Wednesday, 2 September 2009

கமல் சார் திஸ் இஸ் டூ மச்


திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன” என்ற ஒரு பொன்மொழியை சமீபத்தில் ஒரு ஆங்கில தொலைக் காட்சி பேட்டியில் உதிர்த்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அடுத்து, “ஏன் சரிகாவை திருமணம் செய்து கொண்டீர்கள்” என்ற கேள்விக்கு “ஹோட்டல்களில் சரிகாவுடன் அறை எடுத்து தங்கும் போது பிரச்சனை வருகிறது, எனவே திருமணம் செய்து கொண்டேன்” என்று புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார்.

ஆஹா... கமல் சார்... திருமணம் என்பது இதற்காகத்தானா? ஓ... இதே காரணத்தால் தான் நீங்கள் முதலில் ஒரு திருமணம் செய்து கொண்டீர்களா!!!???

ஏன் கமல் சார்...
உங்களுக்கு வீடு இருக்கிறது தானே, என்ன தினமுமா ஹோட்டல்களில் தங்கினீர்கள் சில நாட்கள் தானே சரிகாவுடன் ஹோட்டல்களில் தங்கியிருப்பீர்கள்?

நீங்கள் ஏன் சில ரெடிமேட் சினிமா தாலிகளை செய்து, உங்கள் பெட்டியிலோ அல்லது உங்களுடன் இணைந்து வந்த சரிகாவின் கைப் பையிலோ வைத்துக் கொண்டு ஹோட்டல்களில் நுழையும் முன் போட்டுக் கொண்டு திரும்ப வெளியே வரும்போது கழட்டி வைத்திருக்கக் கூடாது?

இதைவிட்டு விட்டு ஹோட்டல்களில் பிரச்சனை செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக திருமணமா...!!!??? கமல் சார் திஸ் இஸ் டூ மச்.

சரி...சரி உண்மையாகவே அப்படி சொன்னீர்களா? அல்லது சினிமாவில் நடிப்பது போல் தொலைக்காட்சி கேமரா முன் மறந்து போய் நடித்துவிட்டீர்களா?

திரையுலகின் மிகப்பெரிய திறமைசாலி, சில நாட்கள் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதற்காக அவரோடு இணைந்து வாழ்ந்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் அந்தப் பெண்ணை, சரிகாவை திருமணம் செய்து கொண்டது அபத்தத்தின் உச்ச கட்டம்.

மதுக்குடிப்பவன் திராட்சைத் தோட்டத்தையே வாங்கி விடுவதில்லை, புகை பிடிப்பவன் புகையிலை தோட்டத்தையே வாங்கிவிடுவதில்லை.

ஆனாலும் கமல் சார், உங்கள் படம் ஏனோ ரொம்ப பிடிக்கும். உங்கள் நடிப்பு மேல் கொண்ட மரியாதை வேறு எந்த நடிகர் மேலும் இதுவரை வந்ததில்லை. உங்கள் திறமை மேல் என்றுமே பெரும் வியப்பு உண்டு. ஆனால் நடிக்க வந்து பொன்விழா காணும் நீங்கள் தொலைக்காட்சியில் நடித்துப் பேசிய இந்த வசனம் மட்டும் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.



-----------------------------------------------------------------------
முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

55 comments:

  1. மதுக்குடிப்பவன் திராட்சைத் தோட்டத்தையே வாங்கி விடுவதில்லை, புகை பிடிப்பவன் புகையிலை தோட்டத்தையே வாங்கிவிடுவதில்லை.

    மிகச் சரியான வார்த்தைகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த கருத்தை பதிவாக போடலாம் என்று இருந்தேன்.நீங்கள் தெளிவாக சொல்லி இருக்கும் போது எனக்கு நிம்மதியாக உள்ளது.

    சாதரமானவர்கள் இந்த கருத்தை சொன்னால் யாரும் பெரிதாக எடுத்து கொள்ள போவது கிடையாது.கமல் போன்றவர்கள் சொன்னால் அந்த கருத்து அனைவரையும் சென்றடையும் என்பது அவருக்கு தெரியாதா?.

    ReplyDelete
  3. கதிர் ஸார் நீங்க செஞ்சது 3 அல்ல 4 மச்சு.

    யார்ட்ட எத எதிர்பார்க்கிறது...

    ReplyDelete
  4. ஆமாம் டூ..... மச்....

    சரியான வார்த்தைகளால் அடிசிரிகீங்க

    பலருக்கு உதாரணமாய் இருந்துவிட்டு ...
    இப்படி ஒரு பதில்.....

    ReplyDelete
  5. அப்ப கமலுக்கு நாடோடிகள் படம் எல்லாம் கேலிக்கூத்தாய் இருக்கும்.

    ReplyDelete
  6. இந்த கருத்தினை அவர் கூறியபொழுதே அவர் எந்த நிலைப்பாட்டுடன் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது...

    ஒரு சாதாரண மனிதனால் இந்த கருத்து சொல்லப்பட்டிருக்குமாயின் அது எடுபடாமல் போயிருக்கும்.. கலைத்துறையில் அதுவும் பலர் பார்த்து ரசிக்கும் ஒரு நபர் இதுபோன்று தனது வாய்வழியே ஒரு ஆழம் பொருந்திய செய்தியினை வெகு சுலபமாக சொல்லும் பொழுது அது எத்தனை பேரின் மனதை புண்படுத்துவதாக அமைகிறது...

    இதை அறியாதவரா கமல்...இந்த கேள்விகள் இதுவரை கமலை சென்றடைந்திருக்காமல் இருந்திருக்காது... என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்...
    அதுவாவது எவரையும், முக்கியமாக நமது கலாச்சாரத்தை புண்படுத்தாத வகையில் இருக்கிறதா என்று பார்க்கலாம்..

    ReplyDelete
  7. இது அவருடைய கருத்துதான ! அவர் வாழ்கை அமைப்பு அப்படி !
    கடவுள் இருந்தAA நல்லா இருக்கும்ன்னு சொன்ன கருத்து மாதிரி தான் ! அவரவர் நிலைமைகேட்ப இதனை புரிந்து கொள்ளவேண்டும் !
    அவரை முழுமையாக புரிந்து கொண்டவர்களுக்கு இது பற்றி தெரியும் !

    ReplyDelete
  8. மன்னிக்க வேண்டும் கதிர். தவறான புரிதல் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்


    நன்றி @@ நட்புடன் ஜமால்

    நன்றி @@ நாடோடி இலக்கியன்(வருகைக்கு)

    நன்றி @@ Anonymous

    நன்றி @@ ச.செந்தில்வேலன்

    ReplyDelete
  10. நன்றி @@ சுரேஷ்குமார்
    //கமல் போன்றவர்கள் சொன்னால் அந்த கருத்து அனைவரையும் சென்றடையும் என்பது அவருக்கு தெரியாதா?.//

    நன்றி @@ நட்புடன் ஜமால்
    //யார்ட்ட எத எதிர்பார்க்கிறது...//

    நன்றி @@ seemangani said...
    //பலருக்கு உதாரணமாய் இருந்துவிட்டு ... இப்படி ஒரு பதில்.....//

    நன்றி @@ க.பாலாஜி said...

    //கலைத்துறையில் அதுவும் பலர் பார்த்து ரசிக்கும் ஒரு நபர் இதுபோன்று தனது வாய்வழியே ஒரு ஆழம் பொருந்திய செய்தியினை வெகு சுலபமாக சொல்லும் பொழுது//


    நன்றி @@ ஆகாயமனிதன்

    //இது அவருடைய கருத்துதான ! அவர் வாழ்கை அமைப்பு அப்படி !//

    நன்றி @@ வானம்பாடிகள்
    //மன்னிக்க வேண்டும் கதிர்.//

    இது ரொம்ப பெரியவார்த்தை. என்னை உங்களிடமிருந்து அன்னியப்படுத்தும் வார்த்தை. நீங்கள் உங்கள் கருத்தை தாராளமாக சொல்லலாம்.

    //தவறான புரிதல் என நினைக்கிறேன்.//

    இனிய நண்பர்களே..

    கமல் சொன்ன வரிகளை நான் கலாச்சார சீர்கேடு, குற்றம் என்பது போன்ற கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. அது பற்றி எனக்கும் தனியே கருத்துகள் சில உள்ளன.

    கமல், சரிகாவுடன் திருமணம் ஆகாமல் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து நீண்ட நாட்கள் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கிறார். அவ்வளவு தாமதமாக திருமணம் செய்து கொள்ள "ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்" என்ற அபத்தமான வரிகள்தான் எதற்கு என்ற கேள்வி.
    "ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள்" இதைத் தவிர்க்க நமக்கெல்லாம் தெரியாமலேயே ஒரு பொம்மைத் தாலி போதுமே.


    இதுவரை திருமணம் ஆனாவர்கள் யாரும் சொல்லாத காரணமாவே தோன்றுகிறது இது. திருமணம் என்ற மிகப்பெரிய நிகழ்வு ஒரு ஹோட்டலின் பொருட்டு என்று சிறுமைப்படுத்தியர் யாரும் அறியாத ஒரு ஓரத்து மனிதன் அல்ல. தமிழகத்தின் புகழ் வாய்ந்த நபர். அவர் சொல்வதை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, ஆனால் ஒரு முறையேனும் கேட்பார்கள். கமல் சொன்ன கூற்று எந்தவித நியாத்தையும் ஒரு குடும்ப வாழ்வில் கொடுத்துவிட முடியாது.

    செய்த திருமணங்களுக்கான நியாத்தை வேண்டுமானால் கறைபடியச் செய்யலாம்.


    ஆக்கப்பூர்வமான கருத்துகளை மேலும் எதிர் நோக்குகிறேன்.

    ReplyDelete
  11. நீங்கள் ஏன் சில ரெடிமேட் சினிமா தாலிகளை செய்து, உங்கள் பெட்டியிலோ அல்லது உங்களுடன் இணைந்து வந்த சரிகாவின் கைப் பையிலோ வைத்துக் கொண்டு ஹோட்டல்களில் நுழையும் முன் போட்டுக் கொண்டு திரும்ப வெளியே வரும்போது கழட்டி வைத்திருக்கக் கூடாது?
    //
    அவர் பொய் சொல்லாத விரும்பாத உண்மையான மனிதர் இருந்திருக்கிறார். ஏன் அவரை பொய் சொல்ல சொல்கிறீர்கள்.

    உங்கள் கருத்தை தெரிவிக்கலாம், புகுத்துவது சரியல்ல எனபது என் எண்ணம்

    ReplyDelete
  12. இதைவிட்டு விட்டு ஹோட்டல்களில் பிரச்சனை செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக திருமணமா...!!!??? கமல் சார் திஸ் இஸ் டூ மச்.///

    உண்மை!! நானும் இதே கருத்தை ஆமோதிக்கிறேன்!

    ReplyDelete
  13. யார் வேண்டுமானாலும் அவரவர் கருத்தைச் சொல்லலாம்.அதைப் பற்றி நீங்கள் என்ன கருத்தைக் கொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும்,கதிர்.
    புகழ் வாய்ந்தவர்கள்,மஹாத்மாக்கள்,சமூகத்தின் மரியாதை பெற்றவர்கள் யாரும் உங்கள் மனதினை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்.

    ReplyDelete
  14. சரியான கேள்விகள்.
    சினிமா இன்னும் வெகுதூரம் போகவேண்டும்,
    நல்ல மனிதர்கள் நடிக்க அனுமதிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  15. அய்யா, வெறும் வார்த்தைகளுக்காக மட்டும் ஒரு பெரிய கலைஞனை அவமாணப்படுத்தி பதிவு எழுதுவது சரியல்ல...
    அவர் திருமணங்களை பத்தி என்ன கூற வருகிறார் என்பதை கண்க்கிடாமல் ஷோட்டல்ல ரூம் போடறத பத்தியே பேசுறீங்களே...
    திருமணங்கள் இப்பெல்லாம், பணம், அந்தஸ்து இதை வச்சிகிட்டுதான் நடக்குது. காதல் அப்படிங்கர ஒரு விஷயம் செத்து ரொம்ப நாளாச்சு. காதலே இல்லாத போது கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டா? அன்பு வந்துடுமா? திருமணம் அப்படினு சொல்லிடு ஒருத்தர ஒருத்தர் காதலிக்காம, கட்டாயத்தின் பேர்ல வாழ்றது ஒரு வாழ்க்கையா? அப்படிதான் கேட்டு இருக்கிறார். இத மொதல்ல புரிச்சிக்குற அறிவ வளர்த்துகுங்க.... நல்லது.

    ReplyDelete
  16. கமல் சொன்னது, "ஓட்டலில் அறை எடுத்துத் தங்குவதில் 'கூட' பிரச்சினை வருகிறது" என்பதே. அதாவது, இன்னும் பெரிய காரணங்கள் உண்டு; மிகச் சிறிய காரணம் ஒன்று இது.

    இதைக் காரணமாகச் சொன்னது, ஆண், பெண் இருவர் ஒன்றாக இருக்குமொரு நிகழ்வில் சமூகத்தின் கட்டுப்பாடு, எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சுட்டத்தான்.

    மற்றபடி, நீங்கள் கருத்து சொல்லித் தூள் கிளப்புங்கள், கதிர்.
    நானும் ஓரமா நின்னு உங்களுக்கு ஒரு பிகில் அடிச்சுக்கறேன்.

    ReplyDelete
  17. கமல் நடிக்கவில்லை நண்பரே! வெளிப்படையானவராகவே இருக்கிறார்.

    ReplyDelete
  18. மாதவராஜ் அவர்கள் பதிவில் சொன்னது தான்!

    அது கமலுடய சொந்த கருத்து, ஒட்டு மொத்த சமூகமும் அதற்காக தலையாட்ட வேண்டிய அவசியமில்லை!

    ஆனால் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகளை பார்க்கும் போது!..................

    ReplyDelete
  19. //"ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்" என்ற அபத்தமான வரிகள்தான் எதற்கு என்ற கேள்வி.//

    இந்த அபத்தவரிகள் தட்ஸ்தமிழ் சொன்னது ..கமல் சொன்னதன் ஒளிக்காட்சியை பார்க்காமல் நீங்கள் தட்ஸ்தமிழ்-ல் இருந்து சுட்டது .

    கமல் சொன்னது "ஹோட்டல் அறை எடுப்பதற்கு கூட இவர் உங்கள் மனைவியா என கேட்பார்கள் ..இல்லை என் மகளின் தாய் என சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று கூறி ,எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லாவிடினும் ,மற்றவர் சவுகரியத்துக்காக செய்ய வேண்டியிருந்தது என பொருள் பட கூறியிருந்தார் ..

    அதில் 'even' என்று அவர் சொன்னதை விட்டு விட்டு ஹோட்டலில் ரூம் போடத் தான் கல்யாணம் செய்தேன் என அவர் சொன்னதாக தட்ஸ்தமிழ் எழுதுகிறது ..பதிவு போட கிடைச்சதடா ஒரு மேட்டர் என்ற குஷியில் அதை அப்படியே காப்பியடித்து ஒரு பதிவு .. அதை வைத்து கும்மியடிக்க ஒரு 4 பேர்..ஹையோ.

    ReplyDelete
  20. //உண்மை!! நானும் இதே கருத்தை ஆமோதிக்கிறேன்//

    தேவன் மாயம் சார்,
    ஹோட்டலில் ரூம் போடும் ஒரே காரணத்துக்காக தான் கல்யாணம் பண்னினேன் -னு கமல் சொன்னதை நீங்க டி.வி.யில் பாத்தீங்களா?

    ReplyDelete
  21. கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

    ReplyDelete
  22. ஐயா கதிர் அவர்களே...
    உங்களுடைய யோசனைகளை எதற்காக கமல் மீது திணிக்கிறீர்கள். அவர் ஒரு நடிகர்... அவர் நடிக்கும் படங்களை ரசிக்கிறீர்கள்... அதோடு தீர்ந்தது. அதைவிட்டு விட்டு எதற்காக தாலி பற்றி, கல்யாணம் பற்றி, குடும்பம் பற்றியெல்லாம் அவர் நீங்கள் விரும்பும் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    அவர் கருத்து உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றால் ஒதுக்கித் தள்ளுங்கள்!

    ReplyDelete
  23. ஆமா கதிர் அவருக்கு ```டூ```வைஃப்

    டூ மச்

    ReplyDelete
  24. நல்ல இடுகை கதிர்..! நடிகன் என்ற முறைல மட்டுமில்லாது.. மனிதன் என்ற முறைலயும் கமல் மேல் மிகவும் அபிமானம் உண்டு. உங்க ஆதங்கம் புரியுது. அந்தப் பதில் அபத்தம் என்று எடுத்துக் கொண்டால் அபத்தம். It's all about perspective. மேலைத்தேயர்கள் பலர் திருமணமானவர்களுக்கு வரிச் சலுகை எனில்.. திருமணம் செய்வதும்.. அவர்களுக்கு வரி அதிகமெனில்.. விவாகரத்து செய்து .. தொடர்ந்து பார்ட்னர் ஆக இருப்பதும்.. சாதாரணம்.

    தயவு செய்து.. அவங்க கூட நம்ம கலாச்சாரம் ஒப்பிடாதிங்கோன்னு ஆரம்பிக்கதீங்கோ..! அதில்ல..!

    கமலின் பேட்டி நான் பார்க்கவில்லை. நீங்க சொன்னதை வைத்துக் கொண்டு பார்த்தால்.. இவ்வாறான சில்லறைத் தொல்லைகள் இருப்பதால் கல்யாணம் செய்ய வேண்டி வந்தது... இல்லையெனில்.. தொடர்ந்தும் அப்படியே இருந்திருப்போம் என்று சொல்லுவதாகப் படுகிறது. அபத்தம் என்று எடுத்துக் கொண்டால் அபத்தம்..! எனக்கு விகல்பமாகப் படவில்லை. :)

    still repect yer perspective.. =).. vote poattaachchu..!

    ReplyDelete
  25. எந்த உறவையும் சரியாகவும் பயன் படுத்தலாம்.தவறாகவும் பயன் படுத்தலாம்.
    திருமணத்தைக் கமல் பயன் படுத்திய விதம் வேதனைக்குரியது.
    நிறையப் பேரைப் போல அவர் ஆத்திரப் பட வேண்டியவர் அல்ல.அனுதாபப் பட வேண்டியவர் என்பது என் கருத்து.

    ReplyDelete
  26. kamal oru arivu jeevi, aha iffa purinjuthu niraya arivu jeevikalai enn paithiyakarannu sollaranka

    ReplyDelete
  27. அட, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

    ReplyDelete
  28. நணபரே,
    தங்கள் பதிவுக்கு நன்றி.திருமணம் மற்றும் தாலி போன்ற சடங்குகளில் நம்பிக்கை இல்லை என்பதாகவே அந்த கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றே நினைக்குறேன். நாம் நமது புரிதலில் பிரச்சனை என்றே நினைக்குறேன்.

    ReplyDelete
  29. அபத்தமாக கமல் பேசிய இன்னொரு விஷயத்திற்கும் இங்கே ஒரு பதில் இருக்கிறது.

    http://hayyram.blogspot.com/2009/03/blog-post_27.html

    அன்புடன்.
    ராம்

    ReplyDelete
  30. //இதைவிட்டு விட்டு ஹோட்டல்களில் பிரச்சனை செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக திருமணமா...!!!??? கமல் சார் திஸ் இஸ் டூ மச்.//

    யெஸ் திஸ் இஸ் டூ மச்...


    சில உண்மைகளை சொல்ல முற்படுகின்றார் என்று நினைகின்றேன் ...

    ReplyDelete
  31. அவர் கூறியதை தவறாகபுரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  32. முதலில் இந்த சார் மோர் போன்ற சொல்லாடல்களை தவிருங்கள். அவர் பெயர் கமல்தானே கமல் என்றே சொல்லுங்கள்..

    ReplyDelete
  33. ஆனைக்கும் அடி சறுக்கும்....

    ReplyDelete
  34. மேலே கருத்து சொன்ன பல பேர் கமலின் கருத்து சரி என்று சொல்கிறார்கள்.கமலின் கருத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் பல பேர் நம் நாட்டில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.சில பேர் எதையும் சிந்திக்காமல் கமல் சொல்வதை பின் பற்றுவார்களா..? மாட்டார்களா...?.இது நம் நாட்டின் கலச்சாரத்தை சீரழிக்காதா..?

    சோ எங்களை பொருத்தவரை கமல் சொன்னது மிக பெரிய தவறுதான்.நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

    ReplyDelete
  35. //மேலே கருத்து சொன்ன பல பேர் கமலின் கருத்து சரி என்று சொல்கிறார்கள்.//

    கமல் சொல்லாத ஒரு கருத்தை ,அல்லது சொன்னதை திரித்து இங்கே சொல்லும் போது கருத்து சரி ,தவறு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    உளறுவதற்கு முன் NDTV -ல் அந்த வீடியோ இருக்கிறது .போய் பார்க்கவும் .அப்போதும் புரியவில்லையென்றால் ...

    ReplyDelete
  36. //ஜோ/Joe said...
    //உளறுவதற்கு முன் NDTV -ல் அந்த வீடியோ இருக்கிறது .போய் பார்க்கவும்.//

    சுரேஷ் குமார் அவர்கள் சொன்ன கருத்தை மறுப்பது உங்கள் உரிமை. ஆனால் "உளறுதல்" என்ற கடுமையான வார்த்தை பிரயோகம் செய்வதை தவிர்க்கவும்.

    என் இடுகையின் கருத்தை நான் புரிந்த கொண்ட விதத்தை தவறு என்று வானம்பாடிகள், மாதவராஜ், கேபிள் சங்கர் உட்பட சிலர் சுட்டியுள்ளனர். அவர்கள் சொன்ன கருத்தை மதிக்கிறேன் கூடவே அவர்கள் கையாண்ட நாகரீகமான முறையிலான வெளிப்படுத்துதலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    நீங்கள் புரிந்து கொண்ட விதத்தை கமல் சொன்னதில் / சொன்னாதாக நீங்கள் புரிந்துகொண்டதை ஒரு இடுகையாகப் போடுங்கள். தயவுசெய்து இன்னொரு பதிவரை கோபம் கொள்ளச் செய்யும் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

    கீழ் உள்ள இணைப்பில் கமல் பேட்டி ஆங்கில வரிகளில் உள்ளது
    http://www.ndtv.com/news/india/marriage_was_a_compromise_kamal_haasan.php

    ReplyDelete
  37. Mr.Joe

    //Yes, I always said, like she said, why you did you say, "Thank god! I am an atheist!" That's because I love people and I do most things to please the people I love, including silly things like marriage//

    திருமணம் என்பது silly things?

    ReplyDelete
  38. கமல் சமீபத்தில் ஒரு மலையாள சேனலில் பேட்டி கொடுக்கும்போது "பொய் சொல்லியோ பொய்யாக வாழவோ எனக்கு பிடிக்காது தலையில முடி இல்லேன்னா அதை மறைக்க தொப்பி போட்ட்டுகிட்டு திரியிறது எனக்கு பிடிக்காது, வேகமா காத்து அடிச்சா தொப்பிய பிடிச்சிக்கிற அவசியமில்லாத டென்சன் எனக்கு தேவை இல்லை" என்பதை தெளிவாக சொன்னார். ஆகையால் அவரின் கண்ணோட்டம் வேறு.

    ReplyDelete
  39. ஏன்யா கமல போடு இப்டி சாவடிகறீங்க....அந்தாளு அப்டிய்தன்யா...விட்ருங்கயா..

    ReplyDelete
  40. kamal did not say that he married becoz to take room,he told even in hotels they r not allowing if u r not a couple.please donot misunderstand it.u can watch that video on ndtv website.

    ReplyDelete
  41. படித்து விட்டேன்.நன்று.

    ReplyDelete
  42. kamal says ,"Yes! Because later on, even taking a hotel room
    was difficult. They wanted to know who the other person is. If you say 'that's the mother of my children', that's not good enough"-these were his words i assume, but totally ,you have turned the issue into some blunder,
    Dear mr.kathir,i request you to know something in depth , before u present some thing in a blog, being a renowned author ur blog is read by most of us !
    and i d support kamal's view marriage is neither an oldest institution,nor a holding one .
    but to pacify the society,marriage is solicited.
    And when u do something different from this herd, u r marked as rebellion.
    In fact i pity Kamal, he is a not a person to be among this clods,let it be his films, nor his life style !

    ReplyDelete
  43. ithu avaroda thanipatta karuthu...athai velipadaiya solvatharkku avarukku urimai undu...atharkana thairiyamum avaridam mattumthan ullathu..

    ReplyDelete
  44. ithu avaroda thanipatta karuthu...athai velipadaiya solvatharkku avarukku urimai undu...atharkana thairiyamum avaridam mattumthan ullathu..

    ReplyDelete
  45. ithu avaroda thanipatta karuthu...athai velipadaiya solvatharkku avarukku urimai undu...atharkana thairiyamum avaridam mattumthan ullathu..

    ReplyDelete
  46. ithu avaroda thanipatta karuthu...athai velipadaiya solvatharkku avarukku urimai undu...atharkana thairiyamum avaridam mattumthan ullathu..

    ReplyDelete
  47. ithu avaroda thanipatta karuthu...athai velipadaiya solvatharkku avarukku urimai undu...atharkana thairiyamum avaridam mattumthan ullathu..

    ReplyDelete
  48. அவர் பொய் சொல்லாத விரும்பாத உண்மையான மனிதர் இருந்திருக்கிறார். ஏன் அவரை பொய் சொல்ல சொல்கிறீர்கள்.

    உங்கள் கருத்தை தெரிவிக்கலாம், புகுத்துவது சரியல்ல எனபது என் எண்ணம்

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete

இது படிச்சீங்களா?