Thursday, 7 November 2013

வழிந்தோடும் கல்





இறுதியாய் நானிட்ட
முற்றுப்புள்ளிக்குள்
 
புதைந்த வார்த்தைகளுக்கு
கொஞ்சம் பூக்கள்
தூவிச் செல்லுங்கள்!

*

உள்ளங்கையில்
ஏந்தியிருக்கும் கல்
விரலிடுக்கில்
வழிந்தோடும் நீரால்
செய்யப்பட்டிருக்காலம்!

*

வலிக்கட்டும்
வலிக்கு
பிடித்திருக்கும் வரை

வலிக்கு வலிக்கும்வரை
வலியை நோக்குவதைத் தவிர
திட்டமேதுமில்லை

*

2 comments:

இது படிச்சீங்களா?