Friday, 17 December 2010

காணாமல் காணும் ஓவியம்


















எதிர்திசையில் அமர்ந்து
ஏதோ ஓவியம் வரையத்
துவங்கினாள் அந்தச் சிறுமி
என்பார்வையில் படாதபடி

என் பார்வைப் பசிக்கு
அவள் கண்களின் அசைவு
மட்டுமே தீனியாகிக்கொண்டிருந்தது

சிறுபூவின் கருவிழிகள்…
எதிர் திசைகளில் நகரும் போது
குறுக்கு நெடுக்குக் கோடுகளையும்…

வளைந்து சுழலும் போது
வட்டத்தையும் வளைகோடுகளையும்

இடவலமாய்த் தாவும் போது
வேண்டாததை அழிப்பதையும்

மினுமினுக்கும் போது
பட்டாம் பூச்சிகளையும்…

பூவாய்ச் சிரிக்கும் போது
குழந்தையின் புன்னகையும்

களைத்துச் சோர்வுறும் போது
ஏதோ ஏக்க வயிற்றையும்

வண்ணங்களைக் கசியவிடும்போது
வானவில்லையும்
......எனக்குள் வரைந்து முடித்திருந்தது.

”வரைஞ்சு முடிச்சாச்சு
வந்து பாருங்க” என அழைத்தாள்

”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.

-0-

23 comments:

  1. அட்டகாசம்...

    அழகு...

    :)

    ReplyDelete
  2. உண்மைலேயே நீங்க சொன்னது அந்தப் பொண்ண என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுச்சு அண்ணா ..!!

    ReplyDelete
  3. கண்களின் நாட்டியம் வரைந்த ஓவியம்:) சூப்பர்ப்

    ReplyDelete
  4. எழில் விருந்து படம்!

    சொல் அழகு உங்க எழுத்து!!

    ReplyDelete
  5. அழகு...

    கண்கள்

    வரிகள்

    புகைப்படம்

    எல்லாமே.

    ReplyDelete
  6. அருமை... அட்டகாசம் !

    ReplyDelete
  7. அழகான கவிதை

    ReplyDelete
  8. அழகான சித்திரமும், உரை(கவிதை)ச் சித்திரமும்.

    இந்நேரம் எதிர் கவுஜைக்கு எத்தனை கை குடையிதோ!

    ReplyDelete
  9. குழந்தைக்கு கவிதை பேசும் கண்கள்

    ReplyDelete
  10. எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. கவிதை அதன் உலகத்தை கண் முன் நிறுத்திற்று!
    ('புன்னகையையும்' என்பதில் 'யை' விட்டுப் போயிற்று என நினைக்கிறேன்.)

    ReplyDelete
  11. ஆஹா... ஆஹா... அற்புதமான வர்னிப்புக் கவிதை...! அய்யா.. இது உங்களின் எத்தனாவது படைப்பு....???

    ReplyDelete
  12. கவிதை எழுதிய உங்கள் கையை இப்படி கொடுங்கள் குலுக்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. ”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
    ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
    அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.

    ....Lovely!

    ReplyDelete
  14. குழந்தை வரைந்த ஓவியமா
    கதிர் வரைந்த கவிதையான்னு கேக்கிறீங்க !

    ReplyDelete
  15. கவிதையும் கண்களும் அழகு.

    ReplyDelete
  16. ஆஹா
    கண்களால் பெரும் ஓவியம்
    செய்து காட்டிடும் இந்த காவியம்

    ReplyDelete
  17. கதிர்,

    கண்களால் அழகியக் கவிதை.

    ReplyDelete
  18. மையப்புபுள்ளியும் அதை வைச்சி வரைந்த வட்டமும் நல்ல கவிதையாக.. படமும் க்யூட்...

    ReplyDelete
  19. கவிதையின் வாயிலாய் வரையப்பட்டிருக்கு உங்கள் இரசனை கதிர்..கண் முன்னே கற்பனையாய் கொண்டு சென்றே ரசித்தேன் கவிதையை..

    ReplyDelete

இது படிச்சீங்களா?