Monday, 11 March 2013

வஞ்சனையில்லையடி கிளியே







செடியோடு பிடுங்கிச் சுட்ட கடலை
காரமாய் வறுத்த முருங்கைக் காய் 
பச்சை மாங்காய்
உச்சிக் கொய்யா
கொஞ்சம் கோழிக்கறி
பம்ப் செட் குளியல்

கிறங்கிக் கத்தும் பேர் தெரியாப் பறவை
தத்தித்தாவியோடும் அணில் குஞ்சு
வாலால் விசிறும் எருமை
காலைச் சுற்றும் நாய்
எட்டி நக்கும் மாட்டுக் கன்று
தூரத்தில் மேயும் மயில் கூட்டம்
கயிற்றுக் கட்டில்
வேப்பமர நிழல்

ஒருபோதும்
வஞ்சிப்பதில்லை கிராமம்

வேண்டாமென வெளியேறி
ஒற்றை ஞாயிறுகளில்
ஒதுங்குபவனையும்!

-0-

12 comments:

  1. கண்முன் நிறுத்தும் வரிகள், நேரில் பார்க்க தூண்டுகிறது!அருமை!


    ReplyDelete
  2. இப்பதான் ஊருலேருந்து வந்து ஹேங்-ஓவர்ல தவிச்சுகிட்டிருக்கேன். நீங்க வேற படுத்துறீங்களே...

    ReplyDelete
  3. அடுத்த முறை செல்லும்போது மறவாமல் அழைக்கவும், ஒரு நாள் முன்னமே.

    ReplyDelete
  4. பம்ப் செட் குளியல் =
    இப்போது உள்ள குழந்தைகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அருமையான பதிவு.
    நன்றி கதிர் சார்.

    ReplyDelete
  5. Nan lam 2 yrs fulla lalgudi yil bump set kuliyal than!
    adhukku piragu suthama vaippe kidaikale!

    ReplyDelete
  6. அருமையான கவிதை...
    கிராமத்து வாழ்க்கையின் சுவையே தனிதான் அண்ணா.

    ReplyDelete
  7. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  8. அன்பின் கதிர் - அருமையான, அனுபவத்தால் எழுதப்பட்ட கவிதை - மிக மிக இரசித்தேன் - முக்கியமான ஒன்றினை மறந்து விட்டீர்களே - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. அந்த ஒருநாள் இன்பம் சிறிதுகாலத்திற்கு நம்மை உத்வேகத்துடன் வைத்திருக்கும் வலிமை வாய்ந்தது... அருமை

    ReplyDelete
  10. செடியோடு பிடுங்கிச் சுட்ட கடலை
    பம்ப் செட் குளியல்
    எட்டி நக்கும் மாட்டுக் கன்று
    கயிற்றுக் கட்டில்
    வேப்பமர நிழல்..............எனக்கு பிடித்த வரிகள்

    ReplyDelete

இது படிச்சீங்களா?