Saturday, 4 May 2013

கீச்சுகள் - 34



கோபத்தை மட்டும் வேகமாய்உடனுக்குடன் வெளிப்படுத்தும் மனது, அன்பையையும், நன்றியையும்அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை!

-0-

இன்றைக்கு தேதி கிழிக்க மறந்துபோனேன். அதனால் நேற்றிலேயே வாழ்ந்துவிட்டேன். #அடங்கப்பா எத்தன பல்பு! :)

-0-

பைக்ல இன்டிக்கேட்டர் இருப்பதுஆயுதபூஜைக்கு பொட்டு வெச்சு பூமாட்டுறதுக்கு மட்டும்னு பலபேரு நினைக்கிறாங்க போல!

-0-

ஞாயிறு பிற்பகல் நகரப்போக்குவரத்தைப் பார்த்தால், 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதுபோல் தோன்றுகிறது.

-0-



குடும்பத்தில் காட்டும் எல்லாக் கோபங்களுக்குப் பின்னாலும்ஒரு அன்பு இருக்கின்றதென்பதை தெரிவிக்கமறந்து விடுகிறோம்

-0-

தெளிவாக இருக்க முயல்வதுபோன்ற கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!

-0-

டாஸ்மாக் வாசலில் தள்ளுவண்டியில்கம்மங்கூழ்விற்பவன் ஏமாளியாகவும், புத்திசாலியாகவும், கருணை மிகுந்தவனாகவும் தெரிகிறான்.

-0-

நெருக்கடி மிகுகையில், விதவிதமாய்ப் பற்றும் கரங்களில் கடவுளைஉணர்கிறேன்!

-0-

கம்மஞ்சோற்றை முதன் முதலில் படைத்தவன்/ள், ரொம்ப நாள்டாவடிச்சு போக்கு காட்டிய ஜீவனிடமிருந்துசூடாகாவோ / சில்லுனோ முத்தம் வாங்கிய ஒருநேசிப்பு மிகுந்த தினத்தில்தான் உருவாக்கி, இப்படி பழைய சோறாக குடிக்கவேண்டும் என பக்குவமும் சொல்லியிருக்கவேண்டும்!
-0-

எல்லா கேள்வி, புகார்களுக்குஒற்றை முத்தம் பதில், தீர்வாகஅமைந்து விடுவதுண்டு. சில பொழுது இல்லாதகேள்வி, புகார்களை எழுப்பியும்விடும்!

-0-

எதாச்சும் தத்துவத்தைப் போட்டு கீழே ”-யாரோஇப்படிப் போடுறாங்களே, இந்த ”-யாரோங்கிறதுயாரா இருக்கும்?

-0-

போனில்அஞ்சே நிமிசத்துலகூப்பிடறேங்கனு சொன்ன ஒருத்தரைக்கூட, அஞ்சேகால் நிமிசத்துலகூட நான் கூப்பிட்டதேயில்லை #நல்லாவருவடா (மீ –>என்னை)

-0-

தென்னை உண்டு இளநீர்குடிப்பதில்லை, பனை உண்டு நொங்குஉண்பதில்லை..... ஆனாலும் பிள்ளைகள் வளர்கிறார்களாம். நாங்கள் வாழ்கிறோமாம்!

-0-

ஒவ்வொரு தினத்தையும் இன்பத்திலோ, துன்பத்திலோ நனைத்து உலரப் போடுகிறோம்! சில தினங்கள் மட்டும் அவ்வளவு எளிதில்உலர்வதில்லை!

-0-

பம்ப்செட் தண்ணி எடுக்கலைனா சாணியைக்கரைச்சு ஊத்தினா தண்ணி எடுக்கும்னுகண்டுபிடிச்ச விஞ்ஞானி நம்ம தமிழக விவசாயியாகத்தான்இருப்பார்!

-0-

டீ கடக்கார அண்ணே, சூரியன் சார் புண்ணியத்துல கொதிக்கிறபைப் தண்ணிய புடிச்சு தூளுசக்கரை போட்டு டீ தர்றீங்களே, ஒரு எட்டணா குறைச்சிக்கபடாதா?

-0-

மதிய சோற்றைவிட குழம்பு, ரசம் இருமடங்காக இருக்கும் நாட்களில் சமூகம் ஏதோ சேதிசொல்லவிரும்புவது புரிகிறது. #வெயில்ல யோசிக்கத்தான் முடியல

-0-

வாசிக்கிற லட்சணத்துல பார்த்தா, கையில் இருக்கும் புத்தகங்களைவாசித்து முடிக்கவே இன்னொரு ஜென்மம் தேவைப்படும்போலஇருக்கே! #சோம்பேறித்துவம்

-0-

நமக்குகெடுதல் நிகழப்போவதாகமனது கற்பனை செய்த அளவிற்கு, நிஜத்தில் நிகழ்ந்திருக்குமானால் நம் எவராலும் வாழ்ந்துகொண்டிருக்கவே முடியாது!

-0-

பிறழ்வும் இனிதே! பிடித்திருக்கும் தருணங்களில்.

-0-

சட்டத்திற்குள் அடங்குவதே அழகு என்பதும் மாயை.

-0-

இருப்பதை விட, நம்மை கூடுதல்அழகாய் காட்டும் நிழற் படங்களை வெளியிடுவதுஒரு வித போதையோ?

-0-

கெட்டவனா/ளா இல்லாம இருக்கிறதுதான்பெரிய விசயம்!

-0-

விடியலின் வர்ணம் ஊருக்கு ஊர்வேறுபடத்தான் செய்கிறது

-0-

காலை மினுமினுக்கும் மேக்கப்பில்பார்க்கும் முகங்களைவிட, களைத்து வாடிய மாலைநேரத்து முகங்கள் வெகு இயல்பாய், கூடுதல்அழகாய் இருக்கின்றன

-0-
  
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து வண்டியைத் தள்ளுபவன் துரதிருஷ்டசாலியாகவோ, பாவப்பட்டவனாகவோ மட்டுமே இருக்க வேண்டும்என்பதில்லை. சரியான நேரத்துக்குப் பெட்ரோல்போடாத சோம்பேறியாகவும் கூட இருக்கலாம். இறங்கும்இடம் தெரியாத பயணங்களும், வாழ்வில்தவிர்க்க முடியாதவை!

-0-

யுத்தமில்லா உலகை, போர் மூலமாதீர்மானிக்க முடியும்?

-0-

"சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல்" # இப்படி யாருய்யா கற்பனை செஞ்சது. ஒருமாதிரிபிசுபிசுனு இருக்காது

-0-
விளையாட்டா கன்னத்தில் அடித்த மகளுக்கு முத்தம்தந்தால், ”இதுக்கு திருப்பி அடிச்சேயிருக்கலாம்ங்குது # கரண்ட் இல்லாட்டியும் பல்புமட்டும்

-0-

காதுல செல்போன் வெச்சுட்டுபோஸ் கொடுத்த ரியல் எஸ்டேட்ஆளுக, இப்ப டேபிள்ல லேப்டாப்வெச்சுட்டு போஸ் கொடுக்கிறாங்க #டெக்னாலஜிஇம்ப்ரூவ்டாம்

-0-

ஒரு வேலை ரொம்பகடியா இருக்கும்னு 10 நாளா தள்ளிப்போட்டேன். வேறுவழியின்றி இன்றைக்கு எடுத்தேன். 4 மணி நேரத்தில் ஓவர்#கேடுகெட்ட முன்முடிவு

-0-

தோல்விகள், துன்பங்கள் என வலிக்கவலிக்க சுயசரிதைஎழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமேஅளிக்கப்படுகிறது!

-0-




சில பிரச்சனைகள் எந்தஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது!


 -0-

இணைய சமூகதளங்களில் சாதி, கட்சி, சினிமா என மக்கள்அடித்துக் கொள்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, இவர்களுக்குசாதி / அரசியல் / சினிமா குறித்த உணர்வுகளைஊட்டிய தலைகள்(!), தங்கள் எதிரிகளைச் சந்தித்தால்நிகழ்ந்துவிடாது...
இத்தனைக்கும் அவர்களின் கல்வியறிவு (கல்விக்கும் பக்குவத்திற்கும் தொடர்பில்லையெனினும்) இங்கேயிருப்போரைவிட சிறிது குறைவாகவும்கூட இருக்கலாம்!

-0-

நெருக்கடியான தருணங்கள் வாழ்க்கை குறித்த புரிதலோடு, அன்பாய், பரிவாய், கதகதப்பாய்ப் பற்றும் கரங்களையும் இனம்காட்டுகிறது!

-0-

IPL மேட்ச் பார்த்துட்டிருந்த நண்பர்இன்னுமா Nokia போன் வெச்சிருக்கீங்னு கேட்டாரு, நான் இன்னுமா IPL பாக்றீங்கனு கேட்டேன் #ஏன் முறைக்கிறாரு!

-0-

ரொம்ப பிசியா இருக்கிறஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டுஇருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!

-0-

காதுகள் இரண்டாக இருக்கும்போதிலும், வாய் ஒன்று மட்டுமேஇருப்பதென்பது ஏனோ அடிக்கடி மறந்துபோய்விடுகிறது!

-0-

மன இடுக்கெங்கும் நிரம்புகிறதுவெயில்!

-0-

ரயில்ரோட்டோரம் கெடக்குற இரும்பை பேரீச்சம்பழத்துக்கு போட்டாலே, இந்தியாவுல இருக்கிறவங்களோட இரும்புச் சத்துக்குறைபாட்டை சரி செய்திடலாம்.

-0-

நிஜமா சொல்றேன்ஓசிசோத்துக்குருசி அதிகம்! :)

-0-

தெருவில் சண்டை போடுபவனுக்கு எப்போதும்சண்டை முக்கியமில்லை வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்!

-0-

குளிர்காலத்துல பேங்க் போனா A/cய 16லவெச்சுமுக்காமணி நேரம் வெயிட் பண்ணவெச்சாங்க, இன்னிக்கு போனா A/cய30லவெச்சுட்டு 3 நிமிசத்துல துரத்துறாங்க?

-0-

ட்விட்டர்ல யார்யாரையோ நான் ஃபாலோ பண்றேன், யார்யாரோ என்னை ஃபாலோ பண்றாங்க, என்னை நான் ஃபாலோ பண்றேனானுமட்டும் தெரியல!

-0-

90 நிமிசம் லேட்டா வர்றரயிலுக்கு என்னத்த "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" வேண்டியிருக்கு. "கடுப்பான கவனத்திற்கு"னு வேணா சொல்லுங்க.

-0-

அதென்ன சூரியன் சார், சினிம தியேட்டர் வாசல்ல மணிக்கணக்கா நிக்கிறவங்களவிட்டுட்டு, ஒன்னேகால் நிமிசம் சிக்னல்ல நிக்கிறவனைஇப்படி சுடுறீங்க!

-0-

பல நேரங்களில் வேலைசெய்வது சிரமமில்லை. வேலை குறித்த முன்முடிவுதான்சிரமப்படுத்துகிறது!

-0-

முதலில் தன்மீதும், அடுத்துபிறர்மீது குற்றம் காணாத மனிதன்சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான்.

-0-

எங்கூர்ல கரண்ட் இருக்குனு சொன்னவங்களைவிட, இப்போ எங்கூர்ல மழைபெய்யுது, குளுரடிக்குதுனு சொல்றவங்க மேலதான் ரொம்பப் பொறாமையாஇருக்கு!

-0-

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும், பலநேரங்களில் அது தெரிவதில்லை, சிலநேரங்களில் தெரிந்து கொள்வதில்லை!

-0-

வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது

-0-

தன்னை நோக்கி தட்டப்படும்கைகளை பாராட்டு என நினைக்கும் கொசுவுக்குத்தெரிவதில்லைஇன்னிக்கு செத்தா நாளைக்கு பால்என்பது

-0-

3 comments:

  1. கதிர் அண்ணே
    தூள் கெளப்புறீங்க !

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. கசியும் மெளனம் பொழியும் பேரிரைச்சல்

    ReplyDelete

இது படிச்சீங்களா?