Thursday, 24 May 2012

கீச்சுகள் - 17




எதையோஜெயித்துவிடத்தான் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால்எதைஎன்றுதான் தெரியவில்லை!

~

ராஜினாமா செய்யநான்ரெடி! நீங்கரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்
#
அண்ணேநான்எட்டாவது பாஸ்ண்ணே!, நீங்கபத்தாவது ஃபெயில்ண்ணே!

~

நடிகையுடனான வீடியோபோலிஎனஅமெரிக்க நிபுணர்களின் ஆய்வறிக்கை சொல்லிவிட்டது - நித்தியானந்தா # ஆப்கானிஸ்தான்ல ஆய்வுபண்ணஆள்கிடைக்கல போல?

~

விசையூட்டிய பெண்டுலம் # மனது 

~

ஒருபுன்னகை, அழுகையாக மாறுவது வெறும்உதடுகளின் சுழிப்புகளில் நிகழும் மாற்றம் மட்டுமல்ல!

~

பயன்பாட்டில் இருப்பதை விட, ஏதோஒருஆர்வத்தில் உருவாக்கி பயன்படுத்தாமலே கிடப்பில் போட்டமின்மடல் முகவரிகள் அதிகம்!

~

உணவுபணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகவெளிநாட்டு முதலீடு - மத்தியஅரசு
#ஆட்சி நடத்துறதையும் அவங்ககிட்டேயே கொடுத்துடலாமே!

~

உறவுகளின் உன்னதத்தை நோய்வாய்க்கும் தருணங்களிலே மனிதர்கள் அடர்த்தியாய் உணர்கின்றனர்.

~

ரயில்வே நிர்வாகத்திற்கும், தமிழகஅரசுக்கும் அதிகவருமானத்தைத் தருபவைசரக்குமட்டுமே!
#சரக்கு ரயில்களே அதிகவருமானத்தை ஈட்டுகின்றன.

~

ஒன்றைரகசியம்எனப்பெயரிடும் போதே, அதுரகசியம் என்பதற்கானகூறுகளைஉதிர்த்துவிடுகிறது!

~

சோம்பேறித்தனம்சிலநேரங்களில்தலைக்கனம்எனவும்மொழிபெயர்க்கப்படுகிறது!

~

பஞ்சம்ஒழிஞ்சா லஞ்சம்ஒழிஞ்சிடும் - விஜயகாந்த் # ’பன்ச்டயலாக்பேசாட்டி உங்களுக்கெல்லாம் நெஞ்சுவெடிச்சுருமோ!

~

காசுஇருக்கும் சமயங்களில் உதவத்தோன்றுவதில்லை, உதவநினைக்கும் சமயங்களில் காசுஇருப்பதில்லை!

~

தனக்கு எல்லாம் தெரியும்என, தானேஒருவன்நினைப்பதுதான், அவனைஒருகட்டத்தில்தானேவிற்குள் தள்ளுகிறது!

~

குரைப்பதை குறைக்கனும்!

~

இடைத்தேர்தல் லட்சியதிமுகஆதரவுயாருக்கும் இல்லை- டி.ராஜேந்தர்
#’பவர்ஸ்டார்கட்சிஆரம்பிக்கிறவரை எல்லாஆதரவையும் அணைகட்டி தேக்கிவைதலைவா

~


செவிஇரண்டும் ஏங்கித்தான் கிடக்கின்றன, எவர்பிரச்சனையையும் எட்டியெட்டிக் கேட்க, சிலநேரம்அக்கறையாகவும், பலநேரம்சுவாரசித்திற்காகவும்!

~

விவசாயநிலத்தில் புதிதாய் அமைக்கப்படும் வீட்டுமனைகளில் பறக்கும் வண்ணக்கொடிகள் வெறும்துணியல்ல, நிலம்விற்றவன் பரம்பரைக்கானகோடித்துணி

~

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்எனஃப்ளெக்ஸ்’ (Flex) பதாகை தாங்கிச்செல்வதை எப்படிநியாயப்படுத்த என்றுதெரியவில்லை!

~

விளைபொருள் / இடுபொருள் வியாபாரி, வேளாண்மந்திரி, மந்திரியின் கட்சியினர் எனஎல்லாம் நல்லாஇருக்காங்க, நல்லதொப்பையோடும் விவசாயி தவிர.

~

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைகால்னு கேக்குறது, சினிமாவுல பறந்துபறந்துசண்டைபோடுறதவிட மோசமானகொலைக்குத்தமா? #டவுட்டு

~

இந்தநொடியைகைக்குள் இறுகப்பிடித்துக்கொள்ள நினைக்கிறேன், அதற்குள் அடுத்தநொடிவந்துவிடுகிறது #நிதர்சனம்!

~

சோம்பேறித்தனத்தைக் கொல்லசோம்பேறித்தனமா இருக்கு!

~

"உண்மை" பெரிதும் சுவாரசியமாக இருக்காது! :)

~

ஆடைகளுக்குள் நிர்வாணம் தான்!

~

சிலநேரங்களில் காற்றாய், சிலநேரங்களில் கல்லாய் #எதுவுமே.

~

தோல்விஎன்பதுஎனக்குநல்லபாடம் - ராகுல்காந்தி
#அய்யய்யோ இன்னும் 5 வருசத்துக்கு இந்தப்பயபுள்ள .பி-யில ஒருவீடுவிடாமபோயிசோறுதிங்குமே

~

மீண்டும் வாய்பாய் அவர்களின் ஆட்சி- பொன்.ராதாகிருஷ்ணன்
#
எப்படிங்ண்ணா, தமிழககாங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சினு டகால்டி விடுறமாதிரியா?

~

பீகார்/ .பி. - ராகுல் காந்திஇருக்கிறவரைக்கும் காங்கிரசுக்கு எதிராஇருக்கிற கட்சிகள் கவலையேபடவேண்டியதில்ல.

~


எல்லாஆளுங்கட்சியும் அடுத்ததேர்தலில் எதிர்கட்சிதான் வெற்றிபெறவேண்டுமென ஐந்துவருசம்ரொம்பமெனக்கெட்டு உழைப்பாங்க போல! #ரொம்பநல்லவங்க

~

தேங்கிக்கிடக்கும் நிலையிலிருந்து இடம்பெயர்வது அவசரமானது, அவசியமானது.

~

லவ்யூசொல்லுங்கள்மனஅழுத்தம் பறந்துபோகும்- தட்ஸ்தமிழ்
#இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பரணகளமாக்காம விடமாட்டீங்க போல! :)

~

நமக்குமுன்னால போறநாலுபேர் பதட்டமா வண்டிஓட்டுறதப் பார்க்கும்போதுதான் புரியுதுதிங்கட்கிழமை காலைஎல்லோருக்கும் பொதுவானதுஎன்பது

~

தி.மு.கவின் அடுத்ததலைவர்மு..ஸ்டாலின் தான்- திருமா
அழகிரி: அங்கேஎன்னய்யா சத்தம்!
திருமா: சும்மாபேசிட்டிருந்தோம் மாமா!

~

பள்ளிக்கூடம் இருக்கிற நாள்ல8 மணிக்கு எழுந்திரிக்கிற புள்ளைக, விடுமுறை நாள்லஅஞ்சேமுக்காமணிக்கே எழுந்திரிச்சுக்குறாங்க
#முடியவே முடியல

~

உணர்ச்சி வயமாகமுழங்குவோரைவிட, தெளிவாக பொறுமையாகப் பேசுவோரின் உரையைக் கேட்கவே மனம்விழைகின்றது.

~

மனதில்கருவுற்று விரல்களில் பிரசவம் #கவிதை

~

பெட்ரோல், டீசல்விலையைஉயர்த்தும் திட்டம் இல்லை- அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி
#
இவரைஎப்படிஇன்னும் காங்கிரஸ்ல வெச்சிருக்காங்க!

~

ஸ்லம்டாக் மில்லியனர்அனில்கபூரை விடமொக்கையா நடிக்குதே இந்தசூர்யாபயபுள்ள! #ஒரு5 நிமிசம் நானும்பார்த்து வரலாறுல எடம்புடிச்சிட்டேன்

~

மதுஅருந்தி வாகனம்ஓட்டினால் ரூ.5000 - 10000 வரைஅபராதம்
#
இனிமேடாஸ்மாக்குக்கு வெளியேயும் அரசுக்கு வருமானம். ஒரேகல்லில் ரெண்டுமாங்காய்

~

உடைபடும் நிர்பந்தங்களோடு உருவாகின்றன விதிகள்!

~

நெடுந்தொலைவு தொடர்வண்டியில் தொடங்கிய இடம்முதல், நிறைவடையும் இடம்வரைசெல்பவனின் அனுபவங்கள் விசித்திரம் நிறைந்தாக இருக்கும்.

~

1 comment:

  1. நிலைத்தகவல் பலவற்றை நான் பலமுறை ரசித்ததுண்டு,சில வற்றைப்படித்து உள்ளூர சிரித்ததுண்டு தங்கள் படைப்புகள் மென் மேலும் சிறப்போடு வர எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete

இது படிச்சீங்களா?