Wednesday, 16 February 2011

இல்லாமல் இருக்காது


விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை
எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்
தொலைத்த கவிதையை அங்கிங்கென
அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்

தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
நெற்றியில் பூத்து நிற்கும்
வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்

சிறகொடிந்து சிறைப்பட்டு
சில நெல்மணிகளுக்காக
சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்

ஒவ்வொரு சீண்டலுக்கும்
வெட்கப்பூ பூக்கும் உங்கள்
காதலியின் வியர்வையில் கசங்கிய
கைக்குட்டைக்குள் இருக்கலாம்

சமிக்ஞைகளில் சட்டை பிடித்திழுத்து
வறண்ட தலையோடு கை நீட்டும்
அழுக்கு அப்பிய குழந்தையின்
களைத்த கண்களுக்குள் இருக்கலாம்

சடசடவென அடிக்கும் மத்தியான மழைக்கு
அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்
சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின்
வறண்ட விழிகளில் இருக்கலாம்

இழுத்துச் செருகிய சேலையோடு
பரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்
எதிர் வீட்டுப்பெண்ணின்
ஈரக் கொலுசில் இருக்கலாம்

பருவம் தப்பிய மழைக்கு
வாடிய பயிரோடு வதங்கிய மனதோடு
அல்லாடும் விவசாயிகளின்
விலா எலும்புகளில் இருக்கலாம்

அதிசயமாய் எப்போதும்
அழகாய் மட்டும் தெரியும்
இன்னொருவன் மனைவியின்
இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்

சமிக்ஞையில் சிவப்பு பூத்தும்
சீறித் தாண்டுபவனின்
முதுகைச் சுட்டெரிக்கும்
உங்கள் விழிகளில் இருக்கலாம்
 
கரைவேட்டி தரைபுரளத்
தலைவன் புகழ்மட்டும் பாடும்
ஒரு பச்சோந்தியின்
பழைய நிறத்தில் இருக்கலாம்

கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
வாசித்து விட்டுப்போகிறேன்
உங்கள் கவிதையாகவே!

-0-

44 comments:

  1. wow..nijamave naan than first ah?

    ReplyDelete
  2. இந்த உலகம் கவிதையால் நிறைந்துக் கிடக்கிறது...
    ஆனால் அவைகள் தேடும் போது கிடைப்பதில்லை..

    தங்கள் கவிதை அருமை..

    ReplyDelete
  3. கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

    ReplyDelete
  4. இல்லாமல் இருக்காதுன்னு எல்லாத்தையும் சொல்லிபுட்டீரே சாமி... மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்குதோ?

    நல்லாருக்கு கதிர்...

    பிரபாகர்...

    ReplyDelete
  5. போடு அத்தனை ஓட்டையும்..

    ReplyDelete
  6. /"இல்லாமல் இருக்காது"/

    ஆமாம்டி ஆமாம். ஊட்டுக்காரம்மா படிச்சா ‘அடி’,’இடி’,’கும்மாங்குத்து’,’வசவு’,’பட்டினி’இப்படி எதுவும் இல்லாம இருக்காது. இந்த குசும்புக்கு தங்கச்சியும் சப்போர்ட்டா? நாந்தின்ன உப்புக்கு நான் விசுவாசமா இருக்கணும். ஊட்டுக்காரம்மாக்கு போட்டு குடுக்கற குடுல ராமாயணத்து சீதை மாதிரி குனிஞ்சதலை நிமிரப்படாது.

    ReplyDelete
  7. கரைவேட்டி தரைபுரளத்
    தலைவன் புகழ்மட்டும் பாடும்
    ஒரு பச்சோந்தியின்
    பழைய நிறத்தில் இருக்கலாம்


    .....ஒவ்வொரு வரிகளிலும் கருத்து செறிவு..... அருமை.

    ReplyDelete
  8. ம்ம்ம். மனசு கேக்கல. கவிதை நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  9. "ம்ம்ம். மனசு கேக்கல. கவிதை நல்லாத்தான் இருக்கு."

    SURRENDER. SURRENDER.

    அப்ப எதிர் கவுஜ இல்லையா?

    ReplyDelete
  10. அசத்தல் கவிதை..

    மீண்டும் மீண்டும் படிக்க படிக்க புதுசு புதுசாய்..

    ReplyDelete
  11. \\கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
    கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
    வாசித்து விட்டுப்போகிறேன்
    உங்கள் கவிதையாகவே!\\
    :-)))

    ReplyDelete
  12. எதிர் கவிதை போட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. சிறுசு சிறுசா போட்டாத்தான் எதிர் கவிதை போடமுடியுமாக்கும். இப்படி பக்கம் பக்கமா எழுதினா எப்படிங்க?

    ReplyDelete
  13. கவிதை கண்வழி
    உள்ளம் புகுகின்றது....

    ReplyDelete
  14. எட்டிப்பார்க்கும் அருவியின்
    சாரலில் கூட இருக்கலாம்

    ஃபேஸ்புக் ப்ரொபைல் போட்டோவச் சொன்னேன்! :))

    ReplyDelete
  15. அருமையாய் இருக்கு கதிர்!!!

    ReplyDelete
  16. எதிர் கவுஜ ஆராவது போட விரும்புனா, தலைப்பு - இருந்தாலும் இருக்கும் :)

    ReplyDelete
  17. //எதிர் கவிதை போட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. சிறுசு சிறுசா போட்டாத்தான் எதிர் கவிதை போடமுடியுமாக்கும். இப்படி பக்கம் பக்கமா எழுதினா எப்படிங்க?

    //

    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  18. நல்லதொரு நிறைவான கவிதை கதிர்.

    ReplyDelete
  19. பாராட்டுக்கள். .

    ReplyDelete
  20. //ஒவ்வொரு சீண்டலுக்கும்
    வெட்கப்பூ பூக்கும் உங்கள்
    காதலியின் வியர்வையில் கசங்கிய
    கைக்குட்டைக்குள் இருக்கலாம்//

    கதிர்,

    நேர்ல வந்து வெச்சுக்கறேண்டி.... (மார்ச்-18)

    ReplyDelete
  21. //அதிசயமாய் எப்போதும்
    அழகாய் மட்டும் தெரியும்
    இன்னொருவன் மனைவியின்
    இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்..//

    என் அக்கா எங்க போனாங்க கதிர்?

    கவிதை தொலைஞ்சி போனதா நீங்க சந்தேகப்படும் இடங்களை அவங்களுக்குத் தெரியப்படுத்தனும்.


    எனிவே... கவிதை அருமை.

    ReplyDelete
  22. நிச்சயம் சொல்றேங்க...

    ReplyDelete
  23. வானம்பாடிகள் said...
    /"இல்லாமல் இருக்காது"/

    ஆமாம்டி ஆமாம். ஊட்டுக்காரம்மா படிச்சா ‘அடி’,’இடி’,’கும்மாங்குத்து’,’வசவு’,’பட்டினி’இப்படி எதுவும் இல்லாம இருக்காது. இந்த குசும்புக்கு தங்கச்சியும் சப்போர்ட்டா? நாந்தின்ன உப்புக்கு நான் விசுவாசமா இருக்கணும். ஊட்டுக்காரம்மாக்கு போட்டு குடுக்கற குடுல ராமாயணத்து சீதை மாதிரி////// ரசித்தேன்..

    ReplyDelete
  24. //சிறகொடிந்து சிறைப்பட்டு
    சில நெல்மணிகளுக்காக
    சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
    ஒரு அடிமைக் கிளியிடம் இருக்கலாம்//

    கிளி சொல்ல முடியாத வரிகள்..அபாரம் கதிர்..

    ReplyDelete
  25. //ஒவ்வொரு சீண்டலுக்கும்வெட்கப்பூ பூக்கும் உங்கள் காதலியின் வியர்வையில் கசங்கிய கைக்குட்டைக்குள் இருக்கலாம்//

    //மத்தியான மழைக்கு அடி மரத்தோரம் அணைந்து கிடக்கும்சாலையோர இளநீர்க்கடைப் பெண்ணின் வறண்ட விழிகளில் இருக்கலாம்
    இழுத்துச் செருகிய சேலையோடுபரபரப்பாய் வீதியைத் தட்டியெழுப்பும்எதிர் வீட்டுப்பெண்ணின் ஈரக் கொலுசில்

    அதிசயமாய் எப்போதும்அழகாய் மட்டும் தெரியும்இன்னொருவன் மனைவியின்இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்//

    என்ன கதிர் கவிதையெல்லாம் பூக்களின் வாசமாவே இருக்கு..

    ReplyDelete
  26. //கரைவேட்டி தரைபுரளத்தலைவன் புகழ்மட்டும் பாடும்ஒரு பச்சோந்தியின் பழைய நிறத்தில் இருக்கலாம்//

    //பருவம் தப்பிய மழைக்கு வாடிய பயிரோடு வதங்கிய மனதோடுஅல்லாடும் விவசாயிகளின்விலா எலும்புகளில் இருக்கலாம்//

    உண்மை உயிர் கொண்ட மாதிரி இந்த வரிகள்..

    ReplyDelete
  27. //விரல் நுனிவரை வழிந்த கவிதையொன்றை எழுதும் முன் எங்கோ தொலைத்துவிட்டேன்தொலைத்த கவிதையை அங்கிங்கென அலைந்து திரிந்து தேடிச்சலித்தும்விட்டேன்//

    தொலைச்சிட்டேன் சலிச்சிட்டேன்னு இம்புட்டு சொல்லிட்டீங்களே..கவிதை நவரசம் கதிர்..

    ReplyDelete
  28. நன்று.

    //வாசித்து விட்டுப்போகிறேன்
    உங்கள் கவிதையாகவே!//

    தாராள மனசு:)!

    ReplyDelete
  29. ஐ என்னோட இந்தப் பின்னூட்டத்துல கூட இருக்கலாம் இல்லையா அண்ணா ? ஹி ஹி .. நல்லா இருக்கு ..

    ReplyDelete
  30. அன்பின் கதிர் -சூப்பர் - கவிதை சூப்பர் -அடுத்தவன் பொண்டாட்டி இடுப்பு மடிப்புல கூட இருக்குமா ?? சரி சரி சரி

    ReplyDelete
  31. //சில நெல்மணிகளுக்காக
    சீட்டெடுக்க மட்டும் விடுதலையாகும்
    ஒரு அடிமைக் கிளியிடம்//

    பல்லாயிரத்துக்கு குறைவில்லாம எடுக்கத்தான் சீட்டு.... சீட்டெடுக்க மட்டும் அல்ல, மந்திரியாகவும் விடுதலையாவோம்!

    ReplyDelete
  32. //அதிசயமாய் எப்போதும்
    அழகாய் மட்டும் தெரியும்
    இன்னொருவன் மனைவியின்
    இடுப்பு மடிப்புகளில் //

    ஓகோ.... ஊருக்குத் தகவல் சொல்லி அனுப்புறேன்... இதொ!

    ReplyDelete
  33. //கரைவேட்டி தரைபுரளத்
    தலைவன் புகழ்மட்டும் பாடும்
    ஒரு பச்சோந்தியின்///

    பச்சோந்திகளா? கோடிகள் காணும் சீமானல்லவா??

    ReplyDelete
  34. //கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
    கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
    வாசித்து விட்டுப்போகிறேன்
    உங்கள் கவிதையாகவே!
    //

    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!
    உங்கள் கவிதை!

    ReplyDelete
  35. தொட்டிலில் உறக்கத்தில் சிரிக்கும்
    உங்கள் பக்கத்து வீட்டு மழலையின்
    நெற்றியில் பூத்து நிற்கும்
    வியர்வைத் துளிகளுக்குள் இருக்கலாம்
    ///

    அருமை...

    ReplyDelete
  36. அதிசயமாய் எப்போதும்
    அழகாய் மட்டும் தெரியும்
    இன்னொருவன் மனைவியின்
    இடுப்பு மடிப்புகளில் இருக்கலாம்
    ////

    ஆஹா.....

    ReplyDelete
  37. கவிதை வாசிப்பில் எனக்குப் போதிய அனுபவம் இல்லை. இனிமுதல் தொடங்கிவிடுகிறேன் உங்கள் கரம் பற்றி...
    “இல்லாமல் இருக்காது” பல உணர்வுகளைத் தந்தது.

    ReplyDelete
  38. தேடிக் கொண்டே கவிதை எழுதுவோர் சங்கம் ஆரம்பியுங்களேன்!!

    ReplyDelete
  39. wow wow...super super..i dont have words to express..

    ReplyDelete
  40. //கொஞ்சம் விசாலமாய்த் தேடிப்பாருங்கள்
    கிடைத்தால் எழுதிவிட்டுச் சொல்லுங்கள்
    வாசித்து விட்டுப்போகிறேன்
    உங்கள் கவிதையாகவே!//
    அருமை..

    ReplyDelete

இது படிச்சீங்களா?