Wednesday, 14 August 2013

வெட்க ஆறு


புழுதி கிளம்பும் பெருங்காற்றில்
உதிரும் புளியம்பழம் போல்
கொட்டுகிறது முத்தம்

தீராப் பசியோடு
இரை கொத்தும் பறவைபோல்
இதழ்கள் இதழ்களைக் கொத்த

மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்
கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று

அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்

வெட்கச் சொட்டுகளில் நனையும்
அவன் தலையை அவள் துவட்டுகையில்
அவனுள்ளும் ஒரு வெட்க ஆறு!

-

3 comments:

  1. வெட்க ஆறு... காவேரி போல் நிரம்பி ஓடுகிறது...

    ReplyDelete
  2. அருமைான கவிதை...

    -வீரா

    ReplyDelete

இது படிச்சீங்களா?