Tuesday, 2 April 2013

கீச்சுகள் - 33



எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும்சூப்பர் டூப்பர்கூட்டம். சேர்போட்டு உட்கார வெச்சு, காசு தந்து
# வாடகைத்தொண்டர்கள் வாழும்காலம் இது!

·

8 am, 12 pm, 4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும், அடங்காம எரியுதே.
# என்னா வெயில்டா சாமீ:-(

·

ஒற்றைப் பறவை
வானில் அளக்கிறது
உறவுப் பறவைகளின்
பயணப்படா தொலைவினை.

·

கம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னுசொல்லியிருப்பாங்களோ!?

·

கர்நாடக பாஜக சட்டசபைஆளுக எல்லாம்சேலம் சித்தவைத்திய சாலையில்கணக்கு வெச்சிருக்காங்களோ? அடிக்கடி இதேவேலையா திரியறாங்க!

·

பிள்ளைகளை அவர்களின்வயது, வளர்ச்சியைவிடக்குறைவாக அன்பெனும்பெயரால்(!) “குழந்தைத்தனமாகநடத்தமுயல்வதும் குற்றமே!

·

பிள்ளைகளின் வளர்ச்சி, வயதைப் பொருட்படுத்தாமல், அன்பென்ற பெயரில், அவர்களின் நிலைக்குகுறைவாககுழந்தைகளாகபாவிப்பதும் ஒருவகைகுற்றம்தான்!

·

கார் வாங்க வீடுதேடிவந்து லோன்தந்துட்டு, மாடுவாங்க லோன்தர யோசிக்கிறசமூகத்தில்தான் காபிக்குவாங்குற பால்விலை அதிகம்னுகவலைப்படுறோம்

·

எத்தனை ரிதமாய் ஊதினாலும், அவசர ஊர்தியின்சங்கொலியை ஒருபோதும்ரசிக்க முடிவதில்லை!

·

சனிக்கிழமை பள்ளிக்கூடம்வெச்சுட்டாங்களாம், இந்தகுட் ஃப்ரைடேசனிக்கிழமை வந்திருக்கக்கூடாதானுகேலண்டரை திட்டுதுஎங்க வீட்டுவாண்டு!

·

 “அங்கே 2 மணிநேரம் மட்டும்தான்பவர் கட்டா?” எனக் கேட்கும்ஊர்களைப் பார்த்துசென்னைபோடாவெண்ணைஎன்கிறது.

·

ஆரம்பிக்கும் தருணத்தில்முடிவு தெரிவதில்லை. முடிவுறும் தருணத்தில்ஆரம்பம் நினைவில்இருப்பதில்லை!

·

மனசும் ஓர் இசைக்கருவியே!

·

இந்த தினத்தின் முதல்ரகசிய முடிச்சுஅவிழ்ப்பு 'விடியல்'

·

வெளுத்துப்போற மசுருக்குசாயம் பூசுறதுலகாட்டும் அவசரத்தை/ கவனத்தை, உளுத்துப்போறமனசைப் பாதுகாக்கஒருபோதும் காட்டுவதேயில்லை!

·

உண்மை என்பதையும் விட, ஓங்கிக் குரல்கொடுப்பவனையே உலகம்உடனே திரும்பிப்பார்க்கிறது!

·

6.54க்கு போன கரண்ட்7.18க்கே வந்துடுறதா? பொறுப்பில்லா EBக்குகடும் கண்டனங்கள்!
# நடுசாமத்துலபுடுங்கினா மட்டும்பொறுப்புல குறைச்சலில்லை

·

அரசியல்வாதி - பொதுஜனத்திற்குஇடையே இருக்கும்இடைவெளிக்கு நிகரானதொருஇடைவெளி, சமூகவலைதளஆட்கள் - அதில்இல்லாதோர் இடையேநிலவுகிறது.

·

சமையல் அறையில் கரித்துணிகாணாம போறதுக்கெல்லாம்CBI விசாரிக்க மாட்டாங்கஎன்பதைப் புரியவைக்கமுடியாத தருணங்களைக்கொண்டதும்தான் வாழ்க்கை!

·

7 ரூபா போட்டு ஒருகிளாஸ் மொக்கை(!) ”டீகுடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒருசொம்பு கம்மங்கூழ்தாராளமா குடிக்கலாம்!
#புத்திக்கொள்முதல்

·

வாழ்தல் இனிது. வாழ்தல்அறம். வாழ்வுதவம்.

·

குடும்பமா கிளம்பும்போது கார்டயர் பன்ச்சராஇருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும். #இடுக்கண் --> நகுக

·

ரொம்ப வருசங்களுக்குப் பிறகுநடு சாமத்தில்தண்ணீர் பிடிக்கும்மக்கள். #அதுவும்மார்ச் மாசமே:-(




போராடி மட்டும் என்னவாகிடப்போகிறது என்கிறீர்கள்நீங்கள்!
போராடாமல் மட்டும்என்னவாகிடப்போகிறது என்கிறார்கள்அவர்கள்!

·

இன்று பெட்ரோல் விலைரூ.2 குறைகிறது- செய்தி # இதுக்கும்பழக்கதோசத்துல இப்பவேபோய் க்யூலநின்னுடுவாங்களே!

·

எல்லாமுமே ஒருவிடைபெறுதலின் வரைதான்!

·

குழந்தைகள் கடைப்பிடிக்கும்மௌனத்தில் பொதிந்திருக்கும்கோபம் உலகின்அதி வலிமைமிகுகோபம்

·

எதிரி விரும்புவதைச் செய்வதைவிடசெய்யாமலே இருப்பதும்வீரம்!

·

இயலாமையின் முதற்கட்டம்…. கோபம், இறுதிக்கட்டம்….. சபித்தல்!

·

அழுகையும் சிரிப்புபோன்ற ஒருவெளிப்பாடுதானே! அழுகைக்குஏன் இத்தனைஒளிவு மறைவுதேவைப்படுகிறது!

·

மூனு பெக்-லிருந்துநாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப்பதில் இரண்டோடுஎழுந்துவிடுவதுதான் வீரம்!

·

8 மணிக்கு போக வேண்டியகரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துலநா.சா. கம்பெனிக்காரங்க கரண்ட்எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?

·

Mobile, SMS, Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோஎல்லோருக்குமிடையே, எனினும்மௌனமே பேசுகிறதுபல உறவுகளில்

·

மனிதன் அதிகமாக அஞ்சும்ஒரு சகஉயிரினம்மனிதன்

·

அறிமுகங்கள் முடிந்து, ஆர்வங்கள் பகிர்ந்து, எல்லாம் கரைந்தஒரு நற்பொழுதில்(!) எளிதாய் ஆரம்பிக்கிறார்கள்பொறணிபேச!

·

உள்ளங்காலில் ஒருகொசு கடித்துக்கொண்டிருக்கிறது. ரொம்பவும்பஞ்சத்தில் அடிபட்டகொசு போல! :)

·

"அதெல்லாம் டைவர்ஸ்ஆயிருச்சுங்க" வெகு சகஜமாக புழங்குகிறதுகிராமங்களிலும்.

·

கெடா விருந்துக்குக்குஅழைக்கப்பட்டிருக்கும் தினம்ஆசிர்வதிக்கப்பட்ட தினமாஇல்லையா!? நீங்களேசொல்லுங்க!

·

காலையில் சமையலறையில் கூடமாடஒத்தாசை செய்தால், அன்றைக்கு மதியசோறு கூடுதல்சுவையாய் இருக்கின்றது#அனுபவதானிப்பு

·

சுமக்க முடியாததை ஏன்இறக்கி வைக்கக்கூடாது?

·

குடிஆரம்பத்தில் சுவாரஸ்யம், பின்னர் அதுபழக்கம், ஒருகட்டத்திற்குப் பிறகுஅது நோய்!



நமக்கு நாமே தரக்கூடியஎளிய பரிசுமௌனம்

·

நான் ஒன்னு கேட்டாதப்பா நினைச்சுக்கமாட்டீங்களே!?” எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க ஏதோஒன்று இருக்கவேசெய்கின்றது!

 ·

இதென்னடாது காலண்டர்லபிப்ரவரி 28ம்தேதிய கிழிச்சா, மார்ச் ஒன்னாம் தேதி வருது. #நடுவுல கொஞ்சம்தேதியக் காணோம்

-


3 comments:

  1. "அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவு மறைவு தேவைப்படுகிறது!" - நல்ல கேள்வி! ஏன் என்றால் அழுகை ஒரு மனிதனின் பலவீனம் என்று சமூகத்தால் பார்க்கப்படுகிறது! இது என் அனுபவம்! அனைத்து கீச்சுக்களும் நன்று!

    ReplyDelete
  2. 'மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடு எழுந்துவிடுவதுதான் வீரம்! '


    எப்டி அண்ணே . .

    இப்டி எல்லாம் . . .




    அனைத்தும் அருமை

    ReplyDelete

இது படிச்சீங்களா?