Tuesday, 1 June 2010

அத்தனையும் உணர்கிறேனடி




மோக வெப்பத்தில் களைத்து
காதல் நிழலில் மடி சாய
பொட்டென விழும் தேன் துளியாய்
உதட்டில் படியும் உன் உதட்டுச் சுவை..

உயிரின் அறைகளை உயிர்ப்பித்து
உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீச
தடு நீவும் உன் விரல்களில் உதிரும்
தொட்டெடுத்துதொடுத்த மல்லிகை வாசம்...

பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எச்சில் கொண்டு எழுத்துப்பிழை
களையும் இலக்கியச் சுவை...

கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
வியர்வைத் துளி பூத்து நிற்கும்
காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை...


வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

~

37 comments:

  1. யப்பா! பேருக்கேத்தபடி மாப்பாத்தான் இருக்காரு. மப்பாவும் இருக்காரு போல.

    /உயிரின் அறைகளை உயிர்ப்பித்து உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீசஉதடு நீவும் உன் விரல்களில் உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்.../

    பலே!

    ReplyDelete
  2. /////பட்டென விரியும் பச்சை மார்பில்நுனி நாவால் கவிதை எழுதிஎழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டுசரிசெய்யும் இலக்கியச் சுவை...//////

    வார்த்தைகளில் எதார்த்தம் எங்கும் நிறைந்து கவிதைக்கு அழகு சேர்த்து இருக்கிறது

    ReplyDelete
  3. சூப்பர். நல்லா உரக்க விசில் அடிக்கலாம் போல்ருக்கு இந்த கவிதைய படிச்ச உடனே. அண்ணா கிளப்புங்.

    ReplyDelete
  4. //. மப்பாவும் இருக்காரு போல.//

    அண்ணே என்ன சரக்குன்னு சொன்னா எனக்கும் உதவியா இருக்கும்

    ReplyDelete
  5. மல்லிகை மணமாய் கவிதை.

    ReplyDelete
  6. //கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
    வியர்வைத் துளி பூத்து நிற்கும்
    காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
    ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை.//

    கதிர்,

    டாப்பு!

    ReplyDelete
  7. //மப்பாவும் இருக்காரு போல.//

    :)

    ReplyDelete
  8. ஒவ்வொரு வார்த்தையிலும்
    காதல் சொட்டுகிறது.

    ReplyDelete
  9. //உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...//

    //பட்டென விரியும் பச்சை மார்பில்
    நுனி நாவால் கவிதை எழுதி
    எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
    சரிசெய்யும் இலக்கியச் சுவை...//


    அண்ணே...அருமையான ரசனையோடு சிறப்பா வந்திருக்கு...
    அத்தனையும் உணரும் அழகிய கவிதை.....திரும்ப திரும்ப படிக்க தோணுது...

    ReplyDelete
  10. ஆஹா...
    அவ்ளோதான்.

    தூரத்திலிருந்து தான்
    சொல்ல முடியும்.

    அது தொத்திக்கொள்ளும்.

    ReplyDelete
  11. யம்மாடியோ.....
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  12. வாவ்...

    சூப்பர்........

    ReplyDelete
  13. இப்பிடி சூப்பராவே எழுதினா எதிர் கவிதை எழுதாம என்ன பண்றது?:‍(

    ReplyDelete
  14. ம்ம்ம்ம்.....எல்லோரும் உங்களப் பாத்து ஏன் (ஊ)யூத்து ங்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது.........

    ReplyDelete
  15. புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

    ReplyDelete
  16. //வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
    மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
    தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
    அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி//

    உங்கள என்னமோன்னு நெனச்சேன் .....காதல் ரசம் சொட்ட ..இல்ல இல்ல ..காதல் கடல் சொட்ட சொட்ட ஒரு கவிதை ....

    ReplyDelete
  17. அடிக்கடி போட்டோவை மாத்தும் போதே நினைச்சேன்... எங்கேயோ என்னவோ நடக்குதுன்னு! ஹா ஹா ஹா!


    காதல் கொப்பளிக்கிறது கதிர் சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. //ம்ம்ம்ம்.....எல்லோரும் உங்களப் பாத்து ஏன் (ஊ)யூத்து ங்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது........//

    ஆ.வி,

    எல்லாரும்னு சொல்றாங்கன்னு மொத்தமா சொல்லக்கூடாது. யூத்-துன்னு சொல்லிக்கிறாங்க.

    ReplyDelete
  19. //காதல் கொப்பளிக்கிறது கதிர் சார்//

    தேவா சார்,

    //களைத்து நிதானித்து நிறைந்து
    வியர்வைத் துளி பூத்து நிற்கும்//

    இந்த வரிகளை கவனிக்காம சொல்லிட்டிங்க போல.

    காதல் இப்பதான் களைச்சி இருக்குதாம்.

    ReplyDelete
  20. //உதடு நீவும் உன் விரல்களில் உதிரும்
    தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...//

    யப்பா..சாமீ ஆளவிடுங்க....

    ReplyDelete
  21. காமராஞ் சொன்னதுதான்...ரிப்பீட்டு...))

    ReplyDelete
  22. வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

    ReplyDelete
  23. //
    வால்பையன் said...

    வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

    //
    ரிப்பீட்டு...........

    ReplyDelete
  24. வயசாகிட்டாலே இப்படித்தான்...

    ReplyDelete
  25. இஃகி இஃகி... ஈரோட்டுலேயும் வெயில் அதிகமா...

    ReplyDelete
  26. //
    பட்டென விரியும் பச்சை மார்பில்
    நுனி நாவால் கவிதை எழுதி
    எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
    சரிசெய்யும் இலக்கியச் சுவை..//

    அருமை அருமை!

    ReplyDelete
  27. பட்டென விரியும் பச்சை மார்பில்
    நுனி நாவால் கவிதை எழுதி
    எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
    சரிசெய்யும் இலக்கியச் சுவை...///


    இலக்கியச் சுவை???

    ReplyDelete
  28. அசத்தலா இருக்கு அண்ணா!

    ReplyDelete
  29. அனைத்து வரிகளிலும் ஒருவித காதல்
    ஒருவித மோகம்.... அருமை

    ReplyDelete
  30. காதல் கவிதையின் வரிகள் அனைத்தும் அழகு கலக்குங்க கதிர்

    ReplyDelete
  31. ரசித்த, பாராட்டிய, கருத்து(!!)ச் சொன்ன / கிண்டலித்த / திட்டிய (இஃகிஃகி... மட்டறுத்துட்டோம்ல)

    அனைவருக்கும் நன்றி..

    வயசான காலத்துல இது எதுக்கு / வெயில் அதிமாக / யூத்து... இப்படியெல்லாம் கிண்டல் பண்ணிவங்கதான் இந்தக் கவிதைய ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப ரசிச்சாங்கன்னு........ ”உளவு சொல்லும் கினியாண்டிசாமி” சொல்லுச்சு.....

    நெஜமாவா!!!!???

    ReplyDelete
  32. //மட்டறுத்துட்டோம்ல//

    அறுக்குறதா, உறுதுலா??

    மட்டுறு(த்து)தல்===

    மட்டு அப்படின்னா, நல்லது கெட்டதைப் பாக்குறது.

    உறுதல் = அடைதல்...exist
    உறுத்துதல்-- உறுதலை ஊக்குவித்தல்

    ReplyDelete
  33. அகநானூற்றுப் புலவரின் சைபர் அவதாரமா இது?
    அசத்தல்!

    ReplyDelete
  34. உயிர்க் காதலின் உணர்வு பட்டியல்...
    நல்லாயிருக்கு. (மீண்டும் படித்தேன்)

    ReplyDelete
  35. உதடு நீவும் உன் விரல்களில் உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...
    பட்டென விரியும் பச்சை மார்பில்நுனி நாவால் கவிதை எழுதிஎழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டுசரிசெய்யும் இலக்கியச் சுவை...
    வேடத்தையும் வெட்கத்தையும் களைந்துமௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
    தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

    sir superb
    very nice

    ReplyDelete

இது படிச்சீங்களா?