சிந்தனையற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
~
மனதால்பேசஎளிதாகயிருக்கிறது விட்டு விடுதலையாதல் போலே. புத்தியால் பேசமலைப்பாகயிருக்கிறது, “என்னவெல்லாம் பேசித்தொலைப்பமோ” எனும் அயர்ச்சியோடு.
~
”கோடியில் அடிச்சவன விட்டுட்டு 5000 ரூவாலஞ்சம்வாங்றவனையா கைதுபண்றது”- பொதுபுத்தி
#5000 கொடுக்க முடியாமத்தானே அவன்புகார்கொடுக்கிறான்.
~
கல்விஎன்றபெயரில் பிள்ளைகள்மேல் ஏவிவிடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்றுபுரிகிறது - இந்தநாடுநாசமாகப் போகப்போகிறது :(
~
எதிர்பாராமல் சந்திக்கும் யாரோஒருவர்தான் நமக்குள் ஏராளமான கேள்விகளை நிரப்பிவிட்டுச் செல்கின்றனர் #வாழ்க்கை விசித்திரமானது!
~
எதிரிகளோடுயிடும் சண்டைகனப்பதில்லை, நண்பர்களுடனான சண்டைபோல்.
~
ஃப்ளெக்ஸ் பேனர்லபளபளனுமின்னுற ’தலை’ங்க, ரெண்டு நாள்கழிச்சு அந்தபேனர்விழும்இடத்தைப் பார்த்தா, பேனரேவெக்காதீங்கனு கும்புடு போடுவாங்க!
~
வீட்டில் ஒட்டடைஅடிக்கவேண்டிய தருணங்களில், உயரமானஆண்களுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது!
~
கொட்டாவி விடும்குழந்தை ஒருகூடைஉறக்கத்தை ஊட்டுகிறது எனக்குள்
~
எழுதத்துவங்கும் வரைவார்த்தைகள் பிடிபடமறுக்கின்றன. எழுதத்துவங்கிய பிறகுவார்த்தைகள் தீரமறுக்கின்றன # நீளமானகட்டுரை :(
~
நிச்சயமாக அரசியலுக்கு வந்தேதீருவேன். என்னையாரும்தடுக்கமுடியாது - வடிவேலு
#ஆமா, இவரவேறஆயிரம்பேருஅணைபோட்டுத் தடுக்குறாங்களாக்கும்!
~
ஞாயிறுமாலைடாஸ்மாக் போகிறவர்கள், மதியம்நன்றாகத் தூங்கி, குளித்து, நல்லதாக உடையுடுத்தி, நெற்றியில் பட்டைதீட்டி கொஞ்சம் பழமாகபோகிறார்கள்.
~
இந்தவிஜய்டிவிக்காரங்க வெச்சிருக்கிற நாலஞ்சு சினிமாபடடிவிடியை புடுங்கிட்டு வந்துடலாமான்னு இருக்கு # திரும்பத் திரும்ப போடுறேநீ! :)
~
"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” தமிழ்கூறும் நல்லுலகில் இதயாருய்யா கண்டுபிடிச்சது #முடியல:)
~
இந்தியாவை ’போலியோ’ இல்லாதநாடாகஉலகசுகாதார நிறுவனம் அறிவித்தது # ஒருவிநாடி’போலிகள்’ இல்லாதநாடுனுபடிச்சு ’ஷாக்’ ஆயிட்டேன். :)
~
எளிதில் கடந்துபோக வேண்டியவைகளை, கடந்துபோக முடியாத 'நோய்மை' மனோபாவத்திற்குள் அடைபட்டுக் கிடக்கின்றோம்.
~
பார்ப்பனக் கூட்டம் நடுங்கவேண்டும் - கருணாநிதி
# அவங்க எல்லார்த்தையும் குளிர்காலத்துல கொடைக்கானல் அனுப்பிடலாம் விடுங்க! :)
~
கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோயாருமேதமிழர்கிடையாது - அன்புமணி.
# அண்ணே குஷ்புஅக்காபேரைச்சேர்க்காம விட்டுட்டீங்க! :)
~
தலைகனத்திருப்பதால்தான் ஆணிஅடிவாங்கிக் கொண்டேயிருக்கிறதோ? #தத்துப்பித்து டவுட்டு :)
~
அன்புவலி(மை)யானது
~
இன்றையிலிருந்து கடைபிடிக்க வேண்டும் எனநினைக்கும் எதுவுமே, அன்றைக்குள்ளாகவே அதன்அடர்த்தியை இழந்துவிடுகின்றது!
~
அவர்களை அவமானப்படுத்த அவர்களிடம் ஒருபோதும் அனுமதிபெறுவதேயில்லை!
~
”எங்கெங்கு எப்போது 'கரண்ட்கட்' செய்யலாம்?” லிஸ்ட்போடும்மின்வாரியம்! # எப்போது கரண்ட்விடலாம்னு
~
எழுதிவிட்டு ENTER தட்டியட்விட்டு’களை’ விட, ”செரிவேணாம்விடு” எனஅழித்தவைகளே அதிகம்!
~
”வாடா போடா” கல்லூரித் தோழனை17 ஆண்டுகள் கழித்து இணையம்வாயிலாக மீட்டு, பேசினோம் பேசினோம் கடந்தகாலம் கரையக்கரையப் பேசினோம் #வாழ்கஇணையம்
~
ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் ஒழிப்போம்னு சத்தியம் செய்து தேமுதிக, மதிமுகஏன்பாமக/ காங்கிரசோ கூடஅடுத்தமுறைஆட்சியமைக்கலாம்
~
அன்புஇகழப்படும் தருணங்கள் கொடிது
~
இனிமே”பெரிய்ய்ய்ய்ய அளவுல” கொள்ளைஅடிக்கிறவங்கதான் தலைப்புச் செய்தியா இருப்பாங்க போல#அரசியல் கொள்ளையர்களுக்கு இதுபொருந்தாது!
~
நம்மைநாமேஏமாற்றுவதைவிட, மற்றவர்கள் ஏமாற்றுவது குறைவுதான்
~
பொய்ஒருக(ளை)லை
~
இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள்
# நல்லவேளை, ஆளுநர்ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!
# நல்லவேளை, ஆளுநர்ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!
~
மனதுக்கு உகந்தவர்களுக்கென ஒருமணத்தைமனமேதக்கவைத்துக்கொள்கிறது!
~
தன்னைவணங்கவரும்பக்தனைச் சமமாகநடத்தும் வரம்கூடகடவுள்களிடம் இருப்பதில்லை
~
மீசை’ஆம்பளசிங்கம்’ங்றஉணர்வைத் தருதாமே - விஜய்டிவி நீயாநானா
#காடுகளில் ஆம்பளசிங்கம் என்னவேலபண்ணுதுன்னு பாருங்க, பொழப்பு நாறிடும் :)
~
எதுசந்தோசம் என்பதில்தான் எல்லாருக்கும் பெருங்குழப்பம்
~
simple and nice post
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDeleteVaazhththa vayathillai - pazhamai kitta anuppi vidunga !
ReplyDeleteKalakkal. :-)
அனைத்தும் அருமை சார்.
ReplyDeletenice to read and think ....
ReplyDeleteஅத்துனையும் அருமை தோழரே....:):)
ReplyDelete//கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(//
அனைத்து பதிவுகளும் எனது உள்மனத்தின் தோன்றிய எண்ணங்களின் நகல் போல் உள்ளது. அருமையான பதிவு
ReplyDelete