Saturday, 8 October 2011

கறை



படம்: இணையத்திலிருந்து



உடற்போர்வையை
அடித்துத் துவைத்த பின்னும்
அகலவில்லை காமக்கறை

கையறு நிலையில்
உற்றுப்பார்க்க தெரிந்தது
அது கறையல்ல…

காமமே சாயமாக
ஏற்றப்பட்ட நூலில்
நெய்த மனமென!
 

18 comments:

  1. அன்பின் கதிர் - அருமையான சிந்தனை - கருத்து நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. உடல்ப்போர்வை என்பது உடல் போர்வை என்றோ அல்லது உடற்போர்வை என்றோ இருக்கவேண்டும். பழமைபேசியினைக் கலந்தாலோசித்து மாற்றவும்

    ReplyDelete
  3. கதிர்,

    ஒளி வீசும் வரிகள்.

    ReplyDelete
  4. // உடற்போர்வையை
    அடித்துத் துவைத்த பின்னும்
    அகலவில்லை காமக்கறை //

    கற நல்லதுன்னு சர்ப் எக்ஸ்ஸெல் விளம்பரத்துலையே சொல்லுராங்களே!!!!!!!

    ReplyDelete
  5. நன்று!

    எனக்கு வேலையில்லாமற்ச் செய்த சீனா அய்யா அவர்கட்கு நன்றி!!

    ReplyDelete
  6. அன்பின் பழமை பேசி - என்ன இது சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜ் இப்படி எழுதலமா?

    //வேலையில்லாமற்ச் செய்த//

    ச் இங்கு வருமா - வரக் கூடாதே !

    வேலை இல்லாமல் செய்த அல்லது
    வேலையில்லாமற் செய்த என்று தானே வரவேண்டும்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. பிழைதானுங்க அய்யா. இல்லாமற் செய்த என்றிருத்தலே சரி!!

    ReplyDelete
  8. சிந்திக்க வேண்டிய நல்லதொரு கருத்து. வாழ்த்துகள் கதிர்.

    ReplyDelete
  9. மிகவும் அருமையான கவிதை.

    ReplyDelete
  10. Nice.

    Pazhamaikkum adi sarukkum.

    ReplyDelete
  11. kaamaththai eaan saar,
    adiththu thuvaikkireerkal
    athu karai alla, nirai.


    irunthaalum.kavithai arputham.

    ReplyDelete
  12. anpin pazhamai peasi vanakkam.

    ''orutharu kamaththai adiththu
    thuvaikkiraar. innoruththar ''ich''
    veandankiraar.(sorry..seena sir)

    ''enna kodumai sir ithu!"

    ReplyDelete
  13. அன்பின் ஜல்லி - "ச்" வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் - எல்லா இடங்களீலும் இருக்கக் கூடாது - இடமறிந்து "ச்" இட வேண்டும். சரியா ஜல்லி - நல்வாழ்த்துகள் ஜல்லி - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. இனப்பெருக்கத்திர்க்காக இறைவன்
    கட்டிய சாயம் அது. இப்போ தாறுமாறா
    கட்சி கொடுக்குது.

    ReplyDelete
  15. pal"ich'..pal'ich'..pathil 'ch'olliirukkeenga 'ch'ina sir.

    "idamarinthu 'ich' idaveandum"

    nalla varikal...thanks.

    ReplyDelete
  16. அவலத்தை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது நல்ல ஆக்கம் பாராட்டுகள் ...

    ReplyDelete
  17. அளவான வார்த்தைகளில்,அருமையான சிந்தனையை, அழகாக வடித்துள்ளீர்கள்

    ReplyDelete

இது படிச்சீங்களா?