
வீதியோரம் நின்று
விழிகள் வீதியில் மேய
நண்பனோடு அரட்டையில்
ஆழ்ந்திருந்த அந்தி நேரம்...
காலையில் எடுத்துச்சென்று...
இன்னும் விற்காத முறுக்கு
பாறாங்கல்லாய் கூடைக்குள்
கிழவியின் தலைமேல்....
"சாமீ....
கொஞ்சம் முறுக்கெடுங்கப்பா..
நல்ல முறுக்கப்பா.."
ஒடுங்கிய கண்ணில்
ஒரு நம்பிக்கை ஒளி
என் நாகரீக வெளிச்சம்
இடுங்கிய கண்ணை இன்னும்
கூடுதலாக இருளாக்கியது...
தளராத நம்பிக்கையோடு
தளர்ந்த நடையோடு நகர்கிறாள்....
கிழவியின் கூடையில்
விற்காத முறுக்கு அப்படியே..
வாங்காத முறுக்கு
என் மனதில் பிசுபிசுப்பாய்
செரிமானம் ஆகாமல்...
//என் மனதில் பிசுபிசுப்பாய்
ReplyDeleteநிறைய முறுக்கு
செரிமானம் ஆகாமல்...//
நமக்கும் தாத்தா, பாட்டி இருக்காங்கன்னு ஞாபகம் வந்தாலே செரிமானம் ஆகிறும்!
val paiyan comment super
ReplyDeleteexcellent. It is true. Lot of the time we will do like this. Ehat we do. Always we response our prestege only
ReplyDeleteஉண்மையை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ... அருமை !!!
ReplyDeleteதொடாத பகுதிகளைத் தொட்டுச் செல்கிறது....
ReplyDelete//என் நாகரீக வெளிச்சம்//
ReplyDeleteபல முன்னெடுப்புகளைத் தடுப்பதே இதுதான்
அருமை..இனி வாங்கி திங்க சொல்லும் வரிகள்..அதுவரை அக்கிழவி இருப்பாளா ? :(
ReplyDeleteவாங்காத முறுக்கு
ReplyDeleteஎன் மனதில் பிசுபிசுப்பாய்
செரிமானம் ஆகாமல்... \\
பல நேரங்களில் இப்படித்தான்...எதுவும் தாமதமாய்த்தான் தோன்றும்! :-)