்
    எத்தனை திருத்தியும்
    ஏனோ நிறைவில்லை
    சகிக்காத கண்ணாடியின் சாபம்

    .......... :-)

    ReplyDelete
  6. அற்புதம் கதிர!,நாலும்!!

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையாக பிரிகிறது.

    ReplyDelete
  7. அனித்தும் நன்று என்றாலும் முதல் இரந்தும் கணக்கச் செய்கிறது...

    ReplyDelete
  8. நல்ல தெறிப்புகள், கதிர்!

    ReplyDelete
  9. /நியதி
    பூ மட்டுமா உதிர்கிறது
    தேடிவரும் தேனீயின்
    நம்பிக்கையும் தானே
    .....
    முகம்
    எத்தனை திருத்தியும்
    ஏனோ நிறைவில்லை
    சகிக்காத கண்ணாடியின் சாபம்//

    அருமை

    ReplyDelete
  10. எல்லாம் அருமை.
    உறவு கனக்கிறது.

    ReplyDelete
  11. தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

    East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

    Have a look at here too..

    Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

    ReplyDelete
  12. வலியின் நியதி, வலியோடும் வலிமையோடும் வந்திருக்கிறது......

    வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete
  13. கதிர் நலமா?உறவு வலிக்கிறது.,முகம் மலர்கிறது.,

    ReplyDelete
  14. அனைத்தும் அருமை....

    ReplyDelete
  15. அன்பு கதிர்,

    உறவும், முகமும் நிறைய பிடித்தது.

    நீங்கள் முந்தா நாள் பெங்களூர் வந்ததாக கும்க்கி சொன்னார், உங்கள் எண் அன்று கிடைக்காததால் பேச நினைத்தும் முடியவில்லை.

    அடுத்தமுறை வரும்போது ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும்... சந்திக்க முயலலாம்.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  16. ஹைக்கூ எல்லாம் நன்னாயிட்டு உண்டு....!

    ReplyDelete
  17. {{{{{{{{ எத்தனை திருத்தியும்
    ஏனோ நிறைவில்லை
    சகிக்காத கண்ணாடியின் சாபம் }}}}}}}}


    அற்புதமான சிந்தனை . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  18. ப,அ,பூ,எ....எங்கேயோ போரீங்க.

    ReplyDelete
  19. மடி வற்றின மாட்டை அடிமாடாய் அனுப்புவது நியதியாய் இருந்தாலும், உறவின் வலி, முகத்தில் (கவிதையில்) தெரியுது. அருமை.

    ReplyDelete
  20. மணி மணியாக குறுங்கவிதைகள் ....அழகாக் இருக்கிறது. பாராடுக்கள்.

    ReplyDelete
  21. கவிதைகள் அத்துனையும் அற்புதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலியும் நியதியும் வலிக்கிறது கதிர்

    ReplyDelete
  23. வலி,உறவு,நியதி, முகம்...
    அற்புதம் அண்ணே..

    ReplyDelete
  24. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  25. 1.உறவு
    2.வலி
    3.நியதி
    4.முகம்........ அத்தனையும் நெருடல் கவிதை..... இது என் வரிசை!

    ReplyDelete
  26. நன்முத்துக்கள் நான்கும் அழகு....

    ReplyDelete
  27. உறவுக்குள் புதைந்திருக்கும் வலியை பார்க்கிறேன்....கவிதையினூடாக...

    ReplyDelete
  28. கண்ணாடி பொய் சொல்லாது..

    இருப்பதைத்தான் பிரதிபலிக்கும்...

    ReplyDelete
  29. கதிர்!, சா(ய்)ன்ஸே இல்லை!! அருமை!!!

    ReplyDelete
  30. வாசிப்பிற்கும்...
    பாராட்டிற்கும் நன்றிகள்

    @@ வானம்பாடிகள்
    @@ பழமைபேசி
    @@ butterfly Surya
    @@ செல்வமுரளி
    @@ முகிலன்
    @@ காவிரிக்கரையோன் MJV
    @@ Chitra
    @@ க.இராமசாமி
    @@ பா.ராஜாராம்
    @@ T.V.ராதாகிருஷ்ணன்
    @@ புலவன் புலிகேசி
    @@ மாதவராஜ்
    @@ இய‌ற்கை
    @@ திகழ்
    @@ மாதேவி
    @@ Tech Shankar
    @@ ஆரூரன்
    @@ ஜெரி ஈசானந்தா
    @@ தேவன் மாயம்
    @@ அகல்விளக்கு
    @@ ராகவன்
    @@ கலகலப்ரியா
    @@ பனித்துளி சங்கர்
    @@ வி.பாலகுமார்
    @@ தாராபுரத்தான்
    @@ அம்பிகா
    @@ நிலாமதி
    @@ Madurai Saravanan
    @@ thenammailakshmanan
    @@ seemangani
    @@ ராமலக்ஷ்மி
    @@ சி. கருணாகரசு
    @@ தமிழரசி
    @@ க.பாலாசி
    @@ பிரேமா மகள்
    @@ ஈரோடு கோடீஸ்

    ReplyDelete
  31. அன்பின் கதிர்

    வலி, உறவு, நியதி மற்றும் முகம் - குறுங்கவிதைகள் அருமை அருமை

    நல்வாழ்த்துகள் கதிர்

    ReplyDelete
  32. கவிதைகள் துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தியது.அருமை.நீலா.

    ReplyDelete
  33. கவிதைகள்மிகவும் அருமை.

    ReplyDelete

இது படிச்சீங்களா?