Thursday, 5 September 2013

பயணம் ஒரு கோட்டில்



நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது

என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை

இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்

எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.

***
நன்றி: அதீதம்


6 comments:

  1. பறவையின் நிழல் என்னை வருடிய
    எதோ ஒரு நொடியில்
    என் கால் எறும்பினை
    மரணத்தில் புதைத்திருக்கலாம்.\\ அருமை கதிர்!

    ReplyDelete
  2. நேர்க்கோட்டுப் பயணத்தை மூன்று காட்சிப் பொருள்களைக் கொண்டு விளக்கிய விதம் அருமை கதிர்...
    (இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டமிட்டு எவ்ளோ நாளாச்சு!....)

    நிஜமா நல்லா இருக்கு கதிர்...

    பிரபாகர்...

    ReplyDelete
  3. வணக்கம் அண்ணா....

    தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...

    அதற்கான சுட்டி இதோ..

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html

    நன்றி.

    ReplyDelete
  4. பறவையின் நிழல் வருடுவதை உணர பெற்றால் அங்கு நிகழ்வது அற்புதம் ..!

    ReplyDelete
  5. பறவையின் நிழல் என்னை வருடிய
    எதோ ஒரு நொடியில்
    என் கால் எறும்பினை
    மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna

    -VEERA

    ReplyDelete
  6. பறவையின் நிழல் என்னை வருடிய
    எதோ ஒரு நொடியில்
    என் கால் எறும்பினை
    மரணத்தில் புதைத்திருக்கலாம்//.....fine anna

    -VEERA

    ReplyDelete

இது படிச்சீங்களா?