உள்ளே புதைந்து கிடக்கும்
காமம் கோபம் கண்ணீர் வலி
மகிழ்ச்சி அன்பு பாசம் நேசம்
எல்லாவற்றையும் எளிதாய்
இறக்கி வைத்தேன் எழுத்தில்.
என்னைப் பிரதியெடுத்ததை
இன்னுமொரு வாசித்தேன்
பிரதியின் நாற்றம் சகிக்காமல்
இற்று விழுந்தேன் எழுத்திற்குள்ளே!
நீந்திக்கொண்டிருந்த
எல்லாக் கசடுகளும் முட்டி மோதி
இன்னும் பயமுறுத்தின.
தட்டுத்தடுமாறி வெளியேறி
இன்னும் எழுத்துகளை இட்டேன்
புனைவு என…
போலி மாயத்திரையொன்று
தற்காலிகமாக
காத்துக் கொண்டிருக்கிறது
என்னை என்னிலிருந்து!
-0-
புனைவுக்கான உங்கள் புனைவு அருமையிலும் அருமை.
ReplyDeleteபுனைவுகளின் கரங்களில் உணர்வுகளின் கோரமுகம் ...
ReplyDeleteஇதுல ஏதாவது உள்குத்து இருக்குதுங்களா..
ReplyDeleteபுனைவிற்கான புனைவு....
ReplyDeleteநல்லா இருக்கு அண்ணா...
அருமை.
ReplyDeleteபுனைவு என்ற போர்வை..!
இது புனைவு இல்லீங்களே தலைவரே. ஜூப்பரு
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகலிகாலம்டா சாமி... உள்ளதைச் சொல்றதுக்கு புனைவுன்னு ஒரு முகமூடி?!
ReplyDeleteபழமை பேசி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு
ReplyDeleteதட்டுத்தடுமாறி வெளியேறி
ReplyDeleteஇன்னும் எழுத்துகளை இட்டேன்
புனைவு என…
போலி மாயத்திரையொன்று
தற்காலிகமாக
காத்துக் கொண்டிருக்கிறது
என்னை என்னிலிருந்து!
......நச்!
நல்ல புணைந்திருக்கிறீர்கள் கதிர்
ReplyDeleteஅருமை
நேராச்சொல்றது வௌங்கவே நமக்கு நாலு நாள் ஆவுது.. இதுல புனைவுவேறயா....
ReplyDeleteசெந்தில் சொன்னப்பறம்தான் உள்குத்து இருக்குமோன்னு ஒரு டவுட்டு..
Nice.
ReplyDeleteஏதோ மனதின் தாக்கம் கவிதையாயிருக்கு !
ReplyDelete:-)
ReplyDeleteகவிதை நன்று.
ReplyDeleteஎங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளத்தான் வேண்டி இருக்கிறது..
ReplyDeleteமன விசாரம் கதிர் சார்
very nice