போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!
-0-
சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!
-0-
தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!
சிலநேரம் அம்மணங்களையும்!
-0-
பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!
-0-
கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!
-0-
வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்
-0-

பெற்றேன் பேறு :-)
ReplyDeleteSuper thala
ReplyDeleteபடிச்சா சந்தோஷத்தில் மனசு peg peg nu அடிச்சுக்குது
ReplyDelete"டாஸ்மாக்" அருமை
ReplyDeleteமிக நன்று ( மிதமாக இருக்கு )
ReplyDeleteஎல்லா கட்டிங்கும் சூப்பர் மேயரே. கலக்கல் கவிதைகள்னா டாஸ்மாக் காரன் கம்ப்ளெயிண்ட் பண்ணீருவான்ல:)))
ReplyDeleteசியர்ஸ்! :)
ReplyDeleteபோதைப் பிண்ணனியில் தேன் கவிதைகள்.
ReplyDeleteஅருமை அண்ணா.
மச்சி, கோட்டர் சொல்லேன்!
ReplyDelete'baru'kkulley nalla naadu..
ReplyDelete