Saturday, 1 June 2013

கீச்சுகள் - 35


பச்சிளம்குழந்தைகள் கொடும்நோயில் வதைபடுகையில்புரிகிறது கற்பிதமானகடவுள் எத்தனைகருணையற்றவன் என்பது.


-
24 hrs கரண்ட்வெச்சுக்கிட்டு, ”எப்பபோகுமோ, எப்பவருமோனுஒருத்ரில் இல்லாமஎப்படித்தான் சென்னைமக்கள் வாழுறாங்களோ!



-



நெடுஞ்சாலைகளில்ட்ரைவர் கண்டக்டர்ஓசியில் தின்பதற்காகநிறுத்தப்படும் உணவங்களுக்கென்றேஸ்பெஷல்கேவலமானஅரிசி, பருப்பு எங்கோவிளையுதுபோல!



-



சுத்துதேசுத்துதே பூமி.... அதைவிட வேகமாசுத்துதே IRCTC.... இதுபோதுமடா போதுமடாசாமி....



-



பிள்ளைகளைசம்மர் கோச்சிங்கிளாஸ்க்குஅனுப்பும் பெற்றோர்களுக்குபிற்காலத்தில் நரகத்தில்சம்மர் கோச்சிங்கிளாஸ்நடந்தாலும்நடக்கலாம்!



-



சம்மர்கோச்சிங் கிளாஸைகண்டுபிடித்தவர்கள்சூனியக்கார கிழவிகளின்நவீன வார்ப்புகள்!



-


 IRCTCயை, அணு விஞ்ஞானியைத் திட்டினவங்களுக்குரயில்ல ஸ்லீப்பர்ல1-8 (or) 65-72க்குள்பர்த் ஒதுக்கிபாடம் கத்துக்கொடுக்கிறாங்க#அவஸ்தைதானிப்பு



-



திருக்குறளைப்பின்பற்றாத, தமிழைப்படிக்க விரும்பாதநமக்கு என்னவெங்காயத்துக்கு திருவள்ளுவர்சிலையும், தமிழன்னைசிலையும்!



-



வயசுக்குவந்த பொண்ணுகபடிக்கிற பள்ளிக்கூடத்துலகழிவறை கட்டிக்கொடுக்கிறதவிட்டுட்டு அவுகதிருவள்ளுவருக்கு சிலைனாஇவுக தமிழன்னைக்குசிலை



-



ஏசிகுளிரில் தூங்கியவீடுகளிலெல்லாம் EB மீட்டர்கணக்கெடுக்கும் தினமன்றுசேர்த்து வைத்துக்கொதிக்கிறது!



-



இலைகளுக்குள்மறைந்து கூவும்குயிலுக்குத் தெரியாது, அதன் குரல்என் உயிரைவருடிக் கொண்டிருப்பது.



-



நாம்மற்றவர்களிடம் கோபித்துக்கொள்வதைஅன்பென்றும், நம்மிடம்மற்றவர்கள் கோபித்துக்கொள்வதை வம்பென்றும்நினைக்கும் வியாதிக்குப்பெயரென்ன?



-





தவழ்ந்துநகர்ந்து கடந்துவிழுந்து முயன்றுஎழுந்தவனிடம்தான் சொல்கிறார்கள்ஓடு”!



-



உலகத்தில்அதிகப்படியானவர்களின்நிறைவேறிடாத கனவுபிற்காலத்தில் பஸ்ட்ரைவர்ஆகமுடியாமல் போனதுதான்! :)



-



சொந்தசெலவில் சூனியம்வைத்துக்கொள்பவர்களாலும்சூழ்ந்தது இவ்வுலகு



-


வறுத்தகடலை பொரிக்குநிகரான காம்பினேசன்இன்னும் கண்டுபிடிக்கப்படல.



-



பெரும்பாலானதீர்ப்புகள் மனதால்எழுதப்படுகின்றன.



-



எந்தவரலாறுகளையும் அறியாதஒரு அவசரமலட்டுச் சமூகத்தைஎதை நோக்கிவளர்த்தெடுக்கிறோமென்றுதெரியவில்லை!



-



பார்த்தவுடன்எழுந்து நிற்பதைமரியாதைனு மொதமொதகண்டுபிடிச்ச விஞ்ஞானியாரா இருப்பாங்க!



-



எவனொருவன்தன்னைஎளியவன்என உரத்துச்சொல்கிறானோ, அவன்எளியவனாக இருக்கவிரும்பியிருக்கவில்லையென்றுஅர்த்தம்!



-



தயக்கங்களைஉடைக்கத் தயங்குவதிலேயேவாழ்க்கை தயங்கித்தயங்கிநடக்கிறது!



-



சிரிக்கிறதுக்குஎதுக்கு லாஜிக். #நீசிரிடா மாப்ள!



-



இன்றைக்குவந்த மழைக்குநன்றி சொல்லமறந்துவிட்டேன். அதனாலென்னபயபுள்ளைக்கு நன்றிஅவசியம் வேணும்னாநாளைக்கு வந்துவாங்கிக்கட்டுமே!



-


வேரைத்தேடவேண்டிய அவசியம்நீருக்கு இல்லை. நீரைத் தேடும்அவசியம் வேருக்குஉண்டு.



-



நதிகளுக்கும், கடல்களுக்கும் நாம்வெவ்வேறு பெயர்சூட்டியிருந்தாலும், நதிகளுக்குத் தெரியும்ஆகாயமும் கடலும்ஒவ்வொன்றுதான் என!



-



கோபத்தில்கத்தி, எழுபத்திசொச்சவார்த்தைகளைச் செலவுசெய்வதைவிடஇதுசரியில்ல, நான்கோபமாயிருக்கேன்எனச்சிக்கனமாய் சொல்வதுசிரமம்தான்



-



கடந்த2 முறை ஆளும்கட்சியைத் தீர்மானிப்பதில்குழம்பிய கர்நாடகாவாக்காளர்கள், இந்தமுறை எதிர்க்கட்சியைத்தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!



-



எல்லாத்தையும்தள்ளி வெச்சுட்டு'ம்ம்ம்....இப்போஎதுக்காக இதெல்லாம்' என யோசிக்கும்தன்மை வரம்.



-



சொல்லிவிடக்கூடியபொய்களைச் சுமப்பதைவிட, சொல்ல முடியாதஉண்மைகளைச் சுமப்பதும்கொடிது!



-



மணல்அள்ளப்பட்டதைக் கண்டும்காணாமலும் இருந்ததன்பலன்களையும், பாவங்களையும்இந்த வறட்சியில்தான்அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்#வறட்சி நல்லது!



-





ஜெயித்தவனிடம்கேளுங்கள், மறவாமல்தோற்றவனிடமும் கேளுங்கள். ஜெயிப்பது எவ்வளவுகடினம் என்பதைக்கட்டாயம் சொல்வான்.



-



மச்சி பிசியானு SMS அனுப்பிச்சான் ஒரு நல்லவன்

எதோ அவசரத்துக்கு கேட்கிறான்னு. ”இல்லடா சொல்லுனு அனுப்பினேன்.

இல்ல நான் பிசியா இருக்கேன். நீ வெட்டியா இருக்கியானு பார்த்தேன்கிறான்...

நம்ம மாண்புமிகு அமைச்சர் நாசா-வை விட்டு அவனை 15 நாள் கடிக்க வைக்கலாம்னு இருக்கேன்!



-



எழுதுவதற்குகாகிதமும் பேனாவுமோ, கணினி மென்பொருளும்விசைப்பலகையுமோ போதாது. இசைவான மனதும், சூழலும் தேவையோதேவை!



-



ஒன்பதுகிரகங்களின் உச்சம்பெற்ற ஓருவனுக்குமட்டுமே உச்சியைப்பிளக்கும் வெயிலில்ஊரில் உள்ளஎல்லா சிக்னல்களிலும்சிவப்பு எரியும்.



-



பகல்பயணத்தில் ஓடும்பேருந்தில், அதிர்ந்துகொண்டேவிழித்து விழித்துஉறங்குவதும் ஒருசுகமே!



-



முதுமையில்பணம் என்பதைவிடசட்டெனத் தழுவும்மரணம் முக்கியம்!

.^.

5 comments:

  1. அனைததும் ரசனைக்குரியதே....

    மீண்டும் ஒருமுறை மொத்தமாக வாசித்தாயிற்று...

    ReplyDelete
  2. அடுத்தவருக்கு அவசர படாமல் சிந்திக்கும் மனது தனக்கு என்றும் வரும்போது குழப்புமே ஒரு குழப்பு, வெறும் மெறுமை மட்டுமே மிஞ்சும் அந்த நேரங்களில்.....

    இரசித்தேன், வாழ்த்துகள்

    ReplyDelete
  3. என்னேரமும் யோசனை தானா
    கதிர்

    ReplyDelete
  4. Nice to ready all-together, and especially this: பெரும்பாலான தீர்ப்புகள் மனதால் எழுதப்படுகின்றன.a very true sayings...
    Do cont.,

    ReplyDelete

இது படிச்சீங்களா?