Friday, 2 March 2012

இப்படிக்கு






நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…

எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே!

எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!

-

5 comments:

  1. ஒவ்வொறு வார்த்தையும்

    நேற்று யாரோ ஒருவருடையது..

    இன்று நம்முடையது..

    நாளை யாரே ஒருவருக்கு...

    உண்மை....

    ReplyDelete
  2. அழகான சொல்லாடல்... நிதர்சனம். வாழ்த்துகள் கதிர்.

    ReplyDelete
  3. உண்மைதான் கதிர்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?