எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும்சூப்பர் டூப்பர்கூட்டம். சேர்போட்டு உட்கார வெச்சு, காசு தந்து
# வாடகைத்தொண்டர்கள் வாழும்காலம் இது!
·
8 am, 12 pm, 4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும், அடங்காம எரியுதே.
# என்னா வெயில்டா சாமீ:-(
·
ஒற்றைப் பறவை
வானில் அளக்கிறது
உறவுப் பறவைகளின்
பயணப்படா தொலைவினை.
·
கம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னுசொல்லியிருப்பாங்களோ!?
·
கர்நாடக பாஜக சட்டசபைஆளுக எல்லாம்சேலம் சித்தவைத்திய சாலையில்கணக்கு வெச்சிருக்காங்களோ? அடிக்கடி இதேவேலையா திரியறாங்க!
·
பிள்ளைகளை அவர்களின்வயது, வளர்ச்சியைவிடக்குறைவாக அன்பெனும்பெயரால்(!) “குழந்தைத்தனமாக” நடத்தமுயல்வதும் குற்றமே!
·
பிள்ளைகளின் வளர்ச்சி, வயதைப் பொருட்படுத்தாமல், அன்பென்ற பெயரில், அவர்களின் நிலைக்குகுறைவாக ’குழந்தைகளாக’ பாவிப்பதும் ஒருவகைகுற்றம்தான்!
·
கார் வாங்க வீடுதேடிவந்து லோன்தந்துட்டு, மாடுவாங்க லோன்தர யோசிக்கிறசமூகத்தில்தான் காபிக்குவாங்குற பால்விலை அதிகம்னுகவலைப்படுறோம்
·
எத்தனை ரிதமாய் ஊதினாலும், அவசர ஊர்தியின்சங்கொலியை ஒருபோதும்ரசிக்க முடிவதில்லை!
·
சனிக்கிழமை பள்ளிக்கூடம்வெச்சுட்டாங்களாம், இந்த”குட் ஃப்ரைடே” சனிக்கிழமை வந்திருக்கக்கூடாதானுகேலண்டரை திட்டுதுஎங்க வீட்டுவாண்டு!
·
“அங்கே 2 மணிநேரம் மட்டும்தான்பவர் கட்டா?” எனக் கேட்கும்ஊர்களைப் பார்த்துசென்னை ”போடாவெண்ணை” என்கிறது.
·
ஆரம்பிக்கும் தருணத்தில்முடிவு தெரிவதில்லை. முடிவுறும் தருணத்தில்ஆரம்பம் நினைவில்இருப்பதில்லை!
·
மனசும் ஓர் இசைக்கருவியே!
·
இந்த தினத்தின் முதல்ரகசிய முடிச்சுஅவிழ்ப்பு 'விடியல்'
·
வெளுத்துப்போற மசுருக்குசாயம் பூசுறதுலகாட்டும் அவசரத்தை/ கவனத்தை, உளுத்துப்போறமனசைப் பாதுகாக்கஒருபோதும் காட்டுவதேயில்லை!
·
உண்மை என்பதையும் விட, ஓங்கிக் குரல்கொடுப்பவனையே உலகம்உடனே திரும்பிப்பார்க்கிறது!
·
6.54க்கு போன கரண்ட்7.18க்கே வந்துடுறதா? பொறுப்பில்லா EBக்குகடும் கண்டனங்கள்!
# நடுசாமத்துலபுடுங்கினா மட்டும்பொறுப்புல குறைச்சலில்லை
·
அரசியல்வாதி - பொதுஜனத்திற்குஇடையே இருக்கும்இடைவெளிக்கு நிகரானதொருஇடைவெளி, சமூகவலைதளஆட்கள் - அதில்இல்லாதோர் இடையேநிலவுகிறது.
·
சமையல் அறையில் கரித்துணிகாணாம போறதுக்கெல்லாம்CBI விசாரிக்க மாட்டாங்கஎன்பதைப் புரியவைக்கமுடியாத தருணங்களைக்கொண்டதும்தான் வாழ்க்கை!
·
7 ரூபா போட்டு ஒருகிளாஸ் மொக்கை(!) ”டீ”யகுடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒருசொம்பு கம்மங்கூழ்தாராளமா குடிக்கலாம்!
#புத்திக்கொள்முதல்
·
வாழ்தல் இனிது. வாழ்தல்அறம். வாழ்வுதவம்.
·
குடும்பமா கிளம்பும்போது கார்டயர் பன்ச்சராஇருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும். #இடுக்கண் --> நகுக
·
ரொம்ப வருசங்களுக்குப் பிறகுநடு சாமத்தில்தண்ணீர் பிடிக்கும்மக்கள். #அதுவும்மார்ச் மாசமே:-(
போராடி மட்டும் என்னவாகிடப்போகிறது என்கிறீர்கள்நீங்கள்!
போராடாமல் மட்டும்என்னவாகிடப்போகிறது என்கிறார்கள்அவர்கள்!
·
இன்று பெட்ரோல் விலைரூ.2 குறைகிறது- செய்தி # இதுக்கும்பழக்கதோசத்துல இப்பவேபோய் க்யூலநின்னுடுவாங்களே!
·
எல்லாமுமே ஒருவிடைபெறுதலின் வரைதான்!
·
குழந்தைகள் கடைப்பிடிக்கும்மௌனத்தில் பொதிந்திருக்கும்கோபம் உலகின்அதி வலிமைமிகுகோபம்
·
எதிரி விரும்புவதைச் செய்வதைவிடசெய்யாமலே இருப்பதும்வீரம்!
·
இயலாமையின் முதற்கட்டம்…. கோபம், இறுதிக்கட்டம்….. சபித்தல்!
·
அழுகையும் சிரிப்புபோன்ற ஒருவெளிப்பாடுதானே! அழுகைக்குஏன் இத்தனைஒளிவு மறைவுதேவைப்படுகிறது!
·
மூனு பெக்-லிருந்துநாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப்பதில் இரண்டோடுஎழுந்துவிடுவதுதான் வீரம்!
·
8 மணிக்கு போக வேண்டியகரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துலநா.சா. கம்பெனிக்காரங்க கரண்ட்எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?
·
Mobile, SMS, Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோஎல்லோருக்குமிடையே, எனினும்மௌனமே பேசுகிறதுபல உறவுகளில்
·
மனிதன் அதிகமாக அஞ்சும்ஒரு சகஉயிரினம் “மனிதன்”
·
அறிமுகங்கள் முடிந்து, ஆர்வங்கள் பகிர்ந்து, எல்லாம் கரைந்தஒரு நற்பொழுதில்(!) எளிதாய் ஆரம்பிக்கிறார்கள்’பொறணி’ பேச!
·
உள்ளங்காலில் ஒருகொசு கடித்துக்கொண்டிருக்கிறது. ரொம்பவும்பஞ்சத்தில் அடிபட்டகொசு போல! :)
·
"அதெல்லாம் டைவர்ஸ்ஆயிருச்சுங்க" வெகு சகஜமாக புழங்குகிறதுகிராமங்களிலும்.
·
”கெடா விருந்து”க்குக்குஅழைக்கப்பட்டிருக்கும் தினம்ஆசிர்வதிக்கப்பட்ட தினமாஇல்லையா!? நீங்களேசொல்லுங்க!
·
காலையில் சமையலறையில் கூடமாடஒத்தாசை செய்தால், அன்றைக்கு மதியசோறு கூடுதல்சுவையாய் இருக்கின்றது#அனுபவதானிப்பு
·
சுமக்க முடியாததை ஏன்இறக்கி வைக்கக்கூடாது?
·
”குடி” ஆரம்பத்தில் சுவாரஸ்யம், பின்னர் அதுபழக்கம், ஒருகட்டத்திற்குப் பிறகுஅது நோய்!
நமக்கு நாமே தரக்கூடியஎளிய பரிசு“மௌனம்”
·
”நான் ஒன்னு கேட்டாதப்பா நினைச்சுக்கமாட்டீங்களே!?” எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க ஏதோஒன்று இருக்கவேசெய்கின்றது!
·
இதென்னடாது காலண்டர்லபிப்ரவரி 28ம்தேதிய கிழிச்சா, மார்ச் ஒன்னாம் தேதி வருது. #நடுவுல கொஞ்சம்தேதியக் காணோம்
-


"அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவு மறைவு தேவைப்படுகிறது!" - நல்ல கேள்வி! ஏன் என்றால் அழுகை ஒரு மனிதனின் பலவீனம் என்று சமூகத்தால் பார்க்கப்படுகிறது! இது என் அனுபவம்! அனைத்து கீச்சுக்களும் நன்று!
ReplyDelete'மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடு எழுந்துவிடுவதுதான் வீரம்! '
ReplyDeleteஎப்டி அண்ணே . .
இப்டி எல்லாம் . . .
அனைத்தும் அருமை
சூப்பரப்பு
ReplyDelete