Wednesday, 29 May 2013

இரவு







இரவின் அழுக்கை

விடியவிடிய வெளுத்ததில்

வெளுக்கிறது கீழ்வானம்



-



நீண்டு பயணிக்கும் இரவு

தான் விரும்பும் ஒரு கணத்தில்

பகல்மீது தடம் புரளலாம்



-



இரவில் நனையும் தினம்

பகலில் காயும்

வேறொன்றும் புதிதில்லை



-



ஏகாந்தமாய்

விளையும் இரவில்
எவர் பசி தீரும்



-


6 comments:

  1. எதிர் பதிவு இங்கே


    http://vivasaayi.blogspot.com/2013/05/blog-post_29.html

    இந்த முறை கவிதை குடி, குடித்தனமில்லாம போட்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. அன்பின் கதிர் - இரவு கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. இப்போதெல்லாம் பகலும் நனையுது -
    மக்களின் வேர்வையால் .

    ReplyDelete

இது படிச்சீங்களா?