Thursday, 20 October 2011

விண்மீன்கள் பூத்த நிலவு


கைகளில் ஏந்தும் முகத்தில்
நிலவின் பொலிவு

கூர்ந்து நோக்கும் விழிகளில்
நட்சத்திரங்களின் மினுமினுப்பு

சிறகடிக்கும் இமைகளில்
படபடக்கும் உள்ளம்

மூச்சுக்காற்றின் கதகதப்பில்
குளிர்காயும் உயிர்


ஊஞ்சலாடும் காதணிகளில்
தூளியாடும் மனது

புன்னகைக்கும் இதழ்களில்
வழிந்தோடும் கவிதை


நீ இல்லா பொழுதுகள்
நிலவில்லா இரவுகளாய்...

நெருங்கியருகில் வருகையில்
விண்மீன்கள் பூத்த நிலவாய்
கூடவே குளிராய், குதூகலமாய்!

படம் : இணையம்
~

13 comments:

  1. நிலவில் பூத்த நட்சத்திரங்களைப் போல உங்களின் கவிதை வரிகள் மனதிற்குள் பூக்களாய் பூக்கிறது.

    ReplyDelete
  2. oonchal aadum kaathanikalil
    thooliyaadum manathu....

    -kavithai varikal ..nalla karpanai.

    "oonchalaadum manasu" -endru irunthaal,innum uyirottamaaka irunthirukkum.
    by..jallipatty palanisamy.

    ReplyDelete
  3. உலர்மனத்தில் குளிர்கவிதை!

    ReplyDelete
  4. Hats off to you Kathir. After reading I was speechless.

    ReplyDelete
  5. அருமையான கவிதை.
    நட்சத்திரங்கள் "விண்மீன்கள்" என்றிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.
    நாஞ்சில் இ. பீற்றர்
    www.fetna.org

    ReplyDelete
  6. @ jalli
    //"oonchalaadum manasu" -endru//

    தூளி என காரணமாகத்தான் இட்டேன்

    @பீற்றர்
    நன்றிங்க அய்யா!
    விண்மீன்கள் என மாற்றிவிடுகிறேன்.

    ReplyDelete
  7. நல்ல கவிதை.. குளிர்ச்சியாய்...

    ReplyDelete
  8. //ஈரோடு கதிர் said...
    @ jalli
    //"oonchalaadum manasu" -endru//

    தூளி என காரணமாகத்தான் இட்டேன்//

    ஓ, இதான் இடி மின்னலுக்குக் காரணமா? தூளியாட உடாம, ஒரு நிலையிலயே நிக்க வையுங்க மாப்பு அப்ப!!

    ReplyDelete
  9. மனதிற்குள் பூக்களாய் கவிதை வரிகள்...

    அருமை.

    ReplyDelete

இது படிச்சீங்களா?