நானுமற்ற தனிமை!
எவர் கனவிலோ நான்என் கனவில் எவரோஎவர்களில் சில அவர்கள்!
***
ஏக்கமாய் கூவும் குயில்எப்போதும் அறிவதில்லைஏக்கப்பிணி ஒரு தொற்றென!
***
உதிர்ந்து கிடக்கும் இறகில்வரிவரியாய் வாசிக்கிறேன்உழைப்பின் வரலாற்றை
***
செயல்களில்உணர்த்திடாதநேசிப்பையா
கவிதைகளில்உணர்த்திடப் போகிறோம்
***
அவசரத் தேவையாருமற்ற தனிமைஅது நானுமற்றதாய்!
***
சுமந்து திரியும் மௌனங்களைஎந்த வார்த்தைக்குள்இறக்கி வைக்க!
-0-
Nice!
ReplyDeleteஅருமையான கவிதைகள் சார்
ReplyDeleteஏக்கப்பிணி ஒரு தொற்றென!// அழகான வரி!
ReplyDeleteசுமந்து திரியும்
ReplyDeleteமௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!//உண்மைதான் முடியாது
கவி அருமை
ReplyDeleteஅன்பின் கதிர் - கவிதை அருமை - செயல்களீல் உணர்த்த இயலாதவைகளையா நாம் கவிதையில் உணர்த்திடப் போகிறோம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான கவிதைகள் அண்ணா.
ReplyDeleteஎல்லாக்கவிதைகளுமே அருமை.
ReplyDeleteஅதுதானே ?
செயல்களில் உணர்த்த முடியாததையா.