Wednesday, 25 December 2013

முத்த இசை





அறையில் நிரம்பி  
நெருக்கும் குளிரை
கொஞ்சம் தேநீர் கொண்டு
கொய்திடலாம்
இல்லையெனில்
உன் இதழ்களில்
ஒத்தி வழியனுப்பலாம்!

*

நின் இதழ்கள்
நரம்புகளாய்
என் இதழ்கள்
விரல்களாய்
ஓயுமோ முத்த இசை!

*

இடி பொழியும் இரவு
இமைகள் கீறும் மின்னல்
பெய்துவக்கும் மழை
பெரு நம்பிக்கையாய்
சுடும் முத்தம்!

*

1 comment:

  1. இசையை அனுபவிக்கவிடாமல் உதடுகள் இமசைசெய்கிறது.

    ReplyDelete

இது படிச்சீங்களா?