Monday, 10 June 2013

கீச்சுகள் - 36




உலர்ந்தும்உலரா கூந்தலில்மல்லிகைச்சரம் புரளகாலை பரபரப்பில்சாலை கடக்கும்பூவையர் உலகிற்குஏதோ ஒருகவிதையை உதிர்த்துவிட்டுப்போகிறார்கள்

-

தேவையானதைசெயல்படுத்துவதை விட, தேவையற்றதைத் தடுக்கத்தான்கூடுதல் மனவலிமை தேவைப்படுகிறது!

-

எனக்கொருஉண்மை தெரிஞ்சாவனும்இப்ப....... ”இந்ததிருவள்ளுவர் எழுத்தாளரா?”

-

திருவள்ளுவர்மரபணு வழிவந்த யாரோஒருத்தன்தான் ட்விட்டரைஉருவாக்கிட்விட்ருவள்ளுவர்களைஉருவாக்கியிட்டேருக்கனும்!.

-

காடுகாய்றவிளுக்கு மழவந்தா பரவால்லியே, களத்துல கல்லக்கா, எள்ளுக்கா காயப்போட்டவிளுக்குசித்த வராமயிருந்தாபரவால்லியே! #பல்வகைப்படும்உலகு

-

எதைமுடியாது, இயலாதுஎன செய்யத்தயங்குகிறோமோ, தவிர்க்கநினைக்கிறோமோ, அதைச்செய்யஒரு சூழல்அமைவதுதான் வாழ்க்கையின்ஆகச்சிறந்த விசித்திரம்

-

எழுத்தாளனாகஇருப்பது கூடஎளிது, மனிதனாகஇருப்பதுதான் சிரமம்!

-



சன்னல்வழியே உலகைப்பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல்வழியே உலகம்பார்ப்பதையறியாமலே!

-


நன்றிசொல்கையில், நட்பின்அதிபிரியத்தில்நன்றிஎதுக்குனுமறுப்பவர்களிடம் நன்றியைஎப்படிச்சொல்ல? #ஹெல்ப்மீ திருவள்ளுவரே!


-

குறைவானதூக்கம், அதிகமானதுக்கம் - சமூகத்தின்பொது நோயாகப்பரவிக்கொண்டிருக்கிறது!

-

மரம்வளர்ப்போம் எனும்விளம்பரப் பலகையைமரத்தில் ஆணியடித்துமாட்டும் முரண்களுக்குள்தான்வாழ்கிறோம்!

-

ரகசியங்களற்றாலும்தனிமை தவழும்!

-

குழந்தைகளுக்கென்றுஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துசெய்ய நினைக்கும்நமக்கு, ஒருபோதும்குழந்தைகளின் உலகத்திற்குள்செல்ல மனமிருப்பதில்லை

-

கரெண்ட்போயிடுமேங்கிற பயம்குறைத்து, மக்களைஆறஅமர வேலைசெய்யவைத்து சிறிதுசிறிதாகசோம்பேறியாக்கும் EBக்குகண்டனங்கள்
#
திடீர்னு மாறசொன்னா?

-

சூதாடிகளைநாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
ஏமாளிகளிடமிருந்துமட்டும் காப்பாற்றுங்கள்.

-

காற்றின்துணைகொண்டு மண்என்னை அழுக்காக்கியதுமேகத்தின் துணைகொண்டுகாற்று என்னைக்கழுவிப்போனது # வேறயாரு, என்பைக் தான்

-

கடந்துவிட்டபிறகு மனம்ஒப்புக்கொள்கிறதுஇதுகடந்துவிடக் கூடியதாகத்தான்இருந்திருக்கிறதென

-

இப்போதுசெய்துகொண்டிருப்பதைவிடவும், செய்ததும், செய்ய வேண்டியதும்நிறைய இருக்கின்றன.

-

கடலைவெறித்தவாறு காற்றுவாங்கும் பொழுதெல்லாம்சுறா படத்தில்விஜய் பறந்துவந்த காட்சிமனதைக் கொத்துகிறது.

-

மனுசன்லரெண்டே சாதிதான், ஒன்னு திருப்தியில்லைனுசொல்றது, இன்னொன்னுதிருப்தியாயிட்டேனுசொல்றது!

-

இங்கிட்டுஒரு நிகழ்காலமருமகளும், எதிர்காலமருமகளும் பேசிக்கிறாங்கதமிழ் சீரியலைவிட, இந்தி சீரியல்லவர்ற மாமியாருங்கபரவாயில்லையாம்

-

சந்தோசமாகமட்டுமே இருக்கிறஎவரும் அவ்வளவாகதத்துவம் கேட்கிறதுமில்லை, தத்துவம் பேசுறதுமில்லை.

-

நானெல்லாம்எங்கே, எப்படியிருந்திருக்கனும்தெரியுமாஎனப்பெருமை பேசமுற்படும்போதுஇஃகிஃகினுஒன்னு சிரிக்கும்பாருங்க, அதுதான்மனசாட்சி!

-

ஒருபெரும்கூட்டத்தில்சப்தமாகஅண்ணானுகூப்பிடுறதைவிடடேய்னுகூப்பிட்டா நிறையப்பேர்திரும்பிப் பார்க்கிறாங்க!

-

ரோஜாவைகையிலேந்திக்கொண்டுகற்பனையில் மல்லிகைவாசத்தை நுகரமுயற்சிப்பதற்கு(ம்) பெயர்தான்தேவையில்லாதஆணி புடுங்குறது

-

இணையப்பல்கலைக் கழகத்தில்குறைந்த விலைக்குசிறப்பாகபட்டம்வழங்கப்படுகிறது # டம்ளர், வாக்கர், நடுசென்டர், உளுத்தம்பருப்பு, அணில்etc

-

அதற்குகாரணம் எதுவும்இல்லை" என்கிறேன். ஆனால், காரணம்இல்லாமல் இருந்திருக்காது!

-


நான்நீங்களாகவும், நீங்கள்நானாகவும் மாறும்பக்குவம் வரும்வரைக்கும், நான்நானாகவுமே, நீங்கள்நீங்களாகவுமே இருப்பதுதான்நல்லது!

-

எதுவாஇருந்தாலும் நமக்குவந்துடனும்... பெத்தவங்களுக்கோபிள்ளைகளுக்கோ வந்துடக்கூடாதுஎன நினைப்பதும்அன்பின் வலி(மை)



உங்களையாரோ இடைவிடாதுஉற்றுக் கவனிக்கிறார்கள்அந்த யாரோவில்நீங்களும் இருக்கலாம்!

-

நாயைவிடக்கேவலமாக மனிதனைநடத்துகின்றனர் பலர். மனிதனைவிட மேலாகநாயை நடந்துகின்றனர்சிலர். # சிலரின்உலகு அன்பானது!

-

தவிர்க்கமுடியாகடினமான சூழலை, புன்னகையோடு கடந்துபோவோரின்புன்னகையை உற்றுப்பாருங்கள், கொஞ்சம் கண்ணீரும்ரத்தமும் தேங்கியிருக்கும்!

-

கடந்துவரும்பாதையை நாசப்படுத்திக்கொண்டே கடப்பவனுக்குதிரும்பிவர என்னயோக்கிதை இருந்துவிடப்போகிறது!?


-

பிடிக்காமல் போவது பிடிந்திருந்ததற்கும்,  பிடித்திருந்தது பிடிக்காமல் போவதற்கும்....
பிடித்தமாதிரி நடந்துகொண்டதும், பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது போனதும் அல்லது பிடித்ததாய் நினைத்ததும் பிடிக்காமல் போனதாய் நினைப்பதும் காரணமாய் இருக்கலாம்.

-

4 comments:

  1. தலைப்பும் அதற்கு விளக்கமாய்
    ஆழ்மான சிந்தனையுடன் அமைந்த பதிவும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

இது படிச்சீங்களா?