Monday, 7 November 2011

பெருநதிப் பயணம்





ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி



நன்றி: திண்ணை

~

8 comments:

  1. நதியோட்டம் கவிதையோட்டம்

    ReplyDelete
  2. ம்.... நல்லாருக்கு கதிர்!...

    பிரபாகர்...

    ReplyDelete
  3. Nice.

    Who is this? http://erodekathir.blogspot.com/

    ReplyDelete
  4. சலசலவென்று கரைபுரண்ட கவிதை!

    ReplyDelete
  5. கரை புரண்ட கவியோட்டம்...

    ReplyDelete
  6. நதியின் துள்ளல் வரிகளில்...

    ReplyDelete
  7. நதி சொல்லும் பாடம்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?