பழுப்பேறிய
வெள்ளை வேட்டி
சாயம் போன
கசங்கிய சட்டை
தடித்த முண்டாசு
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
நகரத்து சந்திப்புகளில்
தட்டுத் தடுமாறும்
கிராமத்தானை
”சாவு கிராக்கி”
என கடக்கும்
நகத்தில் அழுக்குச்சேரா
நகரத்தானின்
அடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!
_______________________
நகரம் எனும் நரகத்திலே... மனிதாபிமானம்... செய்யுங்கள்... எதிர்பார்க்காதீர்...
ReplyDeleteசோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.
ReplyDeleteசோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.
ReplyDeleteவார்த்தைகளிலே அறையப்பட்டுவிட்டான் அவன் .
ReplyDeleteமிகவும் அருமை .
//நகரத்தானின்
ReplyDeleteஅடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!//
நறுக்குன்னு சொல்லிருக்கீங்க
கதிர் சூப்பர் ,
இனிமேல் கிராமத்தானை பார்க்கும் பொழுது என் பார்வை மாறும்
நெற்றிப்பொட்டில் அடித்தது உங்கள் வார்த்தைகள்...
ReplyDeleteஆம் கதிர்... சாவுகிராக்கி சொல்லப்பட்டவர் அல்ல, சொன்னவன் தான்.
ReplyDeleteபிரபாகர்.
பழுப்பு நிறக்
ReplyDeleteகால்சட்டை
சாயம் போன
கசங்கிய சட்டை
கலைந்த தலைமுடி
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
விழிப்பார்வையில்
சரி வேணாம் விடுங்க
கவிதை சூப்பர் கதிர்:)
சவுக்கடி
ReplyDeleteநச்சென்று........
ReplyDeleteஅண்ணா,
ReplyDeleteஉப்பு ஒறைக்குமா?
சூப்பர் ! டூ இட் ! டூ இட் !
ReplyDelete//அந்தச் சாவுகிராக்கி
ReplyDeleteசிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!
//
நன்றாகவே கரிக்க வேண்டும்
ரொம்ப நல்லாயிருக்கு கதிர் அண்ணா.
ReplyDeleteபின்னிருக்கீங்க அங்கிள்... கிராமத்தான்னாவே, ஒண்ணும் தெரியாதவங்ககிற எண்ணம் இருக்கு... சிட்டில பாதி பேருக்கு, விண்வெளியில் இருந்து குதிச்ச நினைப்புதான்... என்ன, எத்தனை தடவை பட்டாலும் திருந்த மாட்டாங்க..
ReplyDeleteநல்லாருக்கு கதிர்...
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteஅருமை!
ReplyDeleteதிருந்த மாட்டானூக. சொன்னவந்தான் சாவூ கிராக்கி.
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteஅருமை கதிர்
ReplyDeleteம்ம்ம் ... பாலா அண்ணே கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க
ReplyDeleteநன்றி
ReplyDelete@@ அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..
@@ dheva
@@ பனித்துளி சங்கர்
@@ ரோகிணிசிவா
@@ அகல்விளக்கு
@@ பிரபாகர்
@@ வானம்பாடிகள்
(யாருக்குங்கங்ணா இந்த கவிதை)
@@ கரிசல்காரன்
@@ க.பாலாசி
@@ சத்ரியன்
@@ ராஜன்
(டன்)
@@ VELU.G
@@ செ.சரவணக்குமார்
@@ பிரேமா மகள்
@@ கலகலப்ரியா
@@ அக்பர்
@@ தாமோதர் சந்துரு
@@ ராஜ்குமார்
@@ r.v.saravanan kudandhai
@@ நசரேயன்
(எனி உள் குத்து!!!)
நேற்றுதான் எனது அலுவலக நண்பனிடம் விவசாயம் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அருமையான சவுக்கடி தலைவரே ..
ReplyDeleteசரியான சாட்டையடி........
ReplyDeleteமீண்டும் எழுந்து நின்னீட்டீங்க போல இருக்குது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்று.
ReplyDeleteரொம்ப உப்பு கரிச்சா பொண்டாட்டிக்கும் அதே திட்டு விழும்!
ReplyDeleteஅவசர உலகில் அப்பனையே சாவுகிராக்கின்னு தான் திட்டுறானுங்க!
நல்ல பதிவு கதிர்.
ReplyDeleteஎன்ன சொல்ல்றதுனே தெரியல அண்ணே...அற்புதமா இருக்கு...கவிதை..
ReplyDeleteகவிதை ரசம் கொஞ்சம் கம்மியாக இருப்பினும் நல்ல கருத்து.
ReplyDeleteநச்.
ReplyDeleteஉறைக்கிற அளவுக்கு உணர்வு வேணுமே கதிர் !
ReplyDeleteஓடும் வேகத்தில்
ReplyDeleteகரிப்பை உணரும்
சுரணையையும்
இழந்தாச்சு
நகரவாசிகள்.
தல
ReplyDeleteநல்லா வந்திருக்கு :)
நன்றி
ReplyDelete@@ ~~Romeo~~
@@ Sangkavi
@@ ராஜ நடராஜன்
(ஆஹா)
@@ இராமசாமி கண்ணண்
@@ வால்பையன்
@@ ச.செந்தில்வேலன்
@@ seemangani
@@ ஆதிமூலகிருஷ்ணன்
@@ Chitra
@@ ஹேமா
@@ Madumitha
@@ யாசவி
சாவுகிராக்கிகள்...
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteவாழ்வைக் கிராக்கியாக்கி வைத்திருப்பவர்களுக்கு நல்ல பாடம்! கவிதை அருமை!
ReplyDeletesaaram!
ReplyDeleteஅருமை
ReplyDeleteபிரமாதம் ஸார்
ReplyDeleteநன்றி
ReplyDelete@@ தாராபுரத்தான்
@@ சே.குமார்
@@ K.B.JANARTHANAN
@@ இரசிகை
@@ T.V.ராதாகிருஷ்ணன்
@@ அன்பரசன்
நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்ற கவிதை ஞாபகம் வந்தது கதிர்
ReplyDeleteஅன்பின் கதிர்
ReplyDeleteகவிதை அருமை - சிந்தனை நன்று - எளிமையான இயல்பான சொற்கள் - வாழ்க
இருப்பினும் கிராமம் இல்லையேல் நகரம் இல்லை என்பது நூற்றுக்கு நூறு சரியான வாதமல்ல - கிராமத்தில் சேற்றில் கை வைத்தால் தான் நகரத்தில் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழங்கதை - கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகின்றன - சாவுகிராக்கி எனப்ப்ட்டவன் - கிராமத்தான் - நகரத்துக்கு வர ஆரம்பித்து விட்டான். இயற்கை வளம் அழிக்கப்படுகிறது - வயல்காடுகள் வாழ்விடங்களாக மாறுகின்றன - இயற்கை பொய்க்கிறது - நீர்வளம் - எரிசக்தி - மின்சாரம் அனைத்தும் கிராமப்புறங்களில் தேவையான அளவு கிடைப்பதில்லை - மெல்ல மெல்ல கிராமத்தான் நகரம் நோக்கி நக்ருகிறான். இதுதான் உண்மை நிலை.
எனவே இக் கவிதை சொல்லும் செய்தியினை ஏற்றுக் கொள்வது சற்றே கடினம் தான்.
படிப்பதற்கும் இரசிப்பதற்கும் சிறந்த கவிதை.
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
நன்றி
ReplyDelete@@ thenammailakshmanan
@@ cheena (சீனா)