தேவையான ஆணிகளைப் பிடுங்குவதில் வரும் பிரச்சனைகளை விட, தேவையற்ற ஆணிகளைப் பிடுங்குவதில் வரும்அடிதடிகள்தான் அதிகம்.
~
விழித்து எழுந்து விழிப்பு தீரும்நேரத்திற்குள் அன்பு - கோபம், பாசம் - வேசம், காதல் - காமம், பரிவு - பழிஎனஎல்லாவற்றையும் செலவழிக்க வேண்டியுள்ளது
~
ஊர்ல உருப்படியாப்போற ஒரேதொழில்மெழுகுவர்த்திதான் போல. அன்னாஹசாரே முதல்அணுஉலைவரைஎந்தப்போராட்டம்னாலும் மெழுகுவர்த்திதான்!
~
காங்கிரஸ் ஆதரவு உண்டு, அதனால்தான் நான்மத்தியமந்திரியாக இருக்கிறேன் - அழகிரி
#அண்ணே, நீங்ககலைஞர்புள்ளைங்கிறதாலதான மந்திரியா இருக்கீங்க!
~
பிடிக்காத படங்களைச் சேமிக்க விரும்புவதில்லை, இருப்பது நாம்எனினும்!
~
60% பேர்திறந்தவெளியில் மலம்கழிப்பவர்கள் உள்ளநாட்டில் 70 கோடிபேர்செல்போன்களை வைத்துள்ளனர் # இந்தியாடா :(
~
“புகழுக்கு மயங்காதவர்” எனப் புகழ்ந்தும் வீழ்த்தலாம்!
~
நாக்கைத் துருத்தி பேசக்கூடாதுன்னுசட்டம்ஏதாவதுஇருக்குதா? - கேப்டன்
# இதுவரைக்கும் ஒருபாகிஸ்தான் தீவிரவாதிகூட இததப்புனு சொல்லலையே!
~
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள்தான் இஸ்ரேலிய தூதர்காரில்குண்டுவைத்துள்ளனர் - ப.சி # தீவிரவாதிகளுக்கான நற்சான்றிதழ்களுக்கு அணுகவும்! :(
~
இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் வெறும் ”ரூ.24.5 லட்சம்கோடி” மட்டுமே! # டேய்... எல்லாம் நல்லாருங்கடா! :(
~
ஒவ்வொருவருக்குள்ளும்ஒரு’உலகம்’ இருப்பதை, நாம்ஏற்கமறு(ற)க்கும்போது சிக்கல் பிறக்கின்றது.
~
காதலர் தினத்தில், தமிழ்க்கவிதைகள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர் # எப்படியெல்லாம் தமிழைவளர்க்கவேண்டியதா இருக்கு?:)
~
விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமதுகணவர்வீட்டில் வசிக்கஉரிமைஉண்டு- உச்சநீதிமன்றம் # மவனேசெத்தடா நீ! :))
~
காதலர்களை காதலர்தினத்தன்றுதாலியோடு துரத்தும் ”நல்லவர்களே”, ஒரு”எட்டுப்பவுன்” தாலிக்கொடியோடு துரத்தஉங்களுக்கு தில்இருக்கா? # சவால்:)
~
ஈமூ கோழிகள் இந்தியாவின் தேசியப்பறவை எனஅழைக்கப்படலாம் # விளம்பரம் விட்டில்கள் :(
~
கிரைண்டர் மிக்ஸி கொடுத்தா போதுமா? "கரண்ட்எங்கே" -கேப்டன் #ஊர்லஇருக்கிற ட்ரான்ஸ்பார்மர் எல்லாம் வெடிக்கவெச்சுட்டு பேச்சப்பாரு பழமயப்பாரு!
~
பெண்களின் செல்போனுக்குத்தான்அதிகம்“ராங்கால்” அழைப்புகள் வருகின்றன #ஆராய்ச்சி முடிவு:))
~
வீட்டுக்காரம்மாநீங்க#Feb14க்கு யாருக்குமே லவ்லெட்டர் கொடுத்ததில்லையானு உசுப்பேத்துறாங்க #உணர்ச்சிவசப்பட்டு உளறிடாதடா கைப்புள்ள :)
~
எதிரெதிர் துருவங்களும் ஏதோ ஒன்றில் ஒத்துப்போகிறார்கள்.
# காங்கிரசும் சு.சாமியும் ராஜபஷ்சே விச(ய)த்தில்ஒத்துப்போவதுபோல்!
~
விழாக்களில் பணத்தில் மாலை போடுவது, பணத்தில் குடைசெய்துபிடிப்பது.... இதையெல்லாம் எங்கய்யா கத்துக்கிட்டீங்க!
~
இந்த கதாநாயகனுங்க மட்டும், வெளிநாட்டுல கூடவீதிவீதியாதெளிவாஓடுறானுங்களே. மூளைக்குள்ளே கூகுள்மேப்வெச்சிருப்பாங்களோ #டவுட்டு!
~
வீட்டில் ரிமோட், வெளியில் செல்போன் மனிதனின் ஆறாவதுவிரல்
~
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் தலைவர்களுக்காகஓங்காரமாய் சண்டையிடும் தொண்டர்கள்!
~
உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இந்தியர்கள்தான் - ஆய்வில் தகவல்# எவனோதப்பாதுப்புகொடுத்திட்டான் போல!
~
ஒதுங்கிச்செல்வதில்சண்டை- பஸ்டிரைவர் மீதுலாரியைஏற்றிக்கொலை செய்தலாரிடிரைவர் # கொலைசெய்யகாரணத்தைவிட ஆள்இருந்துட்டாபோதும் போல:(
~
அரட்டைப்பெட்டியில்அதிகமான பெண்கள் ஆன்லைனில் இருந்தும் பேசாமல் வீம்புபிடிப்பவனே உண்மையான ”அப்பாடக்கர்” :))))
~
செய்ய இயலாததையும் சேகரித்து, நம்மைச் சார்ந்தவர்கள் / குழந்தைகளிடம் அறிவுரையாக சுமத்துவதில் நம்மைவிட சாலச்சிறந்தவர்கள் எவருமில்லை.
~
பூவுக்கு மட்டுமே காசு அழகுமென்மைவண்ணம்வாசம்இலவசமே
~
தமிழகத்தில் மின்வெட்டு சரியாகும்வரை மின்கட்டணம் வசூலிக்கக் கூடாது - காங்கிரஸ் MLA பிரின்ஸ் # நீங்கஒருவில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!
~
மன்மோகன்சிங் டிவிட்டரில் தொடரும் ஏழே பேரில்அமெரிக்காவின் ”வெள்ளைமாளிகை”யும் ஒன்று. #ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு :)
~
குழந்தைகள் மீது செலுத்தும் கோபம்போல் கோழைத்தனம் ஏதுமில்லை!
~
நம்மை நாமே மன்னிக்க முடிவதில்லை # பலநேரங்களில்
~
சென்னை ஆசிரியை கொலையைசட்டஒழுங்கு சீர்குலைவுனு ஆரம்பிச்சிடாதீங்க. இதுபெற்றோர்கள் தன்மையின் இயந்திரத்தனமான சீர்குலைவு #விலைமிகு எச்சரிக்கை
~
2ஜிஊழலுக்கு ராசாமட்டும்தான் காரணமா? - அத்வானி * கர்நாடக கோமாளித்தனங்களுக்கு எடியூரப்பா மட்டும்தான் காரணமா? # அடபோங்கபாஸ்!
~
நீ செலவிடும் நேரத்தை இன்னொருவர் வீணடிக்க அனுமதிக்காதே #தத்துப்பித்து
~
முழு மதுவிலக்கு கோரிபோராட்டம் - ராமதாஸ் # இப்பத்தான் 3 வண்டியில உங்ககட்சிக்காரங்க, பக்கத்து டாஸ்மாக்ல ’சோலிய’ முடிச்சிட்டு கிளம்புனாங்க
~
ஒரே சேனலில் ஏமாறச்சொல்லியும், ஏமாறவேண்டாம் எனவும்எச்சரிக்கை கொடுக்கும் அதிசயம் “ஈமு” கோழிகளுக்கு மட்டுமே!
~
பாரதிதாசனும் ஒரு தீர்க்கதரிசிதான். ”இருட்டறையில் உள்ளதடா உலகம்”னு எப்பவே சொல்லிட்டாரே #கரண்டு கட்
~
’அங்கங்கே பொத்தான், 2 பக்கமும் பாக்கெட், தோள்பட்டையில் பட்டை இருக்கிற சட்டை போடுறதுதான்’ இளமைனு இந்த பெருசுங்ககிட்ட யாரோ சொல்லிட்டாங்க போல! :)))))
~
6 மாசம்முன்னால நத்தம்விஸ்வநாதன், உபரிமின்சாரத்தை வேறுமாநிலங்களுக்கு வழங்குவோம்னு சொன்னப்பவே இப்படியெதாச்சும் நடக்கும்னு நினைச்சேன்
~
மின்வெட்டு நிதர்சனம் எனும் சூழலிலும் ”கிடைக்கும்வரை பயன்படுத்துவேன்” எனமின்சாரத்தை வீணடித்தலை எவரும்தவிர்ப்பதாகத் தெரியவில்லை #நானும்:(
~
சமீபகால அவஸ்தைகளில் கொடுமையானது, திடீரென இறந்துபோகும் நண்பரின் / உறவினரின் பெயரைசெல்போனிலிருந்து நீக்குவதா? வைத்திருப்பதா?
~
எளக்கியவா(வியா)திகளுக்குத்தான் எளக்கியச் சண்டைகள் புரியும்போல இருக்கு!
#ஒன்னுமே புரியல. புரிஞ்சு மட்டும் என்னகிழிச்சிடப்போறோம்! :)
~
டாஸ்மாக் விடுமுறை தினங்களை உலகத்திற்கே விடுமுறை தினமாக கருதுகிறான் தமிழன்
# நாலுபேர்கேட்டுட்டாங்க ’இன்னிக்கு பேங்க்இருக்கா லீவா?’ :)
~
காலை 7.30 மணிக்கே சாலைசந்திப்புகளில் வாகனங்கள் வரிசைகட்டிபச்சைவிளக்கிற்காக நிற்கும் நகரங்களின் வளர்ச்சியை ’வீக்கம்’ என்றுசொல்லலாம்
~
“பிடிக்கல” எனச் சொல்வதைப் பெரும்பாலும் ரகசியமாக ரசிக்கின்றோம் / ஆராய்கின்றோம்.
~
ஒரு ’ட்விட்’ எழுதயோசிக்கும் நேரத்தில் உருப்படியாக எதாச்சும் செய்யலாம் எனபுத்திசொல்கிறது, மனசுகேட்கமாட்டேன் என்கிறது #எழுதியாச்சு! :)
~
பாராட்டுகளில் ”செயல்கள்” பின் தள்ளப்பட்டு மனிதர்களே முன்னிறுத்தப்படுகின்றனர்
~
”என்மனைவிகள் கூடஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்” - கருணாநிதி # ”சொன்னபேச்சுகேக்கமாட்டேங்கிறியே நைனா” – ஸ்டாலின்
~
மனிதன் வாழ நேமாலஜி, நியூமராலஜி, வாஸ்து, ராசிக்கல், பரிகாரம் எனஎல்லாம் செய்தபிறகும் ’இடைவிடாம’ மூச்சுவிடவேண்டியிருக்கு #பாவம்யா மனுசன்
~
மீசை அரும்பும்போது சீக்கிரம் முளைக்கவேண்டுமென நினைத்தவன், மீசைநரைக்கும்போது ஏன்தான் இதுமுளைச்சதோனு நினைக்கிறான்.
~
கேப்டன் கைய நீட்டிநாக்கைகடிச்சப்போ ஆளுங்கட்சி MLA 10 பேர் பறந்துபோகாம, சட்டசபை ட்ரான்ஸ்பார்ம் வெடிக்காம இருந்துதேனு சந்தோசப்படுங்கப்பா!
~
மின்சாரம் தயாரிப்பதில் சீனாவைவிட இந்தியா பெரிதும் பின்தங்கியுள்ளது -ப.சிதம்பரம் #பாஸ் நாம ஊழல்லஎப்பவோமுன்னேறிட்டோம் பாஸ், கவலையவிடுங்க!
~
தோசைக்கு ஊறுகாயைத் தொட்டுக்கலாமா என யோசிக்கையில் அண்டைவீட்டுச் சகோதரிஜன்னல்வழியேசட்னிதரதோன்றுகிறது ”கடவுள்இருக்கான் கொமாரு”:)
~
பொதுஇடத்தில் யாரோ “டேய்”எனயாரையோகூப்பிட, கூப்பிடப்படுபவரைத் தவிரஅதிகப்படியானோர் ”நம்மையா இருக்குமோ?”வெனத்திரும்பிப்பார்க்கின்றனர்!
~
கைபேசியை காதில் ஒத்தியவாறு கடந்துபோகும் பெண்: ”நமக்குள்ள எதுக்கு SORRY சொல்றே, இப்பSORRY சொன்னதுக்கு SORRY சொல்லு” #அடங்கொன்னியா!
~
கனவில் செத்துப்போகின்றவர்கள், நிஜத்தில் செத்துப்போவதில்லை. நிஜத்தில் செத்துப்போவோர் கனவில்சாவதில்லை. #அனுமானம்
~
2ஜி- சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் நடப்பதை அறியஆவலாகஉள்ளேன் - ஜெ# பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடப்பதை அறியஆவலாகஉள்ளேன் - ஆ.ராசா
~
தாமதமா படுத்து 7 மணிவரைதூங்கலாம்னு நினைக்கிறப்ப மட்டும் எப்படித்தான் குழந்தைக மூக்குவேர்க்குமோ தெரியலே 5 மணிக்கே எழுந்து வந்துஎழுப்புதுக
~
பிடிக்காத வேலையை தள்ளிப்போடுவதில் இருக்கும் ஆர்வம், பிடித்த வேலையைச் செய்வதில்கூட இருப்பதில்லை!
~
”கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்” #தமிழகஅரசியல்வாதிகளின் புதியகண்டுபிடிப்பு!
~
பசியோடு வேலைசெய்றவனை, கெடாக்கறி தின்னுட்டு வெத்தலை மென்னுட்டே சாப்பிடபோகலையா மச்சினு கேட்கிறவங்களுக்கு அந்நியன்ல எதும்தண்டனையிருக்கா? :)
~
முடிவடையா பாதாள சாக்கடை, தீராதமின்தட்டுப்பாடு, சிதைந்த சாலைகள் குறித்து சட்டமன்றத்தில் சண்டைஇல்லை. கேவலம், யார்பெரியவர் என்பதற்காகவே! :(
~
முதுமலை முகாம் நிறைவடைந்து கோவில்களுக்கு திரும்பிய யானைகள் “ஏன்தான் யானையாபொறந்தோமோ”னுநினைச்சிட்டிருக்கும். :(
~
ஒரு லட்சத்துக்கு மாதம்ரூ.23000 லாபம்தர்றேங்கிறவனை நம்பிஏமாறுறவங்களை, இன்னும் எத்தனையாயிரம் ஏமாற்றுக்காரர்கள் வந்தாலும் திருத்தமுடியாது
~
”எப்போதும் மற்றவர்களுக்கு மட்டும் நல்லவனாக இருப்பது எப்படி?”னு ரெபிடெக்ஸ்ல புத்தகம் எதும்போட்டிருக்காங்களா?

அருமையான ட்விட்கள்!
ReplyDeleteMr.Kathir,
ReplyDeleteHighly readable/ enjoyable Twit's. Keep posting. Thanks.
VV