அடிமையாகிவிட்ட ஒன்றைமற்றவர்கள் ’அதற்குநீஅடிமையாகி விட்டாய்’ என்றுபரிகசிப்பதைத் தவிர்க்கவே, அதைஅதீதமாய் சிலாகிக்கிறோம்!
~
டீசல்விலைஏறினப்போ பஸ்நிலைய கழிவறையில சிறுநீர் கழிக்க1 ரூவாஏத்தினசமூகத்துல, மின்கட்டணஉயர்வுக்கு எங்கெங்கு விலைஉயரப்போகுதோ தெரியல!?
~
அரசியல் தலைவர்களை கொலைசெய்தவர்களைத் தண்டிக்க துடிப்பதிலும், விடுவிக்க முயல்வதிலும் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது! #அரசியல்ல சாதாரணமப்பா!
~
காலப்போக்கில் தொலைந்து போனவை, தீர்ந்து போனவை, மீட்கமுடியாதவை ’மறக்கமுடியாதவை’ பட்டியலில் தானேசேர்ந்துகொள்கின்றன!
~
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைச்சபிறகுஒழுங்கா சோறுபோடமாட்டாங்களா!? ரொம்பஇளைச்சு, குண்டர் சட்டம்ஒவ்வொன்னா ரத்தாகுதே?
~
ராமஜெயம் கொலைக்காக தினத்தந்தி செய்தித்தாளோடு தேநீர்கடையில் ஒருவர்பொங்கிக்கொண்டிருந்தார் தேநீரைவிட சூடாக#தேநீர்கடை அரசியல் சுவாரசியம்
~
நீசுறுசுறுப்பாய் இயங்குகையில் எனக்குள் கிறுகிறுப்பு நிரம்புகிறது, நீசோம்பல் முறிக்கையில் என்னுள் அசதிகரைகிறது.
~
”விசுவாசம்” என்பதை”விசுவாசம்”னு தப்பா எழுதுறவங்களை என்னபண்றது!
~
தீனிபோட்டாசமத்தாஓடுது, பட்டினி போட்டாதறிகெட்டு ஓடுது..... கற்பனைக் குதிரை
~
மத்தியஅரசுக்கும் ராணுவத்துக்கும் இடையேஇடைவெளி ஏற்பட்டுவிட்டது - பாஜக # அங்கே மட்டுமா, மத்தியஅரசுக்கும் மக்களுக்குமே பெரியஇடைவெளிதானே!
~
ஐசிஐசியை ப்ரடன்சியலில் ’அப்பாஆகறதுக்கு லைசென்ஸ்’ தர்றாங்களாமே! - அமிதாப் சொல்றாரு # லைசென்ஸ் கூடவேஸ்கூல்ஃபீஸும் கொடுத்துட்டா பரவாயில்ல
~
சரியானநேரத்தில் தவறவிட்டுட்டு, தவறானநேரத்தில் தவிப்பது ரயில்மட்டுமல்ல, திருமணமும்தான்.
~
மரணம்குறித்து ஒருமுறையேனும் பயம்கொள்ளாதவன், இன்னும் பிறக்காதவன் மட்டுமே!
~
கிழக்கே மீனவர்கள் தாக்குதல், மேற்கேமுல்லைப்பெரியாறு, தெற்கேகூடங்குளம், வடக்கேகாவிரி # இந்தியன் என்பதில் பெருமிதம் கொ’ல்’
~
சினிமாவில் நடிக்கபிரதமரிடம் அனுமதிபெற்றேன் - நெப்போலியன்
# உங்களுக்கு அனுமதிகொடுக்க அவருசோனியாகிட்டே அனுமதிவாங்கினாரா?
# உங்களுக்கு அனுமதிகொடுக்க அவருசோனியாகிட்டே அனுமதிவாங்கினாரா?
~
மின்வெட்டுகுறித்து அதிகமாக, மிகஅதிகமாக, மிகமிகஅதிகமாக தமிழன்கோவப்படும் இடம், டாஸ்மாக்கில் ’கூலிங்பீர்’ கிடைக்காத மதியநேரத்தில்தான்!
~
கிடைக்காத பொழுதுதேடப்படுவதாகவும், கிடைக்கும் பொழுதில் அவசியமற்றதாகவும் இருக்கின்றன. # நிறைய!
~
கோடைக்கு நீர்மோர், குடிநீர் பந்தல்- கட்சியினருக்கு ஜெ. வேண்டுகோள்
#”விலையில்லா நீர்,மோர்” காசுக்கு கரண்ட்தராம, எதெதையோ இலவசமாதர்றீங்க
#”விலையில்லா நீர்,மோர்” காசுக்கு கரண்ட்தராம, எதெதையோ இலவசமாதர்றீங்க
~
ஒருவனைஅடித்து துவைப்பதைவிட, அவதூறினைப் பரப்புவதே கொடும்வன்முறை
~
பேசநிறையஇருப்பதும், பேசஒன்றுமே இல்லாததும் காதல்
~
”மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு……” - ஓ.பன்னீர்செல்வம் #‘தமிழகஅரசு’ என்பதையும் ’மாண்புமிகு அம்மாவின் அரசு’னு மாத்திடுவாங்களோ!?
~
இவ்ளோதூரத்துல இருக்கிற நமக்கேஇப்படிசுடுதே! அங்கேயே இருக்கிற சூரியனுக்கு எவ்ளோசுடும்! # வெயில்ஜாஸ்திப்பா! :))))
~
கண்டபடி உயரும்சென்னைவீட்டுவாடகை# இன்னும் கொஞ்சநாள்ல வீட்டோட மொத்தவிலையையே ஒருமாசவாடகைனு கேட்டாலும் கேப்பாங்க போல!
~
ஆயுதம்ஏற்படுத்தும் கண்ணீரை விடஅன்புஏற்படுத்தும் கண்ணீர் பெருவெள்ளமாகப் பாயக்கூடியது.
~
டாஸ்மாக் பார்வாசல்சுவரில் சாய்ந்தவாறு தேநீர்அருந்துபவன் ஒருஹைகூகவிதையாய்த் தென்படுகிறான்!
~
19 வயது நண்பனுக்கு மதுகொடுத்து, மப்பில் போதைஊசிபோட்டு, கழுத்தை நெரித்து கொலை. செய்தவர்கள் வயது20-21
# என்னமோ நடக்குது இந்தியாவில் :(
~
”Sorry” எனும் வார்த்தை எப்போதும் உதட்டிலிருந்து, எப்போதாவது உள்ளத்திலிருந்து!
~
வறுமைக்கோடு எவ்ளோனு கணக்குப் போடத்தெரியாத கபோதிகதான் வறுமையை ஒழிக்கதிட்டமும் போடுமோ! :(
~
நகர்புறத்தில் வறுமைக்கோடு 28 ரூபாய்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானிகிட்டே 1 ரூபாகூடபோட்டுக்கொடுத்து ஒருநாளைக்கு பொழப்பு நடத்துனு சொல்லனும்!
~
பணப்போராட்டத்தையே பலநேரங்களில் மனப்போராட்டம் எனக்கொள்கிறோம்!
~
6ஜி, 7ஜி, 8ஜிவர்றவரைக்கும் 2ஜிவழக்கைநடத்துவாங்களோ!? #டவுட்டு!
~
பலநேரங்களில் துன்பங்களை ஆற்றுப்படுத்துபவை மற்றவர்களின் பெருந்துன்பங்களே
~
இரண்டாவது இடம்யாருக்கு எனும்’ஈகோ’விற்காகவே நடத்தப் பட்டிருக்கிறதுசங்கரன்கோவில் இடைத்தேர்தல்! :)
~
இந்தியாவில் ஏழைகள்9% குறைந்துள்ளனர். வறுமைக்கோடுக்கான வருமானம் ரூ5-10னுசொல்லியிருந்தா இன்னும் குறைஞ்சிருப்பாங்களே.
~
பள்ளிகல்லூரி புரியவைக்காத ”கெமிஸ்ட்ரியை” பருவம்புரியவைக்கின்றது!
~
காலையில் வீதிமுனைகளில், பிள்ளைகளை பள்ளிவாகனத்தில் திணித்துவிட்டு, வீடுதிரும்பும் பெண்களின் முகத்தில் ஒருவிடுதலை உணர்வுதெரிகிறது #நகரம்
~
சூதும்வாதும்நிரம்பி வழிகிறது அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம் எனச்சமாதானம் சொல்லப்படுகிறது. #பாவம்சாணக்கியன்!
~
படைப்பாளியை முன்னிறுத்தியே படைப்புகளை அணுகுகிறோம்!
~
தான்செய்யவேண்டிய வேலைக்கு கூலித்தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதைஊதியம்பெறும்ஆதரவற்றோரிடம் கறக்கும் கையூட்டு மலம்தின்பதற்கு ஒப்பானது
~
யாருமற்று, நீண்டுகிடக்கும் மாலைநேரத்து தேசியநெடுஞ்சாலை போல், ஞாயிறுகாலைபரபரப்பற்று அமைதியாக இருக்கின்றது!
~
மின்சாரமற்ற முன்இரவுகளில் நகரத்து குடியிருப்புப் பகுதிநிசப்தம் கவிதையாய் தெரிகிறது. கவிதைஎல்லோருக்குமா புரிந்து (பிடித்து) விடப்போகிறது!
~
அதிமுகஎன்தலைவர்MGR-ன்கட்சிஎன்பதால் பொறுமையாக இருக்கிறேன் - விஜயகாந்த் #அப்படியே திமுக-வும் MGR இருந்த கட்சிதானேனுவிட்டுடு தலைவா!
~
