Sunday, 1 July 2012

அம்மாவைப் பற்றிய ஆவணக்குறிப்புகள்!

ற்றங்கரையில்
வெறிக்கும்
அந்தச் சிறுமியிடம்
ஒரு கேள்வியிருக்கிறது…
அமைதியாய் நகரும்
ஆற்றுநீரில்
நேர்த்தியாய் வெடிக்கும்
நீர்க் குமிழிகளில்
ஆற்றோடு போன அம்மாவின்
மூச்சுக்குமிழி எதுவென?

-

டிபட்ட அம்மாவுக்கு
அறுவை சிகிச்சை,
இரத்தம் கேக்குறாங்க எனக்
கை பிசையும்
கிராமத்து நண்பனின்
முகத்திலும் ரத்தம்
ஒரு சொட்டுக்கூட இல்லை

~

பிதுங்கி வழியும் பேருந்தில்
மூச்சுக்காற்றுக்கு ஏங்கித்
தவிக்கும் தருணத்தில்
கடக்கும் நிறுத்தத்தில்
கையேந்திக்கொண்டிருக்கும்
முக்காடிட்ட நூல் புடவைக்கிழவி
அம்மாவைப் பிரித்துவிட்டவனுக்கு
அம்மாவை நினைவுப் பிச்சையிடுகிறாள்

-

கல்கி (08.07.2012) இதழில் வெளிவந்த கவிதை.
நன்றி : கல்கி

7 comments:

  1. மூன்றுமே மிக அருமை. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மூன்றுமே அருமை.

    ReplyDelete
  3. முதல் கவிதையே படித்தவுடன் அடுத்தை படிக்க கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டுதான் போக முடிந்தது...!

    ReplyDelete
  4. அம்மாவின் ஆபரேசனுக்கு ரத்தம் கேட்கும் நண்பன் கவிதை ரொம்ப அருமை..

    ஆற்றில் சுழித்தோடும் நீரின் குமிழியில் எது சிறுமியின் அம்மாவின் மூச்சுக்காற்றைக் கொண்டது....? இதுவும் அருமை..

    நாம் எல்லோருமே பார்க்கிறவர்கள் அனைவரிடமும் நமக்குப் பிடித்த, நம்மைப் பாதித்த மனிதர்களை பார்க்க விரும்புகிறோம்..அல்லது தேடுகிறோம்...

    அம்மாவின் நினைவில் பிச்சையிட்ட அம்மனிதனும் அப்படித்தான் போல..

    ReplyDelete
  5. அம்மாவின் ஆபரேசனுக்கு ரத்தம் கேட்கும் நண்பன் கவிதை ரொம்ப அருமை..

    ஆற்றில் சுழித்தோடும் நீரின் குமிழியில் எது சிறுமியின் அம்மாவின் மூச்சுக்காற்றைக் கொண்டது....? இதுவும் அருமை..

    நாம் எல்லோருமே பார்க்கிறவர்கள் அனைவரிடமும் நமக்குப் பிடித்த, நம்மைப் பாதித்த மனிதர்களை பார்க்க விரும்புகிறோம்..அல்லது தேடுகிறோம்...

    அம்மாவின் நினைவில் பிச்சையிட்ட அம்மனிதனும் அப்படித்தான் போல..

    ReplyDelete
  6. நெகிழ்வான வரிகள் . . .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

இது படிச்சீங்களா?