Tuesday, 30 July 2013

ஒரு கணமும் உறையாப் பேனா மைச் சொட்டுகளும்








இரவு பகலாய் நெய்தலோ
எதுகை மோனைகள் கோர்த்தலோ
அடித்துச் சிதைத்துத் திருத்துதலோ
சல்லடை கொண்டு சலித்தலோ
அவசியமில்லை ஓர் கவிதை சமைக்க

ஆனந்தக் கண்ணீரை நினைவூட்டும்
இரு சொட்டுப்  பனித்துளிகள்

ஊளமூக்கைப்  புறங்கையால் துடைத்து
உதடுகளில் மீசை வரையும் மழலை

அம்மாவின் கழுத்து கவ்வி
தொட்டிலாடும் நாய்க்குட்டி

விரைந்து கடக்கும் யாரோ ஒருத்தி
விட்டுப்போன மல்லிகை வாசனை

அடிவயிறு தாங்கும் நிறைமாதக்
கர்ப்பிணியின் கைகளில் படியும் துடிப்பு

புல் வேர் கருகும் வெம்மைச்  செம்மண்
போர்த்தும் முதற் பெருமழை

தேர்நோம்பித் திருவிழாவில் பிள்ளையின்
தலைகோதும் பள்ளிப் பருவத் தோழி

கை குலுக்களில் சிகரெட் வாசனையை
பூசிப்போன விற்பனை பிரதிநிதி

நம்பிக்கையின் முனைகளை மட்டும்
சிதைத்த ஒரு சின்னத் துரோகம்

இதில் ஏதோ ஒரு கணமும்
உறையாப் பேனா மைச் சொட்டுகளும்
ஒரு வெற்றுத்தாளும் போதும்
ஒரு கவிதை சமைக்க
 
-

9 comments:

  1. நல்ல கவிதை. உண்மை எந்த பொருள்கொண்டும் கவிதை சமைக்கலாம்.

    ReplyDelete

  2. அற்புதம்.. வரிகளும் எண்ணங்களும்...

    ReplyDelete
  3. wow.. superb.. true sayings.. exact feeling with good expressions...

    ReplyDelete
  4. அன்பின் கதிர் - அருமையான கவிதை - உண்மை கவிதை சமைக்கக் கரு தான் தேவை - அழகான சொற்களில் கருவினைக் கவிதையாக மாற்றலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. எளிமை வியாபித்த கவிதை வரிகள்....அழகு...அழகு...பேரழகு....

    -வீரா

    ReplyDelete
  6. appadi ezhudha dhan muyarchikkiren

    Namakku munnadhu dhan varukiradhu

    ReplyDelete
  7. அம்மாவின் கழுத்து கவ்வி
    தொட்டிலாடும் நாய்க்குட்டி!!!! nice lines

    ReplyDelete

இது படிச்சீங்களா?