Wednesday, 24 March 2010

அகம் மறைத்த புறம்












கோபத்தோடும் பயத்தோடும்
யாருக்கும் தெரியாத
பாதி மண் மூடிய கிணற்றுக்குள்

காமம் கொல்லாத சாமியார்
மக்கள் நலன் பாரா மன்னன்
மோகம் கிளறும் நடிகை
கொள்ளைக்கார மந்திரி
நாய் நக்கும் குடிகாரன்
விலை போகும் தலைவன்
மிரட்டும் போக்கிரி
கெட்டுப்போன தண்ணீர்
நாற்றமடிக்கும் காற்று
மண்ணைத் தின்ற இராசயனம்
நியாயம் இல்லா தொலைக்காட்சி
லஞ்சம் வாங்கும் காவல்துறை

எல்லோரையும் சாடி
வெண் காகிதத்தில்
கருப்பு மையில்
கடிதம் எழுதுகிறேன்

இப்படிக்கு என
என் பெயர் இட துளியும்
துணிவின்றி

தனித்தனியே உறையிலிட்டு
முகவரி சரி பார்த்து
வில்லை ஒட்டி அனுப்பி
நெஞ்சு நிமிர்த்தி வீடு செல்கிறேன்

விழித்துப்பார்க்கிறேன்
எல்லாத் தபாலும்
இறைந்து கிடக்கிறது
என் வீட்டு முற்றத்தில்

எழுதும் போது உணராத
என் பேனா மையின் புளித்த நாற்றம்....
இப்போது நாசி நிரடுகிறது...
என் மன நாற்றத்தோடு சேர்ந்து

34 comments:

  1. படத்திற்கான கவிதையா கதிர்?

    ReplyDelete
  2. நல்ல கவிதை
    .......எழுத மட்டுமே முடியும் மெளனம் கசியுது மனம் மட்டும் குமுறுது.. '

    ReplyDelete
  3. அசத்தல் கதிர்,
    வாழ்த்துகளுடன் ,

    ReplyDelete
  4. /எல்லாத் தபாலும்இறைந்து கிடக்கிறதுஎன் வீட்டு முற்றத்தில்
    எழுதும் போது உணராதஎன் பேனா மையின் புளித்த நாற்றம்....இப்போது நாசி நிரடுகிறது...என் மன நாற்றத்தோடு சேர்ந்து/

    நீல ரத்தம் தரும் அழுத்தம், இயலாமை, புழுங்கிப் புளித்த உணர்வுகள்..ம்ம்ம்..நன்று..குட். அச்சா..

    ReplyDelete
  5. பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

    அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
    Cheena (சீனா)
    கேபிள் சங்கர்
    ஈரோடு கதிர்
    Butterfly சூர்யா
    இராகவன், நைஜிரியா
    விக்னேஷ்வரி
    சேட்டைக்காரன்
    வெற்றி
    பிரேமா மகள்
    பிரவின்குமார்

    நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
    http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html

    ReplyDelete
  6. எதார்த்தங்களை எதார்த்தமாகவே கசியவிட்டு இருக்கீங்க நண்பரே கவிதை அருமை !

    ReplyDelete
  7. சாமியார் முதல் காவல்காரர் வரை .......சரியாய் தான் சொல்லியிருகிறீர்கள் .

    ReplyDelete
  8. பாதி மண் மூடிய கிணற்றுக்குள்

    :)

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  9. நம் முதுகின் அழுக்கை, பார்ப்பதுகூட கடினம்தானே... கவிதை உண்மையின் பக்கம்....

    ReplyDelete
  10. காமம் கொல்லாத சாமியார்
    மக்கள் நலன் பாரா மன்னன்
    மோகம் கிளறும் நடிகை
    கொள்ளைக்கார மந்திரி
    நாய் நக்கும் குடிகாரன்
    விலை போகும் தலைவன்
    மிரட்டும் போக்கிரி
    கெட்டுப்போன தண்ணீர்
    நாற்றமடிக்கும் காற்று
    மண்ணைத் தின்ற இராசயனம்
    நியாயம் இல்லா தொலைக்காட்சி
    லஞ்சம் வாங்கும் காவல்துறை


    இவங்க எல்லாம் மோசமானவங்களில் முக்கியமானவங்க

    ரசித்தேன்

    ReplyDelete
  11. நல்லாருக்கு கதிர்.... இப்டி அடிக்கடி மனசாட்சி கிட்ட பேசிக்கணும் செரியா....

    ReplyDelete
  12. //மண்ணைத் தின்ற இராசயனம்//

    விளையாடுறார் பாருங்க!

    ReplyDelete
  13. இப்படிக்கு என
    என் பெயர் இட துளியும்
    துணிவின்றி


    உண்மை.. உண்மை.

    ReplyDelete
  14. மிகச் சரி கதிர்!!!

    ReplyDelete
  15. அருமையான பதிவு கதிர். உண்மை சுடுகிறது. உண்மைக்கு முன்பு குடும்பம், வேலை, பொறுப்பு போன்றவை கண்முன்னே நிற்கிறது.

    ReplyDelete
  16. நல்லாருக்குங்க கதிர். மனதின் வலியும் எழுத்துகளில் புரியும்.

    ReplyDelete
  17. மிக அருமை கதிர்!!

    ReplyDelete
  18. உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு கதிர். ;)

    ஆதங்கம் தான்..

    ReplyDelete
  19. எழுதி எழுதி தொற்று போனவர்கள் தானே நாம்...
    அருமை அண்ணே...

    ReplyDelete
  20. நாட்டு நடப்பில் உள்ள நஞ்சுகளை, நல்லா பட்டியல் போட்டு சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  21. ண்ணா நல்லா இருக்குங்கண்ணா

    ReplyDelete
  22. இது மனிதனின் இயல்பான இயலாமை..

    ReplyDelete
  23. நல்லாயிருக்கு கதிர்.

    ReplyDelete
  24. //எழுதும் போது உணராத
    என் பேனா மையின் புளித்த நாற்றம்....
    இப்போது நாசி நிரடுகிறது...
    என் மன நாற்றத்தோடு சேர்ந்து//

    உண்மைதான் அங்கிள்... சில சமயம்... நாம எழுதுற எழுத்துக்கள் நம்மையே திருப்பி தாக்குகின்றன... அதை பெரும்பாலும் உணர்வதில்லை நாம்.. உணர்ந்தாலும் விழித்துக் கொள்வதில்லை..

    ReplyDelete
  25. பட்டியல் மிகச்சரி.....இன்னும் இருக்கலாம்

    ReplyDelete
  26. ரொம்பவே நல்லயிருக்கு கதிர்.
    அப்பப்ப நம்மை நாமே சரிபார்த்துக்கொள்ள அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் ரோட்டடியில் இருக்கும் வீட்டுக்குள் அடையும் தூசி போல, நம்மை முழுவதும் மூடிவிடும்.அப்பைக்கப்ப பெருக்கவேண்டும்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?