Tuesday, 15 October 2013

மரணத் தூரிகை



பொண்டாட்டி
புள்ள குட்டி
அப்பன் ஆத்தா
பொறந்தவ
மருமக
பேரம்பேத்தி
எவரிடமும்
சொல்லிச்செல்ல
அவகாசமற்றவனின்
மரணத் தூரிகை ஈரம்
ஒருபோதும்
உலர்ந்து விடுவதில்லை
தீரா நினைவுகளைத்
தீட்டுவதிலிருந்து

-0-

6 comments:

  1. மரணத் தூரிகை - "த்" வேண்டுமா?

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை...

    வித்தியாசமான சிந்தனை ரசித்தேன்....

    ReplyDelete
  3. அன்பின் கதிர் - சிந்தனை நன்று - கவிதையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. சொல்லி செல்ல அவகாசம் இல்ல என்பதை விட அனுமதி இல்லை என்பதே சரி

    ReplyDelete
  5. அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி அண்ணா....

    ReplyDelete

இது படிச்சீங்களா?