Saturday, 24 March 2012

பூக்கள் பூக்கும் தருணம்



நீயும் படிக்கவில்லை
நானும் படிக்கவில்லை
விரல் நுனி உரசலில்
வேதியல் மாற்றம் நிகழுமென்பதை

நோக்கும் நொடியிலெல்லாம்
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…

வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன் இதழ்களில்
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…

அன்பு ஆர்பரிக்கும் தருணங்களில்
அணையிலிட்டுத் தேக்கி
திகட்டிய அன்பைக் கொஞ்சம்
ஆவியாக்கி ஊடல் பூணுகிறோம்

அன்பு கனத்த கரு மேகம்
கிழிந்து பொழிகிறது
புத்தம் புது அன்பு
புதுவேகம் பூணுகிறது

கற்ற மொழிகளெல்லாம் தீர்ந்து
கரைந்த மௌனப் பொழுதில்
உடலும் ஒரு மொழி என்பதை
உன்னை வாசிக்கையில் அறிகிறேன்

மௌனங்களின் வரிகளை வாசிக்கவும்
கற்பனையில் வாசனையை நுகரவும்
கனவுகளில் வர்ணங்களைக் காணவும்
கற்கிறேன் காற்றாய் உனை சுவாசிக்கையில்

-

13 comments:

  1. அருமை அருமை . நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை!.
    //உடலும் ஒரு மொழி என்பதை// -
    பல மாற்று திறனானிகளுக்கு உடல் அசைவும் மொழி தான் !!

    ReplyDelete
  3. மிக அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. ஆஹா... என்ன ஒரே ரொமான்ஸ் மூடு.:-)))
    சூப்பர்.

    ReplyDelete
  5. பாஸ், கட்டுரை நல்லா இருக்கு பாஸ்! ஆமா, இது எதைப்பத்தினது?

    ReplyDelete
  6. உங்கள் காதல் பாத்திரம் நிரம்பி தளும்புகிறது....!

    ReplyDelete
  7. நான் நன்கு ரசித்த கவிதை. அருமை.

    ReplyDelete
  8. நான் மிகவும் ரசித்த நல்ல கவிதை. அருமை.

    ReplyDelete
  9. மிக அருமை கதிர்....ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளவை...

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியும் அழகு, அருமை அண்ணா

    ReplyDelete
  11. மொழிகளை கடந்த மவ்னம் கசிகிறது...ரகசியமாய் !

    ReplyDelete

இது படிச்சீங்களா?