Saturday, 29 October 2011

வினை


பளபள சொகுசுக் காரின்
பக்கவாட்டுக் கண்ணாடியில்
அழகு பார்த்துக் கொண்டிருந்த 
அழுக்குப் பிள்ளையை
விரட்டிக் கொண்டிருக்கையில்

முன்பக்க முகப்பு விளக்கருகே
மூத்திரம் பாய்ச்சிக் கொண்டிருந்தது
கால் தூக்கியபடி தெருநாய் ஒன்று!

 

 ~*~

 
எல்லாம் ஈட்டிய களிப்பில்
மாலைகள் சுமக்கும் தலைவனின்
ஓங்கி உயர்ந்த கட்-அவுட்!

திட்டித்தீர்த்து
காறி உமிழ்ந்து கொண்டிருந்தான் 
தான் புழங்கிய இடத்தின்
ஆக்கிரமிப்பைச் சகிக்காத
மனம் பிறழ்ந்தவன்



~*~

8 comments:

  1. மறுபக்கம் ஆய்ந்து பார்த்தால் இப்படியான பல உண்மைகள் வெளிவரும். அகம்பாவம் அடங்கிப் போகும். ஒரு தெளிவு பிறக்கும்.

    ReplyDelete
  2. வாவ் சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள்..

    ReplyDelete
  3. நல்ல வரிகள் தோழரே..சிந்திக்க வேண்டியவைதான்..

    ReplyDelete
  4. அருமை... இரண்டும் எதார்த்தம் நிறைந்த அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

    சே.குமார்
    மனசு

    ReplyDelete
  5. வினையும் எதிர்வினையும் அபாரம்

    ReplyDelete
  6. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் - தூள்!

    ReplyDelete
  7. கதிர்...முகத்திலறைகிறது இரண்டு எண்ணங்களும் !

    ReplyDelete

இது படிச்சீங்களா?