தகவல்தொழில்நுட்பம் நாம்வாழும்தூரத்தைக் குறைத்துப்போட்டதில் கசங்கிப்போனது நாம்எழுதிவந்த கடிதங்களும்தான். கடந்துகொண்டிருக்கும் தலைமுறை நினைத்து நினைத்துச் சிலாகிக்க இருக்கும் நினைவுகளில் மிஞ்சியிருப்பது கடிதங்களும், கடிதங்களோடு காலம்காலமாய் நிகழ்ந்த சுவாரசியங்களும்தான். என்னதான் இனிஅதைச்செயல்படுத்தினாலும் மின்மடல், குறுந்தகவல் என்றுதொலைத்தொடர்பு மிகமிகஎளிமையாகிவிட்ட காலகட்டத்தில் அந்தச்சுகானுபவம் கிட்டாதுதான்.
நானறிந்த தமிழ்ச் சொந்தங்களில், உள்ளூர், மாவட்டம், மாநிலம், உள்நாடு எனப்பிரிந்துகிடக்கும் மனிதர்கள் பெரியஇடைவெளிகளிலின்று கூடிமகிழவாய்ப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதேசமயம்வெளிநாடுகளுக்குப் பணிநிமித்தம் பெயர்ந்த தமிழ்உறவுகள், தன்குடும்பம், பிள்ளைகள் எனமிகக்குறுகிய வட்டத்திற்குள் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மெலிதாய் இருக்கும் மனக்குறை தங்கள்பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் தங்கள்முந்தைய தலைமுறைக்குமான இடைவெளி நீண்டுகிடக்கின்றன என்பதுதான்.
என்னதான் ஆண்டுக்கொரு முறைதாய்நாட்டுப் பயணம், வாரம்ஒருமுறைதொலைபேசியில் பேச்சு, எப்போதாவது மின்அரட்டைமூலம்காணொளிஉரையாடல், சிலநேரங்களில் மின்மடல் தகவல்பரிமாற்றம் என்றிருந்தாலும், எதையுமே சேமித்து வைத்தோ, அடைகாத்துச் சிலாகிக்கவோ வாய்ப்பின்றி மிகக்வேகமாகஓடிக்கொண்டிருக்கின்றோம்
அன்புள்ள அப்பாஅம்மாவுக்கு / தாத்தாபாட்டிக்கு,
நலம், நலறியஆவல்….. எனத்தொடங்கும் கைப்படஎழுதப்படும் கடிதங்களில் வெறும்எழுத்துகள் மட்டுமா நிரம்பியிருக்கும். உயிரோட்டமாய், எழுதுபவரின் அன்பும், அக்கறையும் ஒவ்வொரு எழுத்தில் வளைவுநெளிவுகளிலும் கலந்துகரைந்துதானே கிடைக்கும். எத்தனையெத்தனை அன்பு, மகிழ்ச்சி, பாசம், பிரியம் அதில்நிரம்பியிருக்கும் என்பதைஅனுபவித்தவர்களால் மறந்திடமுடியுமா?
அதேமகிழ்ச்சியைச் சிந்தாமல் சிதறாமல், வெளிநாடுகளில் வாழும்தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழகத்தில் வாழும்அவர்தம் உறவுக்கும் ஏற்படுத்தித்தர அமெரிக்காவில் இருக்கும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை அமைப்பால் தோற்றுவிக்கப்பட்டதுதான் கடிதம்.நெட் கடிதச் சேவைமையம்.
கடிதம்.நெட் என்பது…
கடிதம்.நெட் என்பது வெளிநாடு வாழ்தமிழ்ப் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் அவர்தம் உறவுக்கான ஓர்அஞ்சலம். வெளிநாட்டுக் குழந்தைகள் எழுதும் கடிதங்களை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பவும், அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுவெளிநாட்டுக் குழந்தைகளுக்கு விரைந்து அனுப்பவும் செய்கின்றது.
வெளிநாட்டுக் குழந்தைகள் தாயகத்திற்குக் கடிதம்அனுப்புவது எப்படி…
http://kaditham.net இணையதளத்தில் பயனாளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கைப்படதமிழில் எழுதியகடிதத்தை PDF அல்லதுJPG கோப்பாக அனுப்பலாம். கடிதங்களைத் ஒருங்குறி எனச்சொல்லப்படும் Unicode தமிழில் தட்டச்சுச் செய்தும் அனுப்பலாம். பெறுபவரின் முகவரியைக் குறிப்பிட்டு http://kaditham.net/ இணையத்தளம் வாயிலாக அனுப்பவேண்டும். நிழற்படம் (புகைப்படம்) அனுப்பஇருப்பின் அதையும் இணைக்கலாம். தமிழகத்தில் இருக்கும் கடிதம்சேவைமையம்மின்மடலில் பெறப்பட்ட கடிதங்களையும் நிழற்படங்களையும் அச்சிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பும். அந்தக்கடித்ததோடு பதில்மடல்எழுதுவதற்குத் தேவையான வெற்றுத்தாள்கள், கடிதம்சேவைஅமைப்பின் முகவரியுடன் கூடியஅஞ்சல்வில்லைஒட்டப்பட்ட கடிதஉறைஆகியவற்றை இணைத்து அனுப்பும்.
தமிழகத்தில் இருப்பவர் பதில்கடிதம்அனுப்பும் முறை...
வெளிநாட்டுக்குழந்தைகள் அனுப்பிய கடிதத்தோடு, கடிதம்சேவைமையம்அனுப்பியிருக்கும் வெற்றுத்தாள்களும், அஞ்சல்வில்லைஒட்டப்பட்ட கடிதஉறையும் பெற்றுக்கொண்டவர், அந்தக்காகிதங்களில் தாங்கள் எழுதவேண்டியதை எழுதி, உறையில் இட்டுஒட்டிஅருகில் இருக்கும் அஞ்சல்பெட்டியில் போட்டால் போதும். அந்தக்கடிதம்எங்கள்சேவைமையத்திற்கு வந்தடையும்.
வந்தடையும் கடிதம்உடனடியாகப் படமாக்கப்பட்டு (scan செய்யப்பட்டு) PDF அல்லதுjpg கோப்பாகக் குறிப்பிட்ட பிள்ளையின் (பயனாளரின்) மின்மடல் முகவரிக்கு அனுப்பப்படும்.
நிபந்தனைகள்...
கடிதம்தமிழ்மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்றமொழிகளில் அனுப்பப்படும் கடிதங்கள் சேவைமையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
கட்டணம்...
கடிதம்சேவைமுற்றிலும் இலவசம். தமிழைவளர்ப்பதைத் தவிரஇந்தச்சேவையினால் எந்தஆதாயமும் கடிதம்சேவைமையத்திற்கோ உலகத்தமிழ்மொழி அறக்கட்டளைக்கோ இருக்காது.
கொள்கை...
கடிதம்சேவைமையம்கடிதங்களையோ நிழற்படங்களையோ மின்னஞ்சல் அல்லதுவீட்டுமுகவரிகளையோ வேறுயாருக்கும் அளிக்காது, எங்கும் பிரசுரிக்காது. அதேசமயம்தனிப்பட்ட ரகசியங்கள், அந்தரங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பான தகவல்கள் போன்றவற்றை எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம். நீங்கள் அனுப்பும் கடிதங்களை வாசிப்பதில் கடிதம்சேவைஅமைப்பினர்க்கு ஆர்வம்இல்லாவிட்டாலும், தவறானமுறையில் இந்தச்சேவைபயன்படாமால் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பலகடிதங்கள் வாசிக்கப்படும்.
-
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்உறவுகள் தங்கள்குடும்பத்தோடு, கூடுதல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கடிதம்.நெட் அரிய வாய்ப்பாக விளங்குகிறது. அதோடுமாதாமாதம் குழந்தைகள் தாத்தா, பாட்டிக்குத் தொடர்ந்து கடிதம்எழுதி, இருபக்கமும் அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம், அக்கடிதங்களின் தொகுப்பு குடும்பத்தில் நடந்தநிகழ்வுகளுக்கான வரலாற்று ஆவணமாகவும் இருக்கும்.
எதிர்காலத்தில் கடிதம்.நெட் சேவை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும்தமிழ்ப்பிள்ளைகளையும் தமிழகத்தில் வாழும்பிள்ளைகளையும் இணைக்கவிரும்புகிறது.
-0-




கடிதம் எழுதும் பழக்கம் தற்போது முற்றிலும் அழிந்து வருவது வருத்தத்திற்குரியது .. :(
ReplyDeleteமிகவும் உபயோகமான ஒன்று - தகவலுக்கு நன்றி
ReplyDeletenice post anna
ReplyDeleteவணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
இது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்தது இப்படி ஒரு சேவை நிறுவனம் இருந்தால் வசதியாக இருக்கும். நல்ல் முயற்சி.
ReplyDeleteஇது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்தது இப்படி ஒரு சேவை நிறுவனம் இருந்தால் வசதியாக இருக்கும். நல்ல் முயற்சி.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஅம்மாச்சியின் கடிதம் அந்தக் காலத்துக்கே இட்டுச் செல்லக் கூடியதான ஒரு பொக்கிஷம்.
தமிழ்ப்பணியில் கரம் கோர்த்த மாப்பு வாழ்க!!
ReplyDeleteகடிதம் எழுதுவதையே மறந்தாச்சு...
ReplyDeleteஇண்லேண்ட் லெட்டர், தபால் கார்டு எல்லாம் போயாச்சு...
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள் அண்ணா...