Wednesday, 25 September 2013

எச்சம் விழுந்த இடம்






வயிறு நிரம்பிய பசியில்
சோர் நடையில்
கண்களை உறுத்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டுச் சில்லறைகள்

குரைத்து மிரட்டும்
நான்காவது வீட்டு நாய்
தண்ணி லாரியில்
சிதைந்த சேதி
சேர்த்த சிற்றமைதி

காமம் தோய்ந்த
வெக்கை இரவினில்
விருப்பமற்றவளை
மனதிற் கொண்ட பொழுது

எங்கிருக்கும்....
கடைசிப் போதி மரத்தின்
பழம் உண்ட
பச்சைக்கிளியின்
எச்சம் விழுந்த இடம்!


-


4 comments:

  1. எங்கிருக்கும்....
    கடைசிப் போதி மரத்தின்
    பழம் உண்ட
    பச்சைக்கிளியின்
    எச்சம் விழுந்த இடம்!\\ அருமை! துன்பம் கடந்த ஒவ்வொரு மனத்திலும் இருக்கும்! :-)

    ReplyDelete
  2. எச்சம் விழுந்த இடம் மீண்டும் போதிமரம் துளிர்க்க வழியாகும்...மீண்டும் புத்தனின் ஜனனம் ... மீண்டும் பயணம் !

    ReplyDelete
  3. எச்சம் விழுந்த இடம் - கலக்கலான கவிதை.
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  4. கவிதை சொல்லவரும் கருத்து என் மூளைக்கு எட்டவில்லை ஐயா.

    ReplyDelete

இது படிச்சீங்களா?