Tuesday, 2 July 2013

நானுமற்ற தனிமை!




எவர் கனவிலோ நான்
என் கனவில் எவரோ
எவர்களில் சில அவர்கள்!

***

ஏக்கமாய் கூவும் குயில்
எப்போதும் அறிவதில்லை
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!

***

உதிர்ந்து கிடக்கும் இறகில்
வரிவரியாய் வாசிக்கிறேன்
உழைப்பின் வரலாற்றை

***

செயல்களில்
உணர்த்திடாத
நேசிப்பையா

கவிதைகளில்
உணர்த்திடப் 
போகிறோம்

***

அவசரத் தேவை
யாருமற்ற தனிமை
அது நானுமற்றதாய்!

***

சுமந்து திரியும் 
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!


-0-

8 comments:

  1. அருமையான கவிதைகள் சார்

    ReplyDelete
  2. ஏக்கப்பிணி ஒரு தொற்றென!// அழகான வரி!

    ReplyDelete
  3. சுமந்து திரியும்
    மௌனங்களை
    எந்த வார்த்தைக்குள்
    இறக்கி வைக்க!//உண்மைதான் முடியாது

    ReplyDelete
  4. அன்பின் கதிர் - கவிதை அருமை - செயல்களீல் உணர்த்த இயலாதவைகளையா நாம் கவிதையில் உணர்த்திடப் போகிறோம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அருமையான கவிதைகள் அண்ணா.

    ReplyDelete
  6. எல்லாக்கவிதைகளுமே அருமை.
    அதுதானே ?
    செயல்களில் உணர்த்த முடியாததையா.

    ReplyDelete

இது படிச்சீங்களா?