Thursday, 31 January 2013

கமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி… இல்ல கடிதம்

அய்யா ’கமல்’ சாமி,
வணக்கம்

அதெப்படி இன்னிக்கும் பாம்பேல உக்காந்துக்கிட்டு இனியொருமுறை பிரச்சனை வந்தால் நாடுவிட்டுப் போவேனு போவேனு திரும்பச் சொல்லமுடியுது...

அய்யா, நீ 100 கோடி போட்டு சினிமா எடுக்குற மவராசன், ஒரு தடவ வியாபாரத்துல பிரச்சனை வந்தவுடனே நாடு விட்டுப் போறேனு கூட சொல்லமுடியுது. உன்னால நாடுவிட்டு நாடு என்ன, நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ கூட போலாம், பணம் இருக்குது, பாஸ்போர்ட் இருக்குது, விசா கூட ஒடனே கெடச்சுடும்....

ஆனா, கெதியத்த நாங்க எங்க பிரச்சனைக்கு ஒரு மசுரும் புடுங்க முடியலையே  சாமி!
எங்களுக்கு கரண்டு இல்ல, 10 மணி நேரம் மெசின் எதும் ஓட்டுறதுக்கில்ல, தொழில் போச்சு... மழ பெய்யல, காவிரில தண்ணி வரல, கொஞ்சம் தண்ணியிருந்தாலும் அத பாய்ச்சுறதுக்கு கரெண்ட் எப்பவாச்சும் தான் வரும்... ஊட்டவுட்டு வெளியே வரமுடியல, மூனு வருசமா தோண்டுன ரோட்ட மூடக்கூட இல்ல.

சாயப்பட்டறை வெச்சதுல நிலம் போச்சு, தண்ணி கெட்டுப்போச்சு, சாயப்பட்டறைய நிறுத்தினதுல அவங்களுக்கு தொழில் போச்சு…. இதோ எங்கூர்ல செத்துப்போற 10 பேர்ல 2-3 புற்றுநோய்லதான் போறாங்க!

இதுமாதிரி எங்க பிரச்சனை ஒன்னா ரெண்டா! இதுக்கெல்லாம் உங்கிட்ட தீர்வு கேட்கல. உன் பிரச்சனை எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி, எங்க பிரச்சனை உனக்கு தெரியுமானுதான் கேட்கிறேன்.

முல்லைப் பெரியாறு சண்டை வந்தப்போ, எங்கவூட்டு முக்குல பேக்கரி வெச்சிருக்கிற  சாஜூவைக் கூட எதிரி மாதிரிதான் பார்த்தோம். ஆனாப் பாரு, சிவாகாசில வெடிச்சு சாகக் கெடந்தவங்களுக்கு மம்முட்டிதான் மருந்து கொடுத்தாராம்ல. மவராசன் நீ எதாச்சும் முல்லைப் பெரியாறுக்கு பேசுனியா அல்லது சிவகாசில ஒரு சிக்கல்னு வந்தப்போ காசு பணம் கொடுத்திருக்கியானு தெரியல. சிக்கலப்போ சொல்லிக் காட்டனும் சொல்லல. ஆனா எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்குது.

காவிரி காஞ்சுகெடக்குது, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி!

இப்ப பார்த்தா எங்காளுங்களே உன் படத்தத் தேடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும், பாண்டிக்கும் வண்டி கட்டுறாங்க. காசு இருக்கிற மவராசனுங்க நீ வெளிநாட்ல செட்டில ஆகி அங்கே மட்டும் படம் வெளியிட்டாலும் கூட வந்து பாப்பாங்களா இருக்கும்.

உனக்கு சினிமா வியாபாரம், அந்தம்மாக்கு அரசியல் வியாபாரம். நீ அந்த அய்யா இருக்கும்போது போயி சந்திச்சிட முடியுது. இந்தம்மா இருக்கையிலும் சந்திச்சிடமுடியுது. இதா… இப்பக்கூட நவம்பர் மாசம் சந்திச்சுப் பேசினப்ப இந்த படம் பத்தி எதாச்சும் பேசாமையா இருந்திருப்பீங்க!

இப்ப என்னடான்னா, எங்க ஊருல கெழடு கட்டைங்க கூட அன்னிக்கு ராத்திரி 10 மணி வரைக்கும் புள்ளத்தாச்சி பிரசவத்துக்கு போனமாதிரி டிவி முன்னால ஜட்ஜய்யா என்ன சொல்வாரோனு கொசுக்கடியில உட்கார்ந்திருந்தாங்க. அடுத்த நாள் நேத்து
 அரசாங்கம் ஆடுன ஆட்டத்தப் பார்த்து…..  இதென்ன இப்படியாயிப் போச்சாமேனு எழவு வீடு கணக்கா கெடந்து உம்பிரச்சனைக்கு முக்குக்கு முக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுத் திரியறாங்க...

படம் மட்டும் வந்துட்டா ஓட்டுப் போடப் போற மாதிரி ஒரு சனம் உடாம பார்த்துடறதுனு தீர்மானமா வேற இருக்காங்க! படம் வந்துட்டா காசு கெட்டிகவலை வேணாம். அதுக்காக பாவம் நஷ்டப்படனும்னெல்லாம் சொல்லல! என்ன கருமம் எங்காளுங்க எச்சுமுச்சா காசு குடுத்து டிக்கெட் வாங்குவாங்கநாலு நாள் பொறுத்து பொறுமையா பார்த்தாலும் அதே சினிமா தானேனு ஏனோ புரியறதில்ல. எல்லாத்திலேயும் அவசரம்தான்!

ஒரு சினிமா வியாபாரத்துக்கு பொங்குபொங்குனு பொங்குற எங்காளுங்க, எங்களோட கரண்டு பிரச்சனைக்கு, தண்ணி பிரச்சனைக்கு ஒரு சக மனுசனா நீ எப்பவாச்சும் வாய் தொறந்தியானு யோசிக்கக் கூட நேரமில்ல சாமி…. இங்கதான் டிவில என்னேரமும் இதையே பேசித் திரியறாங்களே! கரண்டு பிரச்சனைக்குப் பேசுனா கவருமெண்டு கோவிச்சுக்கும், காவிரி, முல்லைப் பெரியாறுக்குப் பேசினா கர்நாடகா, கேரளாவுல பப்பு வேகாதுன்னு உனக்குத் தெரியாமலா இருக்கும்.

அய்யா சாமி... என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு கலைஞன்... நீ எதாச்சும் நடிச்சு அது திரைக்கு வந்த பொறவு புடிச்சா ரசிப்பேன், புடிக்காட்டி நல்லால்லனு சொல்வேன்... மத்தபடிக்கு நாங்களும் மனுசங்கதான், நீயும் மனுசன்தான். நாங்க இன்னும் ஒருபடி மேல, கரண்ட், தண்ணியில்லாம இன்னும் மூச்சு தம் கட்டி, மானரோசத்துக்கும் பயந்து வாழ்ந்திட்டிருக்கோம். இதுல ஊட்ட விட்டு, ஊரவிட்டு ஓட எல்லாம் எங்களுக்கு நாதி இல்லை.

பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவதுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனு… எங்கேயும் போக வக்கில்ல…. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும்.

இந்தா இதுக்கும் கூட உன்னை ரொம்பப் புடிக்கிற நாலு பேரு, சரியாப் படிச்சும் படிக்காமலும் வந்து தையத்தக்கனு குதிப்பாங்க. குதிக்கிறது அவங்க சுதந்திரம். எனக்குப் பட்டதைச் சொல்றது என் சுதந்திரம்.

எனக்கும் உன் நடிப்பைப் பிடிக்கும். முடியும்போது இந்தப் படம் பார்த்தாலும் பார்ப்பேன். புடிச்சிருந்தா நல்லாருக்குனு நாலு வார்த்தை சொல்வேன்….. அம்புட்டுதான்…..

இனிமேலாச்சும் உனக்கு இப்ப வஞ்சனை நடந்த மாதிரி சராசரியான எங்களுக்கும் ஏராளமான வஞ்சனைகள் நடக்குதுனு உனக்கும் புரிஞ்சா சரி. எங்காளுங்க உன்னை நல்லாருக்கனும் சாதி மதம் ரசிகர் மன்றம் கடந்து நினைச்சதுல, கொஞ்சமாச்சும் திருப்பி குடு சாமி.

நன்றி

36 comments:

  1. empaa kathiru, avanavan inga viswaroopam veli varavillai-nnu kavalaippattuk kondu irukkaiyil neenga sammanthame illaamal...

    ReplyDelete
  2. Appadia veittuvala irutha saiya sollalamla

    ReplyDelete
  3. கரீட்டு! நமக்கு நாதியில்லேங்குறதுதான் நெசம்!

    ReplyDelete
  4. பெரும்பாலான சனங்க மனசப்படிச்சு எழுதின மாதிரி இருக்கு கதிர்..

    அவருக்குப் போக்கிடம் இருக்கு..நமக்கு இல்ல..

    என்னமோ போங்க...

    ReplyDelete
  5. It is wrong. Power problem will not be (it can't be) solved in one or two days, it may take years. Our Govt never thought about improving power sources to fulfill the current (future) requirements in past. Whatever you do it wouldn't be solved, it is not something like it will would have solved if Kamal, Rajini or whoever involved. Power problems wouldn't be solved even if you fasting for more than 100 days. But this is not the case for Vishwaroopam, the movie can be released if he (with all our support) fight for one or two days. I respect your feelings, but please think about whatever you said above. Kamal couldn't have stopped these power problems (no matter whatever he do). Don't link both of these issues. Thanks.

    ReplyDelete
  6. எல்லாஞ் சரித்தேன்.... ஆனா எனகென்னமோ கமலுக்காக மட்டும் யாரும் இங்கே பரிஞ்சி பேசிவிடவில்லை..

    ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் தனிமனித காழ்ப்புணர்ச்சியினால் "அதிகாரம்" துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்குதே .. அதைத்தான் எதிர்க்கிறார்கள்.

    இது ஒண்ணும் புரியாமலிருக்க "சிதம்பர" ரகசியமும் இல்லை

    நீங்க சொன்னமாதிரி நமக்கு லோ லெவல்....... ஹை லெவல் பார்டிக்கு ஹை லெவெல்'ல..! அம்புட்டுதேன் ..!

    பிரபலமாயிருக்க சிலவற்றை கொடுக்கணுமாம்.... கமல் பிரபலம்தான்... ஆனா இந்த பிரச்சினையின் ரிஷி மூலத்தை நினைத்தால் மூல வியாதி மாதிரியான காறித்துப்பும் நிகழ்ச்சி தான்.

    கமல் மட்டுமல்ல... கூத்தாடிகள் எல்லோரும் நிம்மதியாய் தொழிலை கவனிக்கட்டும். ஒண்ணு போட்டு நாலா எடுக்கட்டும். யாரு வேணாம்கிறா...

    ஆனா சமூக பொறுப்புணர்வு அமீர்கான் மாதிரி நல்ல மனங்கொண்ட கூத்தாடிகளிடமிருந்து தான் வரும். கமல் போன்ற வியாபார கூத்தாடிகளிடம் எதிர்பார்ப்பது பிச்சை பாத்திரம் வைத்திருப்பவனின் பாத்திரம் நோக்கும் செயலாகும்.

    மறுபடியும் சொல்கிறேன்..

    அதிகாரம் கையிலிருப்பதால் . ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் தனிமனித காழ்ப்புணர்ச்சியினால் "அதிகாரம்" துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்குதே .. அதைத்தான் எதிர்க்கிறார்கள். கமலுக்காக அல்ல.

    ReplyDelete
  7. அப்பு!
    கலக்கல்- உண்மையை உள்ளபடி எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  8. ஏங் கதிரு எரியிற கொள்ளில எண்ணைய ஊத்திக்கிட்டு:( எல்லாஞ் சரிதேன்..ஆனா தலைவருக்கு எதிரா எத்தன கை உசத்தினாலும் ஒன் மேன் ஆர்மி சமாளிக்கிறாரு பாருங்க.......ஓட்டு போட்டு கை வெட்டிக்கிடணும்.....இனி ஆராச்சும் அவருதான் எங்க ரோல்மாடல்னு சொல்லட்டும் ஓட ஓட வெரட்டி அடிக்கனும்.....இப்டி ஒரு மனுஷன மனச நோகடிக்கிறது மிருகச்செயல் கதிரு.......நா ஒங்க கடுதாசிக்கு பதில சொல்லல என் ஆதங்கத்த சொன்னேன்.....

    ReplyDelete
  9. மனதை பாதித்த எழுத்து.படம் வெளி வராததை பத்தி பக்கம்,பக்கமா மீடியா பேசும் ..தஞ்சாவூர்ல உலகத்தை விட்டே போன் விவசாயிகளை பத்தி பேச ஒரு மைக் காணும்..நிஜம்தான்..இதுதான் இந்தியா..என்ன கெட்டுவிடும் படம் பார்த்து ஆறுதல் கொள்வோம்.

    ReplyDelete
  10. This article is right.....
    But...its not the time......

    The right article....in
    wrong time.....
    Sorry.....kathir.....

    ReplyDelete
  11. உங்க புகைப்படத்தை பார்த்தால் நீங்கள் கூறும் வறுமை தெரியவில்லையே நண்பரே. கமல் விவகாரத்தை வைத்து உங்கள் முகவரியை விறுவு படுத்திக்கொள்ளும் தந்திரமாக அல்லவா தெரிகிறது. வெட்கமாக இல்லை?

    ReplyDelete
  12. காவிரி காஞ்சுகெடக்குது, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி.....


    well said, same question. in our village no power (i am in a city).. so you and me are using power supply just for time pass in internet... why don't we turn off our computer for a month, so that all villagers/farmers will use that..

    Will you do, so asking others you did that or spend money for that is very easy..

    now are you showing your real face...

    ReplyDelete
  13. காவிரி காஞ்சுகெடக்குது, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி.....


    well said, same question. in our village no power (i am in a city).. so you and me are using power supply just for time pass in internet... why don't we turn off our computer for a month, so that all villagers/farmers will use that..

    Will you do, so asking others you did that or spend money for that is very easy..

    now are you showing your real face...

    ReplyDelete
  14. Well said Kathir.

    " சரியாப் படிச்சும் படிக்காமலும் வந்து தையத்தக்கனு குதிப்பாங்க. குதிக்கிறது அவங்க சுதந்திரம். எனக்குப் பட்டதைச் சொல்றது என் சுதந்திரம்."

    yes.

    ReplyDelete
  15. மிகச் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்

    ReplyDelete
  16. அருமையான குட்டு , அவங்களுக்கு பணம் தான் பெரிது ,பொதுமக்களை பற்றி கவலை அவங்களுக்கு எதுக்கு.

    ReplyDelete
  17. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் வாக்களித்து பதவியிலமர்த்திய அரசாங்கம் தான் பொறுப்பாக முடியும். ஒரு நடிகனாக கமல் அவற்றை தலையில் சுமக்க முடியாது. தீர்க்க முடியாது. ஆனால், வரிகள் மூலம் சினிமா துறையிடமிருந்து நல்ல வருமானம் பார்த்துவரும் மத்திய மாநில அரசுகள் இத்தகைய விவகாரங்களை சம்பந்தப்பட்டவர்களே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கைவிரிப்பதை ஏற்பதற்கில்லை. இதை கையாலாகாத்தனம் என்பதா, கட்டப்பஞ்சாயத்து என்பதா?

    ReplyDelete
  18. பதிவு ரொம்ப அருமையா இருக்குங்க.

    ReplyDelete
  19. கமல் என்கின்ற நடிகருக்கு ஆப்பு வைத்தது ஒரு முன்னாள் சினிமா நடிகை

    விவசாய நிலம் சாயதண்ணீரால் வீணாப் போனதுக்கும் ஒரு விவசாயிதான் காரணம் அண்ணா!

    விவசாய நிலத்தில சாயப்பட்டரை போட மாட்டேன்னு சொல்லலை

    காவிரியில், பவானியில் சாய கழிவ விடமாட்டேன்னும் சொல்லலை

    ஏன்..?என்றால் பணம் சம்பாரிக்கனும்
    இதுல கமல் அழுவதுக்கும் (நீங்க&நான்) அழுவதுக்கும் வித்தியாசம் இல்ல...!

    ReplyDelete
  20. அருமை..தொடருங்கள்...

    ReplyDelete
  21. @Srikanth
    //உங்க புகைப்படத்தை பார்த்தால் நீங்கள் கூறும் வறுமை தெரியவில்லையே நண்பரே. கமல் விவகாரத்தை வைத்து உங்கள் முகவரியை விறுவு படுத்திக்கொள்ளும் தந்திரமாக அல்லவா தெரிகிறது. வெட்கமாக இல்லை? //

    ஊர் எரிந்தால் என்ன, என் வீடு எரியவில்லை நான் ஏன் கவலைப்பட
    வேண்டும்?

    சுரணையற்றவர்கள்...

    ReplyDelete
  22. //அருமை..தொடருங்கள்...//

    மறுக்காவும் ஒரு மடல் எழுதச் சொல்லியிருக்கார். ஆயிருச்சுங்களா??

    ReplyDelete
  23. என்னைய்யா (அக்)கருமம் இது...! கமல் சினிமால சம்பாதிச்சார். அதுல அரசு விதிச்ச வரியை தவறாம கட்டுறார் (மம்முட்டி கரீட்டா கட்டுறாரா?). மீதியிருக்குற காச தனக்கு தெரிஞ்ச தொழில்ல போட்டு தனக்கு சரின்னு பட்டத சினிமாவா எடுக்கறார். புடிச்சா காசு குடுத்து பாரு. புடிக்கலன்னு பாக்காமவிட்டியின்னா அவருக்கு தான் நஷ்டம். நஷ்டப்பட்டு அடுத்த படம் எடுக்கலன்னா அந்த தொழில நம்பியிருக்கற சொச்சநூறு தொழிலாளிக்கு நஷ்டம். உனுக்கு என்னா நஷ்டம்?

    இதுல, “எனுக்கு படம் புடிக்கல, தொழில் பண்ணாதன்னு” ஒரு குரூப்பு பொங்க, “வுங்கூட ஒரே தொங்துருவா போச்சி ராகவா, அதான் அவுங்களுக்கு புடிகலியாமில்ல, ஷட்டரப்போடு”ன்னு கவர்மெண்டும் சொன்னா…, ‘சரீ, எனுக்கு எங்க சொகர்யமோ அங்க போறேன்’றாப்ல...! இதுல உனக்கு இன்னா பிரச்சன..?! கமலு ஏன் பாலம் கட்டல, பால் காவடி தூக்கலன்னு கூவுற நீ, எத்தினி முற உன் பாக்கீட்லருந்து காசு செலவு பண்ணி பால் காவடி தூக்கியிருக்க..?! இல்ல, ஆபீஸுக்கு 'அய்ம் சபரிங் ப்ரம் பீவர்' கடுதாசி (இல்ல... இது மட்டும் கடிதம்னே இருக்கட்டும்) குடுத்துட்டு அறப்போராட்டத்துல குதிச்சிருக்க..?!

    இதுக்கு நடுவால நீ 'மேனேசரு மண்ட வழுக்கன்னு சொல்லல, மயிருயிருந்தா நல்லாயிருக்கும்னு'கமெண்டடிச்சது அவுரு காதுக்கு போயி உன்ன சஸ்பெண்டு பண்ணா என்னா பண்ணுவ..? 'நீ கேளு மச்சி.. நீ கேளேன் மச்சின்னு' தோஸ்துங்ககிட்ட பஞ்சாயித்து வெப்பியா... இல்ல, “காவிரிலயெ தண்ணி வரல, கடல்லியே ஜாமீன் இல்ல, இந்த லட்சணத்துல எனுக்கு வேலைக்கு அப்பு வச்சது முக்கியிமா”ன்னு ‘கட்டிங்’ உட்டு மனச ஆத்திக்கிட்டு சுருண்டு படுத்துடுவியா...?! இன்னாப்பா ந்நாயம் இது..?! ;)

    ReplyDelete
  24. ஹாஹாஹா! ரொம்ப நாளாச்சு இவ்வளவு காமெடியாய் ஒரு பதிவு படித்து.

    இதை இப்படியே விடக்கூடாது கதிர். இப்படியே நல்லா சிந்திச்சு நிறைய கடிதம் எழுதுங்க.. கமல் மட்டுமல்ல, விஜய், அஜித், சூர்யா, சந்தானம், கஞ்சா கருப்பு, போண்டா மணி ஒருத்தரையும் விடக்கூடாது. எல்லோரும் நிறைய சம்பாதிக்கிறாங்களாம்! எல்லோருக்கும் கடுதாசி எழுதுங்க..

    அப்படியே சினிமாக்காரங்க மட்டுமல்லாம, மற்ற கலைத்துறைகள்ல சம்பாதிக்கிறவங்க.. ஏன் தொழிற்துறையில் சம்பாதிக்கிறவங்க எல்லோருக்கும் எழுதலாம். அதுவும் குறிப்பா அவனவன் தொழில ஒழுங்கா பண்ணிகிட்டு, டாக்ஸும் கட்டிகிட்டு இருப்பானுங்க பாருங்க அவங்கதான் நம்ப டார்கெட்!

    நம்ப கரண்டு, தண்ணி, விலைவாசி, சோத்துப்பிரச்சினைகளுக்குல்லாம் இவங்கதான் மெயின் காரணமே.. யாருகிட்ட?

    மாவட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவங்கள்லாம் பாவம், அவங்கவங்க தொழில சிவனேனு பண்ணிகிட்டிருக்காங்க.. அவங்களுக்கு யாருக்கும் மறந்து போய் கடுதாசி போட்டுறப்போறீங்க, கவனம்!

    ReplyDelete
  25. அருமை கதிர்.கடைமடை காயும்போது கமல் மனதில் ஈரமில்லை. கமல் மடி அவிழும்போது கிழவி கண்களில்கூட ஈரம். நிழல் நிஜமாயிக்கொண்டே போகிறது.... நிஜம் நிற்க கூட நிழலின்றி வெய்யிலில் காய்கிறது.

    ReplyDelete
  26. This question should go to TamilNadu CM...Fight for Tamil People everyone will suport you...but dont try to get Ad...

    ReplyDelete
  27. This question should go to TamilNadu CM...Fight for Tamil People everyone will suport you...but dont try to get Ad...

    ReplyDelete
  28. பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவதுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனு… எங்கேயும் போக வக்கில்ல…. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும். superappuu......

    ReplyDelete
  29. உன் பிரச்சன என்னயா, கரண்டு இல்லாததா , காவேரி வராததா , இல்ல கமல் நாட்ட விட்டு போறேன்னு சொன்னதா ? கமல் குரல் குடுத்தா காவேரியும் கரண்ட்டும் வந்துரும்னா சொல்லு , சொல்ல சொல்லிடலாம் ,

    மமுட்டி என்னவோ உதவுனான் நீங்க என்ன பண்ணீங்கனு கேக்கறியே , நான் சொல்லவா ... நீ வீட்ல மானிய விலையில 2 சிலீண்டர் வச்சுருக்க அதுக்கும், உனக்கும் உன் குடும்பத்துக்கும் போக நல்ல ரோடு போட்டு இருக்குல கவர்மெண்டு அதுக்கும், இப்ப நீ இப்டி எழுதி நிறைய பேர்க்கிட்ட சபாஷ் வாங்கிருக்க ல அதுக்கு பயன்படுதுரியே இண்டர்நெட்னு அதுக்கும் இன்னும் நீ வீட்ட விட்டு வெளிய வந்தா மக்களோட மக்களா பயன்படுதுரயே இப்டி நிறைய விஷயம் கமல் மாதிரி உண்மையா வரி கற்றவங்களால தான் , அத அரசாங்கமே சொல்லிடுச்சு http://goo.gl/LKR4q நீ சொன்ன மம்மூட்டிய IT ராடு விட்டதையும் அதுலயே படிசிக்கப்பு ,

    ரொம்ப பாமரன் மாதிரி எழுதிருக்க , பாவம் இங்கிலீஷ் ல இருக்கு எனபன்னுவ ?
    நாலு நல்லவன் கட்டண டாக்ஸ் ல உன் வீட்ல யார்ன படிச்சி இருப்பாங்க அவங்கள படிச்சு காட்ட சொல்லி புரிஞ்சிக்கப்பு

    நல்லது பண்ற மாதிரி விளம்பரம் பண்றவன தான் நீ உதரணமா பாக்குற, அது தப்பு.
    கமல் நற்பணி மூலமா எத்தன கோடிக்கு நல்லது நடந்து இருக்குனு தெரியுமா உனக்கு ??

    சரி விக்கிபீடியா ல கமல் ஹசன் பேஜ் ல Humanitarian work பத்தி இருக்கும் படி.
    செத்ததும் உடலை மரத்துவ ஆராய்சிக்காக குடுக்க பத்திரம் எழுதி குடுத்து இருக்காப்ல கமல் ,

    இன்னும் நிறைய இருக்கு யா , எனக்கும் பக்கம் பக்கமா உன்ன மாதிரி எழுத ஆசைதான் ஆனா நேரமின்மை காரணத்தால் .......
    கடைசியா ஒன்னே ஒன்னு யா , நீரெல்லாம் அடுத்தவன் முதுகுல இருக்க அழுக்க சொரிய ஆசைப்படறவன், உன் பின்னாடி இருக்க அழுக்கு !! பாரேன் அது எனக்கு தெரியுது !
    நீ வளரனும் தம்பி

    ReplyDelete
  30. Thambi arumaya yeluthirukeenga sabash bale.....

    ReplyDelete
  31. Thambi Arumayana Kaditham yeluthi asatheetinga ponga bos ivanga yempayiyumae ippadithan

    ReplyDelete

இது படிச்சீங்களா?