Friday, 27 May 2011

உறையும் தனிமை


தனிமையில் இருக்கும் வீட்டை
பூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்

-*-

சோம்பேறித்தனத்திற்கு
வர்ணம் பூசும் போது மட்டும்
சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்

-*-

மனதுக்குள் கறை இருப்பதை
வசதியாய் மறந்து நிழற்படங்களில்
படிவது குறித்து பயம் கொள்கிறோம்!

-*-

எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!

-*-



11 comments:

  1. உண்மை உண்மை .கவிதை அருமை !

    ReplyDelete
  2. கூட்டத்தில் இருந்தாலும்
    தனிமையில் அலைகிறது
    மனசு...

    ReplyDelete
  3. தொடர் கவிதை மழை பொழிவதின் மர்மம் என்னவோ....

    அம்மா” ஆட்சியில் எவ்வளவு மாற்றம்....அப்பப்பா..

    ReplyDelete
  4. /எல்லாக் கோபங்களையும்
    பலவீனமானவர்களின் தலையில்
    வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!/
    இது ரொம்ப சரி!!!

    ReplyDelete
  5. நான்கும் நன்று.

    சுறுசுறுப்பு சூப்பர்:)!

    ReplyDelete
  6. //தனிமையில் இருக்கும் வீட்டை
    பூட்டும் போது தனிமையையும்
    உள்ளே வைத்தே பூட்டுகிறோம்
    //

    excellent

    ReplyDelete
  7. எல்லாமே எப்பவும்போல இயல்பாயிருக்கு !

    ReplyDelete
  8. தனிமை அருமை. நான்குமே நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. //எல்லாக் கோபங்களையும்
    பலவீனமானவர்களின் தலையில்
    வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!//
    சூப்பர்ப்ப்

    ReplyDelete

இது படிச்சீங்களா?