Sunday, 1 April 2012

மௌனக்கிளி





மௌனத்திற்கும்,
வார்த்தைக்கும்
இடைப்பட்டிருக்கிறது
யோசனை

~
எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை

~

முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்

--

கோபத்தில்
உமிழ்ந்திடத் தோணுது
கோபத்தையே
உமிழ்ந்து விட்டால்...
~

மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை!

-

6 comments:

  1. /வார்த்தைக் கொய்யாவை!/

    அடங்கொய்யா:)))

    ReplyDelete
  2. வானம்பாடிகள் said...

    /வார்த்தைக் கொய்யாவை!/

    அடங்கொய்யா:)))

    repeatuu

    ReplyDelete
  3. /எத்தனை பேர் இசைத்தும்
    தீர்ந்து போகவில்லை
    இசை/

    அருமை.

    /முதிர்ந்து உதிரும்
    இலைகளில்
    படிந்து கிடக்கிறது
    ஒரு பாடம்/

    நன்று.

    ReplyDelete
  4. u write so well / ur usage of words are so nice. congrats...

    ReplyDelete

இது படிச்சீங்களா?