Saturday, 9 July 2011

வீடு








 



வேப்பமரத்தைத் தழுவி சாளரத்தில் சலசலக்கும் காற்று
கதகதப்பைக் கசியவிடும் சுவர் சில்லிடும் தரை
குதறும் குடும்பச் சண்டைகளை தின்று தீர்க்கும் கதவு
இடி மழை வெப்பம் குளிர் எதையும் செரிக்கும் கூரை
களைத்து வீடடைய தாயாய் தழுவும் தாழ்வாரம்
நேசித்துக் கொண்டாட ஒன்றா ரெண்டா ஒரு வீட்டில்

சமையலறை முகப்புச்சுவர் சாவி மாட்டுமிடம்
ஓய்வெடுக்கும் கொசுவை சுவரோடு ஓங்கியடித்த இரத்தக்கறை
காற்றில் தூரியாடும் மாத நாட்காட்டியின் அடிப்பக்க பிறை
சுவற்றில் கால் வைத்து ஓய்வெடுத்ததன் சாட்சியாய் குதிகால் சுவடு
நடக்கப் பழகிய பிள்ளை தாறுமாறாய்த் தீட்டிய கிறுக்கல்கள் என
கறைகள் படியா சுவர்கள் ஆன்மாவைத் தொலைத்தவை

உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு
பிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு





-0-

13 comments:

  1. சூப்பர்,,,,,,,

    ReplyDelete
  2. mm..nothing different.... as unusual..



    super :-)

    ReplyDelete
  3. "மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு" நன்றாக இருக்கு.

    ReplyDelete
  4. /உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடுபிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு/

    மிக அருமை.

    ReplyDelete
  5. Yeppidi irunthaalum
    Home Sweet Home

    ReplyDelete
  6. கதிரின் கவிதை எப்போதும் போல் அருமை. அதுவும் சாளரம், சுவர், தரை கதவு என ஒவ்வொன்றுக்கும் தனியாக கொடுக்கப்பட்ட வேலை ரசனை.

    ReplyDelete
  7. //உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு..//

    கதிர்,

    அப்பப்போ ’சாட்டை’யை உங்கள் கவிதை வரிகள் எடுத்துக் கொள்கிறது.

    சூப்பருப்பு!

    ReplyDelete
  8. //உறங்கவும் புழங்கவும் புணரவுமான வெற்றுக்கூடா வீடு
    பிறந்த மனிதர்களை அடைகாக்கும் கருவறைதானே வீடு//

    கவிதையாய்.....

    ReplyDelete
  9. வீடு என்று சொல்லும்போதே மனம் தழுதழுக்கிறது.அத்தனை சக்தி இருக்கிறது அந்தக்கூட்டுக்குள் !

    ReplyDelete
  10. வீடு பற்றிய அருமையான கவிதை.வெறும் சிமெண்ட்டும் செங்கல்லும் போட்டு கட்டப்பட்டது மட்டுமேவீடு என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு அது மனிதர்களை அடைகாக்கும்கருவறை என்பதை எடுத்துரைத்த அழகிய கவிதை.

    ReplyDelete

இது படிச்சீங்களா?